பஞ்சாட்சர மந்திரம்
எல்லாம் வல்ல இறைவன் நம்முள்யே தான் இருக்கிறார். எண்ண சுத்தத்தில் தான் இறைவன் தோன்றுகிறார். பஞ்சாட்சரம் சொல்லி இறைவனை உங்களுள் தோற்றுவியுங்கள். ஐந்து எழுத்துக்களை உடையதான மந்திரம் பஞ்ச பூதத்தினால் உள் அடக்கப் படுகிறது மிக அதி சூட்சுமம் தான் மந்திரமே பஞ்சாட்சர மந்திரத்தை அபயக்குரலுடன் அழைக்க அபயக்குரலை கேட்டு இறைவனே அனைத்துமாக வந்து ஆட்கொள்ளுவார்.
ஐந்து எழுத்து மந்திரம் இறைவனின் நாமம் இறைநாமம். இந்த ஐந்து நாமம் இறைவனின் திருநாமத்தில் உயர்ந்தது. உத்தமமான மிக அழகான சுவையான ஈடு இணையற்ற தனித்த தன்னிகர் அற்ற இனிமைமிக்க வலிமையான சொல்லும் நமசிவய ஆகும்.
நமசிவய நாம் சம்சாரப்பந்தத்தில் இருந்து விடுவிக்கும் பிறவிப்பிணி தீர்க்கும் அருமருந்து. இதில் இறைவன் பிறவிப்பிணி தீர்க்கும் வையத்தின் வைத்தியநாதப் பெருமானாகவே இதில் திகழ்கிறார்.
ஐந்து எழுத்து இறைநாமம் புனிதத்திலும் புனிதம் ஆனது. நம் ஜனன மரணத்தை அறுக்கவல்ல அருமருந்து. இம் மந்திரத்தை அருமருந்தாக பயன்படுத்த நமக்கு முதலில் தெரிய வேண்டும். பின்னர் மரணமும் ஜனனமும் அறியசெய்ய முடியும். பஞ்சாட்சரத்தை மந்திரமாகவும் தந்திரமாகவும் பயன்படுத்துகிறார்கள் இறைவனின் நமசிவய இதன் ரத்தின சுருக்கம் சிவ என்பதாகும். பஞ்சாட்சரமாக்கவே மற்ற இறைவன் நாமத்தை நம என்றும்இ பின்னரே சிவய சேர்த்து நமசிவய என்று கூறப்படுகிறது. இறைவன் நாமத்தை சொல்லும் பொழுது நேரடியாக சிவ என்று சொல்லுவது கூடாது. நாமத்தின் முன் நம சேர்த்து நமசிவய எனப்போற்றப்படுகிறது. ஐந்து எழுத்தில் சூட்சுமமாவது சிவயமே. சிவம் என்பது தந்திரம்இ நம் உடலை சிவனுடைய காயமாக மாற்றுவது தான் தபதாகும். இது ஜீவனில் இருந்து சிவமாகுவது. இம் மந்திரத்தை சூட்சுமமாக சொல்ல வேண்டும். ஐந்து எழுத்து மந்திரத்தை மிக சூட்சுமாக சூட்சுமமான இடத்தில் சொல்லவும் சூட்சுமமான இறைவனை தரிசிக்கவோ உணரவோ முடியும். குருமார்கள் மட்டுமே இந்நாமத்தை உபதேசிக்க வேண்டும். இம்மந்திரம் வல்லமை மிக்கதானதாகும். குருமார்களிடம் வாங்குவது என்பதைப்பற்றி இறைவனே உணர்த்தியதுஇ யாதெனில் இறைவன் சிவனே குமரனிடம் சிஷ்யனாக மந்திரத்தை உபதேசமாக பெறும் நிலையை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
சிவயோகியர்களிடமே யோகதீட்சையாக இறைநாமத்தை வாங்க வேண்டும். இறைவனை வயமாக்கி வசியமும் செய்யவல்லதக்க உபயமான உருமந்திரம். இம் மந்திரத்தை உண்மையான உத்தமமான எளிமையான குருமார்களிடம் வாங்குங்கள். இறைவன் சிவபெருமான் அம்மைக்கு உபதேசிக்க அம்மை நந்திக்கு உபதேசிக்க நந்தி திருமூலருக்கு உபதேசிக்கிறார். இந்நிலை உபதேசிக்கும் போது நந்தியம் பெருமான் சிவமாக இருந்து உபதேசித்ததாக கூறினார். இம் மந்திரத்தை குருமூலம் குருவுக்கு நல்லசேவை செய்து தீட்சையாக பெறவேண்டும். சிவமந்திரம் வாங்க தகுதி எது வேண்டும் எனில் நல்லொழுக்கமே மட்டுமே. பஞ்ச மந்திரத்தை பொண்ணும் பொருளும் தந்து படோபகhரமாக வாங்குவதும் தகாதது. சிவமந்திரம் குருமந்திரம் இறைவனின் விருப்பப்படியே தக்க தருணத்தில் தக்க காலத்தில் குருமூலம் உபதேசிக்கப்படுகிறது. நல்ல குணவானுக்கு குருமூலமாக தேடியே சிவமந்திரம் தரப்படும். இதில் இறைவனால் மந்திரம் உபதேசிக்கப்படுவதும் உண்டு. அதாவது இறைவன் அரூபத்தில் இருந்து உருவத்துக்கு வந்து மனிதனுள் சிவமந்திரத்தை உபதேசித்து; செல்வதுண்டு. இவ்வாறு சிவமந்திரம் வாங்குபவர்கள் இறைவன் நினைவிலேயே வாழ்வான் என சிவபெருமானே கூறுகிறார். பஞ்சாட்சரத்தை அருளும் முறையை திருமூலர் மிக துல்லியமாக கூறுகிறார். இம்மந்திரத்தை மூலமந்திரமாகவே சொல்லவும. குருமூலமாகவே மந்திரம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று பக்தனுக்கு மிக தெளிவாக கூறப்படுகிறது.
பஞ்சாட்சரமந்திரத்தை ஒழுக்கம் அற்றவர்கள் கூறிதிரிவார்கள் ; அச்செயலானது அவர்களுக்கு பாவத்தையே தரும். பாவ விமோச்சத்திற்கும் வழிவகுக்கும். தன்பாவத்தை நினைத்து வருந்திஇ இறைநாமமாகிய பஞ்சாட்சத்தை சொல்ல பாவம் மெல்ல மெல்ல நம்மை விட்டு விலகும்.
சிவ பஞ்சாட்சரத்தை உணர்ந்தே ஓத வேண்டும். வெறும் வாய் புலம்பலாக இருக்க கூடாது. உண்மையான ஓழுக்கநெறியில் இருக்கவேண்டும். சிவநெறி தழுவியவனே இம்மந்திரத்தை சொல்ல முழுப்பலனும் பெறுவான். அவரவர் மன நிலைக்கு எற்றவாறு தான் பலன் அளிக்கும். தவறான தீயபழக்கம் தீயசெயல் உடையவர் ஒருவருக்கு அதற்கு ஏற்றவாறுதான் பலன் தரும். பக்தியில் வெகுளியான அறியாமை இ பேதமை அறியாதவன்இ பயபக்தியுடன் உள்ள ஓரு பாமரன் பஞ்சாட்சரத்தை வாங்கினாலும் எல்லாம் அறியும் வாய்பை மெல்ல பெறுவதோடுஇ- எல்லா அனுபவமும் அறிந்ததை புரிந்து கொள்ளும் திறனும் அனுபவிக்கும் நலனும் பெற்று விடுகிறான்.
பஞ்சாட்சரமந்திரத்தை பயபக்தியுடன் தொடர்வீர்களாயின் ஞாபகசக்திஇ கல்வி கற்றதை அறிந்து புதியதை அறிவிக்கும் திறன்இ புதிய கண்டுபிடிப்புகள் போன்ற அதீத பலனகளை அடைய முடியும். பஞ்சாட்சரமந்திரத்தை மந்திரமாக பயன் படுத்த நம்மை முதலில் பரிசுத்தப்படுத்தும். நம் உடல் மனம் புத்திஇ ஒருநிலையுடன் மன சாந்தியை அடையும். நோய் மற்றும் வினைப்பயன்களை அறிந்து அதற்கு ஏற்றவாறு மன பக்குவத்தை தரவல்லது. உங்கள் வேண்டுதல்களான மனைஇ வீடுஇ வாகனம்இ பதினாறு செல்வங்களையும் தரவல்லது. இகம்பர சுகங்களை கேட்டு யாசிப்பவர்கள் உண்டு. அவரவர் கர்மவினை இ நம்பிக்கை பொறுத்து பலன் அடையலாம்.
பஞ்சாட்சர மந்திரத்தை மருந்துக்களுக்கும் பயன் படுத்துவதுண்டு. நவபாசனத்தை மந்திரம் தந்திரம் இருமுறையும் பயன்படுத்தி மணியாக திரட்டுகிறார்கள். சிவனார் மூலிகை பதினெட்டையும் சிவமந்திரத்தை சொல்லி பறித்துஇ எல்லா வியாதிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஜனன மரணத்துக்கும் பயன்படும். அதாவது குழந்தைபிறக்க மரணத்தில் இருந்து விடுபட மருந்தும்இ இறைநாமமும் பயன் படுத்தப்படுகிறது.
பஞ்சாட்சர மந்திரத்தை இறைவனை அடைவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அதாவதும் நாம் எங்கு இருந்து வந்தோமோ அங்கு செல்லவே பயன் படுத்தப்படுகிறது. இறைவன் பிரதிஷ்டை என்றும் இறைவனை எழுந்தருளவும் இறைவனை வரவழைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
காலப் போக்கில் மந்திரம் மாந்திரிகமாகி மனிதர்களிடையே மனிதனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இறைவனை அழைக்கவே மந்திரம் தந்திரமாகப்பயன் படுத்தப்படுகிறது. துஷ்டர்கள் மந்திரத்தை மாந்திரிகமாக்கி பெண்இ பொன் புகழ் போன்ற உலகவியல் போகங்களுக்காக பயன் படுத்துகிறார்கள்.
பஞ்சாட்சரமந்திரத்தால் ஐந்தொழிலும் ஆற்ற முடியும். இதையே சித்தர்கள் தங்கள் மந்திரத்தால் கைவல்யம் ஆக்கி பஞ்சபூதங்களை இயக்கி உலகவியல் விஷயங்களை உலக நன்மைக்காகப் பயன் படுத்துவார்கள். மந்திரத்தை வலிமையாக மாற்றஇ ஜபம் பலகோடி செய்துஇ பின்னர் தபம் 12 முதல் 14 வருடம் செய்து சித்த நிலையை அடைகிறார்கள். 14 வருடம் அசைவற்ற தபநிலையில் தான் மனோன்மணியம் விளைந்து ஆடிஇ கூடி கூத்தனுடன் சேரும் போது சித்தநிலை என்னும் சிவ நிலையை அடைகிறார்கள். அவர்கள் படைத்தல்இ காத்தல்இ அருளல்இ மறைத்தல்இ அழித்தல் என்றும் ஐந்து தொழிலை ஆற்றும் நிலையை பெறுகிறார்கள். படைத்தல் – மச்சமுனி திருநீரால் கேhரக்கரை உருவாக்கினார். காத்தல் – மழைஇ காற்றுஇ புயல் போன்றவற்றிலும் காத்தல் நிகழும். திருஞானசம்பந்தர் சர்ப்பம் தீண்டிய குழந்தையை பிழைக்க வைத்தhர். சித்தர்கள் மற்றும் குரவர்கள் மன்னர்களையும் மக்களையும் காத்து உள்ளனர். பாண்டிய மன்னர் சூழைநோயால் பீடிக்கப்பட்டிருந்தவேளை திருஞானசம்பந்தரால் திருநீற்றுபதிகம் பாடியே சீர் செய்தார். மறைத்தல் – யோகம்இ தபம் இ தெய்வதரிசனங்களுக்கு சித்தர்கள், யோகிகன் தங்களை மறைத்தும் வாழ்ந்து இருக்கிறார்கள். கோயில் கட்டுவதற்காக நரியை பரியாக்கியது.
அழித்தல்- துஷ்ட வேலைகளை செய்யும் போது கோபம் சாபமாகி அழிக்கும் தொழிழையும் செய்தவர்கள் உண்டு. குகை நமசிவாயத்தை பரிசோதிக்க – உயிர் உள்ளவன் இறந்தவனாக சித்தரிக்கஇ குகை நமச்சிவாயம் இறந்தவன் இறந்தவன் என்றுரைக்க – அங்கு அழித்தல் நடைபெறுகிறது.
மந்திரங்கள் எல்லாம் நல்வழிக்காகவே பயன்படுத்தப்படுகிறது. உலகத்தில் உள்ளவர்களுக்கு “சோற்றிலே இருக்கான் சொக்கனாதன்” என்பார்கள். இது வெறும் பேச்சுக்காக அல்லஇ உழைப்பவர்களுக்காக சொல்லப்பட்டது. எவ்வளவு பெரிய அறிவியல் ஆய்வாளராக இருந்தாலும் தன் ஆராய்ச்சிக்கு நவீனத்தைப் பயன்படுத்தினாலும் நாலு மணிநேரத்தில் அவனுக்கு பசிக்கும். 4 மணிநேரத்தில் சோறு என்னும் உணவு அத்தியாவசிய தேவையாகும்.
உழைப்பவன் முதல் சகல உயிர் இனத்துக்கும் பொருந்தும். உழைப்பவனின் உயிர் வாழும் கருப்பொருள் சோறு. ” உணவு இல்லையே ஜெகத்தினை அழிப்போம்” என்றார் பாரதியார். உணவில் உயிர் சத்தாக சோமனாக இறைவனே உள்ளார். இச்சத்து பஞ்சபூதங்களில் உள்ள சத்தால் உருவாக்கப்படுகிறது. இந்த உயிர் சத்தை பஞசபூதங்களுக்கு தருவது பரவிந்தாகும். பரவிந்தின் மாற்று உருவமாக வடிவமைக்கப்பட்டு வந்ததே பஞ்சாட்சரணியாகும்.
பஞ்சமந்திரம் என்பது பஞ்ச அட்சரத்தின் சாராம்சத்தை தெரிவிக்கும். அதன் சக்தியை நாம் பயன் படுத்தினால் மட்டுமே உணரமுடியும். இந்த பஞ்சாட்சரம் பஞ்சமா மஹாபாவத்தை ஒழிக்க வல்ல மந்திரம். இம்மந்திரத்தால் மட்டும் மந்திரகட்டுஇ தந்திரகட்டு சூழ்ச்சிகளில் இருந்து நம்மை நாம் கhத்துக் கொள்ள முடியும். இதில் பஞ்சரணியின் மஹா பெரிய பலன் பஞ்சமகh பாவம் போக்கும்.
சத்குரு அம்மா (குரு தரிசனம் ) நிகழ்வுகள் : திருவண்ணாமலை அன்னதானம் மற்றும் கிரிவல சிவதல வழிபட்டு குழு நடத்துனர்கள் திரு . ரமேஷ் பில்டர் மற்றும் திரு. பரத் (magic bite )
ஓம் சிவ புவன சாந்தி
ஓம் சகல ஜீவ சாந்தி
ஓம் என மன சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி