ஒருவர் துறவு எடுக்க நினைத்து பல காலம் மனைவியிடம் துறவு கேட்டார். அவரது மனைவி கடன் கடமை முடியட்டும் நானே உங்களுக்கு துறவு தந்து காட்டுக்கு அனுப்புகிறேன் என்றார். மனைவி, முதலில் எனது கடன், எனக்கு பணிவிடை செய்யுங்கள் என்றாள். உடனே மிகவும் சந்தோசமாக அனைத்து வேலையும் செய்தார். சில காலம் போனது. இந்த காலம் முந்தைய காலத்தை விட சிறப்பாக கழிந்தது.  

மீண்டும் துறவு கேட்டான். மனைவி, உங்கள் குழந்தைகளின் கடமை முடித்து செல்லவும் என்றாள். அவனும் மிகவும் சந்தோசமாக உழைத்தான். ஓர் நாள் இருட்டியதும் ஊருக்கு வெளியில் உள்ள கல் மண்டபத்தில் உறங்கச் சென்றான். அங்கு ஓர் சாது இருந்தார். 

சாது இல்லறத்தாரிடம் கேட்டார், இதுவரை யாருக்காக வழ்ந்தாய் என்று. இல்லறத்தான் தன் கதையினைக் கூறினான். சாது உனக்காக என்ன செய்தாய் என்றார். அவரால் ஒன்றும் கூற முடியவில்லை. சரி உனக்கு தபம் செய்ய வேண்டுமாயின் வீட்டை விட்டு ஓடிவிடு அல்லது உன்னை எமன் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று விடுவான் என்றார் சாது. இல்லறத்தான் சாது கூறுவது உண்மையே, எனது வயதும், வலிமையும் போனது. மனைவி தந்திர சாலி, இனியும் அவளிடம் அனுமதி கேட்டால் ஏதேனும் ஒன்றை கேட்டு எனது இளமையையும், வலிமையையும் குறைத்துவிடுவாள். அதனால் அவளைக் காணாது, காணாமல் போவதே மேல் என்று நடந்து வெளியூர் சென்றார். இரண்டு தினங்கள் கழித்த பின் பயணிக்கலாம் என்று அங்கேயே தங்கி விட்டான். இரவுப்பொழுதில் ஓர் பெண் அழுதவண்ணம் அவரருகில் வந்து சுவாமி, கூலி வேலைக்குப் போன என் கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர் எப்போது வருவார். அவர் இல்லாது நாங்கள் இல்லை. அவர் சில காலம் இருந்தால் போதும் குழந்தைகள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவரது கால் கை வலிமை இழக்கும். அவர் ஓர் ஓரமாக இருந்தால் போதும் குழந்தைகள் பார்த்துக் கொள்வார்கள் என்றாள்.

இன்று மன்னன் வரி கட்டுவது முதல், சுகமாய் வாழ்வது முதல் பழகிய பழக்கத்தினை விட முடியாது. அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கூறினால் போதும் என்றாள். மண்டபத்தின் சிறிய விளக்கு ஒளியில் மனைவி முகம் தெரிந்தது. உடனே குரலை மாற்றி தென் திசையில் கணவன் சென்றுள்ளான் என்றார். உடனே சுவாமி, அவர் எங்கள் ஊர் தாண்டி தான் போய் உள்ளார். அவர் மீண்டும் எங்களைத் தாண்டி தான் தென் திசை போய் ஆகனும், வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.

உடனே துறவி நினைத்தான் நல்ல வேலை, நம் தலைவிதியை சரியாகக் கூறிவிட்டாள். இனி நமது வாழ்வும் இவளது கையில் தான். இனி வட திசை பயனமே நலம் என்று காசி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்.

🌹சிவம்மா🌹.

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US