ஓர் துறவி வீட்டை விட்டு ஓடி வந்து ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து தபம் செய்தார். அவரைத் தாண்டி விவசாயம் செய்ய போகும் விவசாயி அவரை வணங்கிச் சென்றான். பின் அவருக்கு உணவு இல்லை என்பதை அறிந்து உணவு எடுத்து வந்தார். அப்படியே ஓர் சிறிய குடிலும் அமைத்துத் தந்தார். அவருக்கு நேரம் இருக்கும் போது எல்லாம் அவரது கௌமீனத்தையும் துவைத்துப் போடுவார். வயலில் நெல் மணி முற்றியது. இதனால் எலிகள் வந்து துறவியின் கௌமீனத்தில் கூடு கட்டி குடித்தனம் நடத்த துணியை எடுத்துச் சென்றது. குடியானவனுக்கு கோபம் வந்தது. எலி செய்தவேலையைப் பார் சாமி, எலி வராது இருக்க என்ன செய்கிறேன் பார் என்று ஓர் பூனையை எடுத்து வந்தார்.
மறுநாள் குடியானவனிடம் அந்த பூனை இரவு முழுவதும் பால் இன்றி கத்தியது என்றார் சாது. உடனே குடியானவன் வீட்டுக்கு போய் ஓர் மாட்டை எடுத்து வந்து குடிலில் கட்டினார். சாமி காலை மாலை இருவேளையும் மாட்டை நான் பார்த்துக் கொள்கிறேன் கவலை வேண்டாம் என்றான் குடியானவன். தாங்கள் தபத்தை தொடரலாம் என்றான்.
சில நாட்கள் கழித்து குடியானவன் விதை நெல் விற்க பட்டினம் போகிறேன் சாமி. எனவே மாட்டை பார்த்துக் கொள்ள ஓர் பெண்ணை விட்டு செல்கிறேன் சாமி.
நாளை காலை வரும் பொழுது அந்த பெண்ணோடு வருகிறேன். ஊர் தப்பா பேசும்னு நினைக்காதீங்க. ஓர் மஞ்ச கயிறை கட்டிவிடுங்க, தங்களை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்றார். சாதுவும் சரி என்றார்.
குடியானவன் சென்றதும், சாது குடிலில் மாட்டை கட்டி விட்டு துறந்தது எல்லாம் சேர்ந்துவிட்டு என்று எழுதி வைத்து விட்டு இரவோடு இரவாக ஊரை விட்டு காட்டை நோக்கி நிக்காது ஓடினார்.
🌹சிவம்மா🌹