மகத நாடு என்று ஒன்று இருந்தது. ஓர் நாள் அந்த நாட்டின் மன்னன் தன் மகள் சத்தியவதியுடன் வேட்டைக்கு சென்றான். அவர்கள் வழி தவறி ஓர் அடர்ந்த காட்டில் மாட்டிக் கொண்டார்கள். இரவு மரத்தில் இருந்து பார்த்த போது ஓர் சிறிய குடில், மேலும் அதனில் சில மனிதர்களைக் கண்டார். இவர்களிடம் இரவு தொடர்பு வேண்டாம். ஆக நாம் மனிதர்கள் வாழும் பகுதியில் தான் இருக்கிறோம். காலையில் அக்குடிலுக்கு செல்லலாம் என்று நினைத்து மரத்தின் மீதே உறங்கினார்கள். காலையில் அங்கு உள்ளவர்கள் இவர்களைக் கண்டவுடன் சில பழங்களைக் கொடுத்து விட்டு அங்கு உள்ள தபசியை பற்றிக் கூறிச் சென்றார்கள்.
உடனே மன்னனும், அவரது மகளும் அந்த தபசியை வணங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருவரும் அவரது குடில் அருகே காத்திருந்தார்கள். தபசி நெடு நேரம் கழித்து வந்தார். மன்னன் அவரை வணங்கி இந்த காட்டில் தாங்கள் பல காலம் தபம் செய்வதாக அறிந்தேன். ஆகவே தங்களைக் கண்டு வணங்கிச் செல்ல காத்திருக்கிறோம் என்றார். தாங்கள் என்னிடம் ஏதேனும் ஒன்றை கேளுங்கள். தங்களுக்கு ஓர் அறிய பரிசு தர வேண்டும் என்று நினைக்கின்றேன். என்ன வேண்டும் என்றாலும் கேளுங்கள் என்றார். தபசி ஒரு நிமிடம் மன்னனையும், அவரோடு வந்த மகளையும் கண்டார்.
தபசி அந்த பெண்ணைக் கண்டதும், எத்தனை அழகான பெண் இவளோடு ஒரு நிமிடம் வாழ்ந்தால் இத்தனை காலம் தாம் இழந்ததை அடைந்து விடலாம் என்று நினைத்தார். மேலும் இத்தனை காலம் நம் வாழ்வை வீணாக்கிவிட்டோம் என்று நினைத்து தயங்கியவாறு, தங்கள் பெண்ணை தனக்கு மணம் முடித்து தர வேண்டும் என்றார். அவள் எனக்கு பணிவிடை செய்யட்டும் என்றார். உடனே தந்தேன் என்று மன்னன் தன் மகளின் கை பிடித்து தபசியிடம் தந்தார். மன்னன் மகள் சத்தியவதியும் மறுப்பு இன்றி தந்தையை வணங்கி இறைவன் சித்தம், இறைவன் காப்பார் என்ற வார்த்தையைக் கூறி மன்னரை வணங்கி சென்றார்.
மன்னன் மகள் தபசியின் கை பிடித்துக் கொண்டு குடிலுக்குள் சென்றார். நடுங்கும் கரம், இறைவன் பெயரை உச்சரித்த வண்ணம் இருந்தது. தபசி நடுங்கிய கைகளோடு கதவுகளை தாழ் இட்டார். பின்னர் கட்டிலை சரி செய்தார். பின் ஒவ்வொரு ஜன்னலாக மூடினார். அப்போது மன்னனின் மகள் சத்திய வதி, சுவாமி எல்லா ஜன்னல்களையும் முடிவிட்டீர்கள். ஆனால், இறைவனது கண்களை எவ்வாறு மூடுவீர்கள் என்று கேட்டாள். உடனே தபசி அவளது பாதங்களில் விழுந்து வணங்கினார். தாயே எனது கண்களை திறந்துவிட்டாய். இறைவனது கண்களை யாரால் மூட முடியும் என்றார்.
எத்தனை பெரிய தவறை செய்ய நினைத்துவிட்டேன். இறைவன் நம்மை எப்பொழுதும் காண்கிறார் என்ற எண்ணம் இல்லாது போனதே. இறைவன் காண்கிறான் என்றால் யார் தான் தவறு செய்வார்கள். எத்தனை வருட தபம் வீணாக போய் இருக்குமே. எனது தாய் நீயே எனது குரு, என்னை மன்னித்து இப்பிறவிக்காண தண்டனையை தந்து விடு என்று அழுது புலம்பினார். மன்னனிடம் மகளை தந்து இவளே எனது லோக மாதா. இவளை வணங்கியே முக்தி அடைய வாழ்த்துங்கள். என்னை இந்த பிறவியில் காப்பாற்றியது மட்டும் அல்லாது கோபப்படாது, சாபம் தராது என்னை மன்னித்த இந்த தெய்வத்தை இனி தேவியாகவே காண்பேன் என்று அழுதே உயிர் துறந்தார்.
🌹சிவம்மா🌹