சத்தியோகம்
சக்தி என்பது ஒருவகையான பலம் ஆகும். சக்தி உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு மாறுவது உண்டு. சக்தியை இரண்டாக பிரிக்கலாம்
1.நல் உடலால் வரும் சக்தி
நல் உணர்வால் வரும் சக்தி
நல் காற்றால் வரும் சக்தி
2.நல் பயபக்தியால் வரும் சக்தி
இதில் மனிதனுக்கு என்று தனிசக்தி உண்டு. அதுவே குண்டலினி
சக்தியாகும். இந்த சக்தியிலும் இரண்டு வகை உண்டு ஒன்று
மஹாசக்தியான குண்டலினி. மற்றொன்று சிவசக்தியாகும்.
குண்டலினி சக்தியோகம் என்பர். இந்த சக்தி ஒவ்வொரு உயிரினத்திலும் உண்டு. முதுகு தண்டு உள்ள எல்லாப் பிராணிகளுக்கும் குண்டலினி உண்டு இவளே சக்தி யோகத்தின் இறைவி. யோகத்தில் நாம் திழைத்தால்இ- இவளை நாம் அறியலாம். ஒவ்வொரு நாளும் நம்முள் இருந்து சிவத்தை அடையவே முயல்கிறாள். யோகம் செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் குண்டலினி சக்தி நடை பெறும். தூய சிவதொண்டு சிரத்தை பரவைராக்கியத்துடன் குண்டலினியை இயக்குபவர்களுக்கு சக்தி யோகம் நடைபெறும். இந்த சக்தி ஆண் பெண் இருவருக்கும் மாறும். இந்த சக்தி பக்திஇ பயபக்திஇ லயபக்திஇ தபபக்திக்கு ஏற்றவாறு மாறும்.
பெண்சக்தி
ஒவ்வொரு ஆணுக்குப் பின் ஒரு பெண் இருப்பாள் என்பது பழமொழி. ஆனால் யோக சாரத்தின் உட்கருத்தை யாரும் அறிவது இல்லை. ஆண் பெண் இருவருக்கும் பின் உள்ள முதுகு தண்டில் குண்டலினி தாய் உள்ளாள். இவளையே சூட்சுமமாக குறிக்கவே ஒவ்வொரு ஆணுக்கு பின்னும் ஒரு பெண் உள்ளாள் இ மறைமுகப் பொருளாக உணர்வோம்.
1. குண்டலினி சக்தி
குண்டலினி சக்தி, உயிர்இ காற்று சரிசமமாக உள்ளது. இந்த மூன்றும் சேர்ந்து ஒன்றாக இயங்குகிறது. அதுவே ஆன்மா எனப்படும். இந்த ஆன்மா ஜீவனில் இருக்கும் போது ஜுவ ஆன்மா எனப்படும். ஜுவசக்தியை பரசக்தியாக்குவது தான் மஹா வித்தையாகும். உடலில் மூச்சுக் காற்று நின்றால் – குண்டலினி சக்தி நின்று விடும். குண்டலினி சக்தி நின்று விட்டால் உயிர் நின்று விடும்.
யோகவலிமை
யோக வலிமை என்பதன் பொருள் யோக பலன் ஆகும். யோக வலிமை என்பதன் மற்ற மறைமுகப்பொருள் உண்டு. யோக வலிமை அர்த்தம் உண்டு – யோக வலி + மை யோகம் ஒருமை படுத்தப்பட்ட ஒரு பொருள். வலி(உணர்வு) ஒரு வகையான உணர்வு.
மை நடுப்பகுதி
பத்திரகிரியார் உணர்வின் வெளிப்பாடு -தம் பாட்டில் வெளிப்படுத்துகிறார். தம் தாயை தழுவி. நிற்பது எக்காலம். தாயாகி மஹாசக்தி நம்முள் மூண்டு எழும். அதன் வலியோ வலியது ஆகும். வலியின் வலிமையை அறிய வேண்டும். இந்தவலியை யோகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
குரு சிஷ்யர்களில் சிஷ்யர்கள் அறிந்ததே இந்த யோக வலியானது.
1 அனாதகத்தில் இருந்தே உடல் முழுவதும் பரவும்.
2 வலி (மை)என்றும் மையத்தில் இருந்தே வலி ஏற்படும். இவ்வலியானது—நாடி மூலம் வலி மேல் எழுந்து வரும். இவ்வலியை உணர்வு பூர்வமாக உணர்ந்து. அதையே தியானத்தால் – நாடியில் இருந்து வலியோடு, அக்னி மூட்டு மேல் எழுந்து, சகஸ்ரதலம் தொட்டு உடல் முழுவதும் பரவும். இந்த வலியை தபமாகச் செய்யலாம். இந்த வலியை வலிமையாக்கி நாம் வெல்லும் தன்மையை அடையலாம்
பக்திக்கு அருணை
பிரியங்கி யோகம
பூசுவன எல்லாம்இ பூசிப் புலர்த்திய வாசநறுங் குழல் மாலையும் சாத்தி காய்க் குழலி கலலியொடுங் கலந்து ஊசித் துளை உறங்காது போகமே.
சிவ யோகம்
தியானம்
அன்பின் வடிவம்- நம்மை செதுக்கும் அற்புத ஆயுத யுக்தியே- தியானம். அன்பின் வடிவமாக நாம் மாறிய பின் உலகிற்கு ஆயுதமே தேவையில்லை. அன்பினால் ஆகாதது எதுவும் இல்லை. அன்பே பெருமையை தரவல்லது. எங்கும் தாழ்மை என்னும் தன்னடக்கம் உள்ளதே. அங்கு அன்பு மிளிரும் அன்பில் பண்பு கலந்து இருக்குமாயின் அல்லல் இல்லையே. அன்பில் கருணை கலந்து இருக்குமாயின் பிறருக்கு துன்பமில்லை. அன்பில் அறிவு கலந்து இருக்குமாயின் கஷ்டம் என்பது இல்லை. அன்பில் ஞானம் கலந்தால் தெய்வம் தேட வேண்டியதுமில்லை. மெய்யை மெய் அறியும் போது நீயே தெய்வம் ஆகிறாய். இந்நிலையை அறிய வேண்டுமாயின் தியானம் பழகு மெல்ல மெல்ல உன்னில் மாற்றங்கள் மலரும். மனம் மலரும் போது தெய்வீகம் என்னும் வாசம் வீசும். தியானம் ஒரு அற்புதமான கலையாகும். இந்த தியானத்தையும் மென்மையிலும் மென்மையாக பயன் படுத்த வேண்டும். தியானத்தில் தீய எண்ணங்களை மாற்றும் போது செயல் எல்லாம் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
தியானம் திகட்டாத பரம் பொருள். அப்பொருள் அன்பின் தன்மையால் ஆனது தியானத்தை அன்பாலே மேலும் மேலும் மலரச் செய்யலாம.
அறிவு
அறிவு என்பது அறிந்து கொள்ளும் ஆற்றலையே அறிவு என்கிறோம். நாம் எதை அறிய வேண்டும் – எனில் உலகம்இ குடும்பம்இ உன்னையும் அறிய வேண்டும். இந்த மூன்றும் தான் அமைதியை தரும். உலகை நாம் அறிதலும் புரிதலும் குடும்பத்தின் தெளிவை தரும். குடும்பத்தெளிவு தான் உன்னையும் உன்னுள் அமைதி (நிம்மதி) தரும். இந்த மூன்றும் அறிவோடு செயல் படுபவனுக்கே சொந்தமானது. 1.அறிவுள்ளவனிடம் மதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் எல்லாம் சிறந்தவையே. தமக்கும் பிறர்க்கும் நன்மை தருபவையாக இருக்கும். 2.அறிவுள்ளவனிடம் அனுமதிக்கப்படாத விஷயங்கள் கோடி. அந்த பொது அறிவையும் அறிய உதவுவது தியானம் ஆகும்.
மனம் அடங்கும் மார்க்கம்
பலபல தெய்வம் இ பலபல மதம் இபலபல மொழி இ பலபல இனம் இ பலபல மார்க்கங்கள் இருக்கலாம் – ஆனால் கடவுள் என்னும் மூலம் ஒன்றே. கடவுள் என்ற ஒன்றையே பல வாறு ஏற்றி போற்றி பணிந்து வாழ்ந்தனர். ஆனால் கடவுள் என்ற ஒன்றே மெய்இ உண்மைஇ சத்தியம் என்றானது. மெய்யை அறியவே பல மார்க்கம் உருவானது. தத்துவம் பிறந்ததால் மார்க்கம் உருவானது. மார்க்கம் அனைத்தும் உலகின் நன்மையை கருதி உண்மையே போதித்தது. மெய் பொருளை உணர்த்தவே உருவானது. இந்த தத்துவமார்க்கம் அனைத்திற்கும் அடிப்படையான ஒரு உண்மை வெளிப்படையாகவும்இ உள்ளும் புறமுமாகவும் இருந்தது. அந்த அடிப்படை அமைதிஇ சாந்தி என்று ஒன்றையே போதித்தது. இந்த போதனை எக்காலத்திலும் மாறாததாக இருந்தது. இந்த அமைதிஇ சாந்தம்இ சாந்தி என்ற ஒன்றுக்காகவே பல வழிகனை போதித்தாலும்இ அது மன அமைதியை தரவல்லதாக இருந்து. எல்லாம் மனம் அமைதியை அடக்கும் மார்க்கத்தை வழிகாட்டியது. அதுவும் மனித குலத்துக்காகவே இந்த மார்க்கம்.
தியானத்தில் போகம்
தியானத்தால் ஆகாத காரியங்கள் எதுவும் இல்லை. மனதை ஒரு முகப்படுத்தும் போது தான் நடப்பவைகள் எல்லாம் நல்லவைகளாகவும்இ எண்ணங்களுக்கு உட்ப்பட்டும் நடக்கிறது. எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் உண்டு. தியானத்தின் மேன்மை அதை தெளிவோடு புரிதல் வேண்டும். தியானத்தால் நம்மால் லக்இ அதிஷ்டதேவதையும் வரவழைக்கலாம். இந்த அதிஷ்டமும் ஒரு வகை யோகமே. யோகத்தில் வரவழைப்பது எல்லாம் போகமே ஆகும். தபத்தில் வரவழைப்பது இறைவனையே ஆகும். தியானத்தில் நம்முடைய புத்தியால் சாதிக்கும் காரியங்கள் தான் யோகம் ஆகிறது. புத்தியின் வழியில் அடைய நினைக்கும் உலகப் பொருள் எல்லாம் போகமே. தியானத்தில் போகத்தை அடையலாம். இது மிகவும் எளியதும் ஆகும். தியானத்தால் நாம் அடையும் நிலை உலக வாழ்க்கைக்கு தேவையானதுஇ அனைத்தையுமே எமக்கு மெல்ல மெல்ல நிறைவேற்றி தரும். தியானத்தில் நம் பலமும் பலனும் இல்லைஇ தியானசக்தி இறைவனின் பலமும் பலனும் ஆகும். தியானத்தில் எடுக்கும் முடிவு தீர்க்கமான முடிவு. தியான செயல் நல்ல தீர்வுகளை தரும. தியானத்தின் மூலம் செய்யப்படும் அனைத்து செயல்கள் எல்லாம் நம் விதியில் இருந்து மாறுபட்டவைகளாகும்.
தியானபோகம்
உங்கள் எண்ணங்களில் நம்பிக்கையும்இ எண்ணவலிமையும் முறையான பயிற்சியும் இருந்தால் போதும்இ நீங்கள் நினைத்தகாரியம் கை கூடும். உங்கள் எண்ணம் வலிமை மிக்கதாக இருந்தால் போதும் விடாமுயற்சி வெற்றிக்கு வளிகோலும். தியானம் யோகியரின் வரபிரசாதம் ஆகும். நினைத்ததை நினைத்த மாத்திரம் சாதிக்கும் வலிமை தியானத்துக்கு மட்டுமே உண்டு.
தியானத்தில் அமைதி
தியானம் பழக பழக அமைதி குடிகொள்ளும். அமைதியில் தான் அறிவு மிளிரும். அறிவுள்ள இடத்தில் அமைதி அழகுறும. அமைதியுள்ள மனிதனை கண்டவுடன் பிறர் மனம் சாந்தியாகும். எவர் மனம் சாந்தியுடன் இருக்குமோ அவர்களது மனம் அழகானதாக இருக்கும். அமைதியின் இருப்பிடம் தான் தியானம். தியானத்தால் மட்டுமே அமைதியை அடைய முடியும்.
அமைதியில் ஆழ்ந்து இருக்கும் போது தான் ஆண்டவன் வருகிறார். ஆண்டவன் இருப்பிடம் மிக அமைதியான இடம் மட்டுமே. அமைதி மட்டுமே ஆரோக்கியமான மனதை தரமுடியும். ஆரோக்கிய உடலை அடைய அமைதியான மனம் வேண்டும். அமைதியுள்ள இடத்தில் ஆரோக்கியமான மனமும்இ உடலும் இருக்கும். ஆரோக்கிய மனம்இ உடல் இல்லாத வனிடம் கோடிபணம் புகழ் பெண் பொன் எது இருப்பினும் வீணே. ஆரோக்கியம் இல்லாத மனம் உடல் எதையும் அனுபவிக்க முடியாது. அமைதியை அடையும் மார்க்கத்தின் வழியே ஆண்டவனை தரிசிக்கலாம். அமைதியில் ஆண்டவனே அடிமை. அன்பின் வழி தியானம் இறைவனே அடியவராவார்.
ஒன்றை ஒன்றி இருக்க செய்யும் வழியே தியானம். தியானத்தில் மனம்
அடங்கும் மார்க்கம் (வழி) உள்ளது. மனம் அடங்கும் மந்திரம் தந்திரமும் சூட்சுமமான முறையிலேயே சொல்லப்படுகிறது. தியானம் தொடருமானால் அது தபம் ஆகும். தபத்தின் பலன் எல்லை அற்றது. அதுவே எல்லை அற்றதுடன் இணைக்கும். தியானத்தில் முழுமையாக இருக்கும் போது இறைவனுடன் இறைவன் ஆகும் முயற்சியாகும். இம் முயற்சி மட்டுமே மனம் அடங்க வழியை காட்டும். வேறு எந்த மதத்திலும் இல்லாத வழி இந்துமதத்தில் உள்ளது. இம்மதம் இறைவனால் தோற்றி வைக்கப்பட்டதே. தபத்தை இறைவனே மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறார். இதை அறியசெய்ய இறைவனும் தப கோலத்தில் இருக்கிறார். தபம் மட்டுமே மனம் அடங்கும் மார்க்கம் ஆகும். மனம் இறைவனை அடக்கி அடங்கும் மார்க்கம் தபம் மட்டுமே ஆகும்.
அதுவே சிவம்
அதுவே அன்பு
அதுவே சக்தி
அதுவே குரு
குருவே மார்க்கம்
குருவே மார்க்கதரிசி
வெற்றியின் ரகசியம்
ஒவ்வொரு மனிதனின் வாழும் நாட்கள் மிக மகத்துவம் மிக்கதாக இருக்க வேண்டும். அரிதினும் அரிது மானிடராய் பிறப்பது அரிது. அரிதிலும் இனிது ஆரோக்கிய உடலும்இ மனமும். அரிதிலும் பெரிது நாம் சந்தோஷமாக இருந்து பிறரையும் சந்தோஷப்படுத்துவது. அரிதினும் எளிது எளிமையின் இனிமையை அறிவது. அரிதினும் அரியது உள்ளும் புறமும் கோபம் அற்று இருப்பது. அரிதினும் மிகையது புறம் கூறாமை இருப்பது. அரிதினும் அரியது தர்மம் செய்யாதது. இறையது அரிதினும் வலியது தொழில் தர்மம் ஆற்றுவது. பிறரை மன்னித்து மிகையது மறந்து மகிழ்வது. அரிதினும் பிரியாது இருப்பது பெருமையினும் பண்பு.
பிரார்த்த கர்மா
விட்டகுறை தொட்டகுறை. விட்டகுறை என்பதன் பொருள் புரியும் எதை விட்டாயோ அதையே குறையாக சுட்டிக்காட்டப்படுகிறது. தொட்டகுறை எந்த செயல் காரண காரியத்தை நாம் தொடுகிறோமோ அதுவும் குறையானதே என்பதைக் காட்டுகிறது. ஆம் நீ எதை விட்டாய்இ நீ எதை தொட்டாய் உணரவேண்டும். விட்டது – நாம் எங்கு இருந்து வந்தோமோ – அதுயாவும் தொட்ட குறைஇ இப்பூமியில் உள்ள போகத்தையே குறிக்கிறது. எங்கிருந்து வந்தோம்? இங்கு சேரும் காலத்தில் குறைகள் இன்றியே வாழ வேண்டும். இவ்வாறு செயல் படும் செயலுக்கே விட்டகுறை தொட்டகுறை என்ற பொருள் சூசகமானதாகும்.
ஓம் சிவ புவன சாந்தி
ஓம் சகல ஜீவ சாந்தி
ஓம் என மன சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி