சிவபெருமானின் அருளைப்பெற படிக்க வேண்டிய சிவமங்களம்

1. ஈடு இல்லா இறையோனே நிகர் இல்லா
சிவத்தோனே சிவமே சிவமங்களம்

2. கரை இல்லா நிலையோனே வரைமுறை இல்லா
சிவத்தோனே சிவமே சிவமங்களம்

3. இகம்பரத்தில் சிவம் இல்லானே சுகம்பரத்தில்
சிவம் நில்லானே சிவமே சிவமங்களம்

4. பரந்த பரத்தில் சிவம் உள்ளானே பந்த பாசத்தில்
நில்லானே சிவமே சிவமங்களம்

5. எதிலும் சிவம் உள்ளானே எதிலும் சிவம்
நில்லானே சிவமே சிவமங்களம்

6. எல்லாம் அழிப்பவன் சிவன் ஆனானேன்
அழிவில்லா சிவ நிலையோனே சிவமே சிவமங்களம்

7. கார்மேக ஈசனே மனசிவ வாசனே கருணை
கொண்ட மனசிவத்தோனே சிவமே சிவமங்களம்

8. தாழ்வு இல்லா நிலையோனே தாழ்ந்தவனுக்கு
சிவம் நிலையோனே சிவமே சிவமங்களம்

9. சிகரமான தலையிலே சகஸ்ரமாக்கி சிவம்
கொண்டானே சிவமே சிவமங்களம்

10. அகரமான ஆண்டவனே அகத்தனுள் சிவமாய்
இருந்தானே சிவமே சிவமங்களம்

11. மகரமான மாயையோனே மர்மமாய் சிவம்
ஆழ்ந்தோனே சிவமே சிவமங்களம்

12. உகரமான உயிரோனே உபயமான உள்
ஒளியோனே சிவமே சிவமங்களம்

13. தக தகக்கும் செங்கனலோனே மறைக்க
முடியாத சிவ நிலையோனே சிவமே சிவமங்களம்

14. உயிருக்கு எல்லாம் சிவம் உயிரோனே உள்
ஆழ்ந்து சிவன் கிடப்போனே சிவமே சிவமங்களம்

15. பரம்பொருள் என்ற சிவ பெயரோனே
இறைபார்த்தவரை காப்போனே சிவமே சிவமங்களம்

16. நிர்மல மனதோனிடம் செம்மையாய் இருப்போனே
சிவன்தான் நினைப்பானே சிவமே சிவமங்களம்

17. தவமாய் தவமிருப்பவரிடம் தவத்தோனே
சிவ வரமாய் வந்தோனே சிவமே சிவமங்களம்

18. சூட்சுமமான சுடரோனே ஆன்மா பிரிவதை
மறைப்போனே சிவமே சிவமங்களம்

19. பிறர் அறியா சிவ இயல்போனே பிறர் அறிய
சிவம் தெரிவானே சிவமே சிவமங்களம்

20. புல் பூண்டில் பிறந்தோனே எதிர்பார்ப்பு
இல்லா சிவபலன் தருவோனே சிவமே சிவமங்களம்

21. காலங்காலமாய் சிவம் நின்றோனே காலம்
மாறியும் சிவபலன் தருவோனே சிவமே சிவமங்களம்;

22. கோடிகோடி உயிர்களுக்கு குறையில்லா காப்போனே
கோடிகோடி சிவ குணத்தோனே சிவமே சிவமங்களம்

23. கோடிகோடி நல்மனத்தோனே கேடில்லாதவனிடம்
சிவம் இருப்போனே சிவமே சிவமங்களம்

24. அன்பு என்ற சிவ சக்திNயானே
சிவ அன்பான சக்தியை தேடுவோனே சிவமே சிவமங்களம்

25. பல்லுயிரில் சிவம் காப்போனே சிவம்
தன்னில் கலக்க எதிர் பார்ப்போனே சிவமே சிவமங்களம்

26. தாயான சிவ தயாபரனே தாயுமான சிவ
நாயகனே சிவமே சிவமங்களம

27. பிறக்காத பரம்பொருளே எம்மை
பிறக்கச்செய்து பிரித்தானே சிவமே சிவமங்களம்

28. கேடு என்றாலும் கேட்டவw;கு தருவோனே
கெடும்போது சிவம் காப்போனே சிவமே சிவமங்களம்

29. ஏழையே யான் ஆனாலும் சிவம் இணைந்தே இருப்போனே
பிரியாதே ஆதி பிரம்மமே சிவமே சிவமங்களம்

30. ஆராய்பவனுக்கு அறிவியல் ஆனானே
ஆய்வில்லாதவனுக்கு சிவ மாயோனே சிவமே சிவமங்களம்

31. த வக்கோலம் சிவன் கொண்டோனே தவத்திரு
சிவ நாயகனே சிவமே சிவமங்களம்

32. தவக்கோலம் கொண்டவன் சிவமேதான் ஆனேன்
சிவமே சிவனானான சிவமே சிவமங்களம்

33. பணம் இல்லாதவரை சிவம் பார்ப்போனே
மனம் பார்க்கும் சிவ மறையோனே சிவமே சிவமங்களம்

34. ஞாபகம் என்று சிவம் வைத்தோனே ஞானமாய்
ஆவதற்கு சிவ ஞானோனே சிவமே சிவமங்களம்

35. பலவினைகள் உன்னுள் இயக்கினேனே
உன்னுள் சிவம் உயிராய் இருப்போனே சிவமே சிவமங்களம்

36. எப்பொருளிலும் சிவம் கலந்தோனே
அப்பொருளை யான் செய்ய முடியாதே சிவமே சிவமங்களம்

37. படைப்பையும் சிவம் மறைத்தானே
இறப்பையும் சிவன் மறைத்தானே சிவமே சிவமங்களம்

38. வாசியை அறியாது சிவம் வைத்தானே
வாசியில் சிவம் வசித்தோனே சிவமே சிவமங்களம்

39. உள் நாவில் சிவம் நடனித்தானே உள் வாசி
சிவவாசியானனே சிவமே சிவமங்களம

40. தேனில் நின்ற இறைசுவையோனே ருசித்தவர்
பலன் சிவனானே சிவமே சிவமங்களம்

41. தவமே தவம் சிவம் ஆனானே தபவாசியில்
நின்றானே சிவமே சிவமங்களம்

42. மாறிய காலத்திலும் சிவம் மறையாதவனே
மணக்கும் பூவிலும் சிவம் நறுமணப்போன சிவமே சிவமங்களம்

43. கவியத்துள் கடவுள் ஆனானே கருத்து
என்னும் சிவ பொருளானானே சிவமே சிவமங்களம்

44. வண்ணங்கள் கொஞ்சும்வானவில்லானானே பிள்ளை களிப்பூட்ட
தன் வண்ணங்காட்டுவானே சிவமே சிவமங்களம

45. உண்மை உரு இல்லானானே உமாபதி
பெயரானே சிவமே சிவமங்களம

46. பிடிக்க முடியா பொருளோனே பிடிபடும் சிவ
மனத்தோனே சிவமே சிவமங்களம்

47. எல்லாம் அவன் செய்வானே மனிதன்
செய்வதை நான் என்பானே சிவமே சிவமங்களம்

48. செய்பவனே செய்யவிடுவானே செய்தபின்
பிடிப்பானே சிவமே சிவமங்களம்

49. மேகத்தால் மூடிக் கொண்டானே கருணையாய்
உன்னில் சிவம் பொழிந்தானே சிவமே சிவமங்களம்

50. உலகப் பொருள் குறைந்தவர்க்கு சிவனானே தன்னில்
கலக்கும் தூரத்தைக் குறைத்தானே சிவமே சிவமங்களம்

51. தபத்தில் தன்னை கரைந்தவர்க்கு கரைந்தானே
கரைந்தவன் சிவ கருணையாளனானே சிவமே சிவமங்களம்

52. சூட்சும பொருள் உணர்ந்து படிப்பவனுக்கு சிவம் அவனே
சூது இல்லா இருப்பவருக்கு அவனே அவனானே சிவமே சிவமங்களம்

53. மின்னும் பொருளில் விலகி நின்றானே
மீளாத மனத்தில் தனித்தோனே சிவமே சிவமங்களம்

54. பேதம் பார்க்காதவனிடம் பேதை அவனே
போதகனே பிறை சூடியோனே சிவமே சிவமங்களம்

55. அணுவுக்கும் படி அளந்தோனே அணுவிலும்
பிரிந்து நின்றானே சிவமே சிவமங்களம்

56. அழிப்பதிலும் அளவு கொண்டோனே
படைப்பதிலும் நிகர் இல்லாதோனே சிவமே சிவமங்களம்

57. படைத்ததை பாதுகாப்போனே படைத்ததையும்
மறைத்து வைப்பானே சிவமே சிவமங்களம்

58. தெளிந்த நிலையில் இருந்தவர்க்கு சிவம் தெரிந்தவனே அறியாது
தேடுபவர்க்கு சிவம் அறியாதவனே சிவமே சிவமங்களம்

59. குருவுக்குள்கோயில் கொண்டு கோடி நன்மை
செய்வானே சிவம் எல்லாம் அவன் சொந்தமே சிவமே சிவமங்களம்

60. மாயை அறுத்தவனுக்கு மறையாது நின்றானே
மாயை அருந்தியவனுக்கு தெரியாது போனானே சிவமே சிவமங்களம்;

61. மன நழுகல் இல்லாதவன் இறையைதான் பிடித்தானே
மன நழுவியவன் மனதால் ஒழிந்தே தான் போனானே சிவமே சிவமங்களம்

62. மனிதனைப் பிடிக்க மாயை ஆசையைப் போட்டானே
ஆசையை பிடித்தவன் மகேசனை மறந்தானே சிவமே சிவமங்களம்

63. பாம்பாட்டிக்காரனின் பாதத்தை காண்பானே பாதத்தை காண்பவன்
பாதாரவிந்தத்தை காண்பானே சிவமே சிவமங்களம்

64. தயாபரனின் அன்பைப்பெற நினைப்போனே
தாயின் பாதத்தை சரணடைவோனே சிவமே சிவமங்களம்

65. சிவ அன்பைப்பெற நினைப்போனே சிவமே
சிவமாக எல்லாம் பார்ப்போனே சிவமே சிவமங்களம்

66. எல்லாம் எல்லாம் படைத்தானே உடல்
கழிவுகளையும் ஏன் வெறுப்பானே சிவமே சிவமங்களம்

67. உயிர் அற்ற உயிரை தகனம் செய்பவனே
உயிரின் சிவனேசன் அவனானே சிவமே சிவமங்களம்

68. எல்லா உயிர் வயோதிகத்தை பாதுகாப்பவனே
சிவபரத்தை அடைவானே சிவமே சிவமங்களம்

69. மனதுக்கு வயது இல்லை என்று அறிந்தோனே
அன்றே மனத்தில் மகேசனைத் தேடுவானே சிவமே சிவமங்களம்

70. ஒவ்வொரு செயலும் இறைசெய்ய நினைப்பானே
அவனே இறை செயலானானே சிவமே சிவமங்களம்

71. மலர்களில் மணக்கின்ற மணமானானே
மாயையில் விழிக்கின்ற உதயமானானேன் சிவமே சிவமங்களம்

72. விதி சூழ்ந்து நின்றாலும் மதியோடு அழைப்போனே
மதித்து வந்து நிற்பானே மதி என்னும் ஈசனே சிவமே சிவமங்களம்

73 . கலங்காத மனதினில் கடவுளாக நின்றோனே
கலங்காமல் எமை கரை சேர்ப்போனே சிவமே சிவமங்களம்

74. காமம் களைந்தால் கடவுள் தெரிவானே காமம்
இல்லாத மனிதன் குருவாக உயர்வானே சிவமே சிவமங்களம்

75. புதுப் புதுப்பொருளைக் கண்டுபிடித்துதருவானே கண்டுபிடித்தது
அவன் என்று மனிதன் அறியானே சிவமே சிவமங்களம்

76. அறிவியல் இயக்கமும்அவனானே ஆராய்பவனுக்கு
புதிதாய் சிவம் புதிராய் தெரிவானே சிவமே சிவமங்களம்;

77. உழைப்போனுக்கு உடையோனே உயர்த்தும்
வெற்றியாளனும் அவன் ஆனானே சிவமே சிவமங்களம்

78. நம்பியோர்க்கு சிவம் நண்பன் ஆனானே
நம்பாதவர்க்கும் சிவம் அருள்வானே சிவமே சிவமங்களம்

79. சக்தியில் சிவம் உயிராய் நின்றானே
ஆத்மாவாய் உடலில் பரவி நின்றானே சிவமே சிவமங்களம்

80. சூழிமுனை சிவச் சுடரனே சூட்சுமமாய் எதிலும்
தெய்வீகம் மனக்காட்சி கண்டோனே சிவமே சிவமங்களம்;

81. மனித ஆட்டத்தை அடக்கி ஆள நினைத்தானே மரணத்தை
தலைவிதியாய் விதைத்தானே சிவமே சிவமங்களம்

82. இறையோனைக் கண்டவன் மண்ணில் விதைக்கப்பட்டானே
காணாதவன் மண்ணில் புதைக்கப்பட்டானே சிவமே சிவமங்களம்

83. உளி முனையில் சிவம் உருவாவானானே
உள்ளத்தில் சிவம் உருகுவானே சிவமே சிவமங்களம்

84. குழந்தை மனத்துடன் கேட்டாலே தருவானே
குழந்தை மன தெய்வமும் அவனானே சிவமே சிவமங்களம்

85. தீச்சுடரில் சிவ ஒளியானானே தீண்டினால்
சிவம் சுடுவானானே சிவமே சிவமங்களம்

86. உலகமே சிவம் அவனானானே எல்லா
உள்ளமும் சிவனானே சிவமே சிவமங்களம்

87. உலக ஓசையும் சிவனானானே ஆசையும்
சிவனானானே சிவமே சிவமங்களம்

88. நல்லதும் சிவனானானே கெட்டதும் சிவனானே
இதை அறிந்தவன் தெளிவானே சிவமே சிவமங்களம்

89. என் செயல் பாவத்திற்கும் காரணம் யானேஆனேனே என் பாவத்தை
பங்கு போட இறைவன் விரும்பத்தான் மாட்டானே சிவமே சிவமங்களம்;

90. நேரத்திற்கு தேரைக்கும் படி அளப்போனே படைப்பின்
வெற்றியாளனும் சிவனானே சிவமே சிவமங்களம்

91. உலகமே உயிர்தெழ வைத்தானே பிராணனாய்
பிறந்து தவழ்ந்தானே சிவமே சிவமங்களம்

92. கோபத்தில் சிவம்; மறைந்தானே தவபப்பலனை
குறைப்பானேன் சிவமே சிவமங்களம்

93. ஆறு நிலையில் நிறுத்திவைப்பானே ஏழு
நிலையில் வெளிவந்தானே சிவமே சிவமங்களம்

94. தெய்வநிலை அடைய பல பரீட்சை செய்தானே பரீட்சை முடியும்
முன் சிவம் பரீட்சையம் ஆனானே சிவமே சிவமங்களம்

95. பல லட்சத்தில் ஒருவனை சிவம் உயர்த்தியே காண்பானே லட்சம் பேர்
முயன்றாலும் அவன் தகுதியை தனித்துப்பார்ப்பானே சிவமே சிவமங்களம்

96. உலக ஆசைவிட்டாலே சிவனானானே உலக
மகா சித்தை தருவானே சிவமே சிவமங்களம்

97. சித்தம் எல்லாம் அவனானானே உலக மகா
சித்தை தருவானே சிவமே சிவமங்களம்

98. நல்திறமை கண்டு சிவம் ஓடி வந்தானே
தீமையைக் கண்டு சிவம் விலகி நின்றானே சிவமே சிவமங்களம்

99. எண்ணங்களில் ஓட்டத்தை சிவம் தந்தானே
எல்லாம் கடந்தவர் என்னுள் நின்றார் சிவமே சிவமங்களம்

100. இறைபாட்டில் கலந்து சிவம் வந்தானே நரன்
ஏற்பான் அவனே சிவனாக சிவமே சிவமங்களம்

101. நாடெல்லாம் பல உருவம் கொண்டோனே
சூத்திரதாரி இறைவன் ஒருவனே சிவமே சிவமங்களம்

102. பல வண்ணங்களில் மனிதனை படைத்தானே
எங்கும்நிறைந்திருப்பவனை காணானே சிவமே சிவமங்களம்
103. சுகங்களை பல படைத்தானே அந்த சுகத்துக்கு
நரன் தவறு செய்தானே சிவமே சிவமங்களம்

104. வருங்காலம் என்ன என்று நரன் அறியானேன்
அவன் ஆண்டவனைத் தேடி சென்றானே சிவமே சிவமங்களம்

105. குறையை மன்னித்தவனுக்கு மன்னித்தானே
தவத்தை தந்து உதவி செய்தானே சிவமே சிவமங்களம்

106. மந்திரம், பொருள் அறிந்தவர்க்கு சிவம்
நமசிவயம் உள்நாவில் இருப்பானே சிவமே சிவமங்களம்

107. ஈசன் என்ற அல்லா, ஏசு உருமாறினானே
இறைவன் என்ற சொல்லில் உன் ஒன்றானே சிவமே சிவமங்களம்

108. அருணாச்சலனே ஆண்டவன் ஆனானே அனைத்தையும்
படைத்தவனே ஆதிசிவன் அவர்தானே சிவமே சிவமங்களம்

:
ஓம் சிவ புவன சாந்தி
ஓம் சகல ஜீவ சாந்தி
ஓம் என மன சாந்தி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Share this:

Leave a comment

[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US