யோகி ஞானத்தை எங்கு பெறுகிறார்கள்.
(ஞானத்தை புதைக்க முடியாது, ஞானத்தை வெளியிட மட்டுமே முடியும்.) அதை பெறக் கூடியவர்கள், கொஞ்சம் அறிவாளிகள், தேடல் உடையவர்கள்.
(ஞானத்தை அறிந்து தேடுபவன் அறிந்தும் ஞானத்தை அறிகிறான்.)
ஞானத்தை புதைக்கும் இடம் மனிதனே. ஞானப்புதையல் இருக்கும் இடம் குரு என்னும் சிவ இருப்பிடமே.
ஞானம் வெளியிடும் உணர்வுகளை அனுபவிக்க நினைக்கிறவன் காடு மலை தேடி ஓடுகிறான். தனிமையில் ஞான உணர்வுகள் இறை உணர்வுகளாக மாற்றி அதில் திளைத்து அனுபவிக்கிறான்.
காரணம் மலைகளின் உயரங்கள் அமைதி, சுத்தமான காற்று, பிரபஞ்ச தொடர்புக்கான சக்திகளை உடையதாக இருப்பதால் அவனது யோகம் தியானமாகவும், தியானம் தபமாகவும் மாறும். சக்தி கலமான மலைகளின் உயரங்களும், இடமும் அவனுக்கு ஓர் உதவி செய்கின்றது.
ஞானப்புதையல் மட்டும் மனிதனுக்குள் பல ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் இருந்தாலும், மெய் தேடல்கள் இருந்தால் இறைவனது அருளால் எத்தனை இறை அனுபூதியையும் பெற்று விடுவான்.
எங்கே போனாலும் நாம் அங்கு அமைதியாக இருந்து விட வேண்டும். ஏனெனில் அது பல தரப்பட்ட மனிதர்களை, யோகிகளை, தபசிகளைக் கண்டுள்ளது. அந்த காற்றும், மலையும் ஆயிரம் கதைகள் பேசும்.
பிரபஞ்ச தொடர்பு இருந்தால் தான் அந்த காற்றும் மலையும் பேசுவதை நாம் அறிய முடியும். கடவுளின் அணு ஆற்றல் எங்கு எல்லாம் ஊடுறுவியும் மீதம் உள்ளது என்பதை அறிந்தால் நாம் அந்த ஞானத்தை பெறலாம்.
ஞானத்தைப் பெற்றவர்கள் அனைவரும் அதை எழுதி வைத்து விட்டே சென்றார்கள். அந்த ஞானத்தை இறைபசி உள்ளவர்கள் பெறுகிறார்கள்.
ஞானியானவன் தனக்குக் கிடைத்த ஞானத்தை ஏடுகளில் எழுதி வைத்து விட்டு செல்கிறான்.
ஞானத்தை பெறாதவன் ஞானத்தை அடைய மலை, காடுகளைத் தேடி ஓடுகிறான்.
ஞானம் இல்லாதவன் இறைவனை அடைய நினைக்கும் பொழுது மௌனித்து விடுகிறான்.
முக்கியமாக ஞானத்தை புதைக்க முடியாது.
ஞானத்தை விதைக்க முடியும்.
பகவத்கீதை போன்ற நூல்கள் ஞானத்தை பொதிந்து வைத்து உள்ளது.
ஞானம் என்பது ஓர் அட்சய பாத்திரம், அள்ள அள்ள குறைவது இல்லை.
🌹சிவம்மா🌹