கிரிவலத்தின் போது சிவத்தின் ஆயிரம் போற்றியை துதி செய்து கிரிவலம் வாருங்கள். இந்த நாமத்தை படிக்க முடியாதவர்கள் ஒருவர் முன் உரைக்க பின் வருபவர்கள் போற்றி சொல்லி கிரிவலம் வாருங்கள். பௌர்ணமி நாட்களில் தான் கிரிவலம் வர வேண்டும் என்று இல்லை, எல்லா நாட்களிலும் இறைவனை தரிசித்து கிரிவலம் வரலாம். அருணாசலத்தின் இறைவன் அருவமாகவும், அருஉருவமாகவும் உருவமாகவும் உள்ளார். எல்லா நாட்களும் கிலிவலத்திற்கு உகந்த நாட்களே, பௌர்ணமி அல்லாத மற்ற நாட்களில் அருணாச்சல மண்ணில் கால் வைத்து மலை, கோயில்கோபுரம், நிலவு மூன்றையும் தரிசித்து ஆயிரம் துதியை சொன்னாலே போதும் (கிரிவலம் வர முடியாதவர்கள்) மனமுரகிச்சொல்ல கிரிவலப்பலனை பெறலாம். மனதால் மலை, கோபுரம், நிலவு, ஜீவசமாதி, சிவனடியார்கள் நினைவில் கொண்டு துதி செய்து மானசீகமாக மூன்றுமுறை வலம் வாருங்கள் (கிரிவலம் சுற்ற முடியாதவர்களுக்கு மட்டும்).
இது மெய்ஞான பூமி என்பதை மறவாதீர்கள். உலகிலே இதுபோன்ற இடம் ஒன்றுமில்லை. கயிலையில் கூட தரிசனம் மட்டுமே. மகான்களை சென்று பார்ப்பது தரிசனம் தான். அதுபோல் கயிலையில் பார்ப்பதும் தரிசனம் தான். கயிலாயம் என்பது பூலோக கயிலாயம்தான். நாம் வான் கயிலாயம் செல்ல வழிகாட்டி (முக்தி தருவது) திருவண்ணாமலை மட்டுமே. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலையே. யோக கனலாகிய ஆக்ஞை, அனாகதம், மணிபூரகம் முன்றையும் சேர்த்துக் கூட்டி, மூட்டும் தீயில்தான் அமிர்தம் சமைக்கப்படுகிறது. அந்த அமிர்தம் சஹஸ்ர தளத்தில் ஊற்றெடுக்க செய்து நாம் உண்ண வேண்டும். இதை உண்டு வாழ்பவர்கள் உள்ளொளி பெருகி சிவ ஜோதியாகி, கபால உச்சியின் வழியாக மெய்வாசல் திறந்து இறைவனை அடைவர். யோகம் என்னும் ஜூவன் முதிர்ச்சி அடைந்து ஜீவமுக்தி நிலையை அடைகிறது. இதன் விளைவால் அமிர்தம் விலகி கபால வாசல் திறக்கும். உச்சியின் இந்த வாசலே (கயிலாய வாழ் சிவபதிநின்) மூல வாசல் என்பார்கள். இதை சிவபதம் என்பார்கள், அதாவது முக்த நிலையை. பதம் என்றால் பக்குவம். உடலும், மனமும் பக்குவப்பட்டு சித்தித்து சிவத்துடன் இரண்டரகலக்கிறது. அருணாச்சலம் ஒரு யோக பூமி, ஒரு கர்ம பூமி, சித்த பூமி, ஞான பூமி, போகம் தரும் பூமி, சித்தர்கள் பூமி, ஜோதி பூமி, சிவனடியார்கள் பூமி, மாயையின் வெற்றியான மயான பூமி, ஜீவ சத்தெடுக்கும் தவ பூமி, முக்தியின் வழிதேடும் ஜீவமணபூமி, ஆயர் கலைஞனின் தப பூமி, ஆகாய தர்ஷன் பூமி, பூமியின் பெருமையை சொல்ல இயலாது ஒப்புயர்வில்லா அருணாச்சலத்தின் (கயிலாயமாக காட்சியை பனிகாலமாக பனி காலத்தின்) வெண்பனி மூடிய மலையே கயிலாயமாக காட்சி தரும். சூரிய உதயத்தில் பொன்மலையாக காட்சி தரும். இங்கு விண்ணவர்கள் கூடி தொழுகின்ற நிகழ்ச்சி பனிமூடிய நேரங்களில் நடைபெறுகிறது. இங்கு மட்டும் கிருஷ்ணபட்சி அண்ணாமலை கோபுரத்தை வலம் வருவதை அதிகாலையில் காணலாம். சித்தர்கள் பட்சியாக மூலகோபுரத்தை வலம் வருவதையும் காணலாம். ஈடு இணையற்ற அருணாச்சலத்தைப் போற்ற உடல், மனம், புத்தி உருகி துதி செய்து, இறைவனை சிந்தையில் குடி கொள்ளச் செய்யுங்கள்.