அன்னதானம் உலகிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக்கூற காரணம் என்ன?

சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரம வெளியீடு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள்  தானங்களில் சிறந்தது அன்னதானம். அண்ணாமலையில் செய்யப்படும் அன்னதானம் உலகிலேயே  மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

 அண்ணாமலையில் மட்டுமே உண்ணாமுலை தாய் உண்ண முடியாத அளவில், மலையளவு தானத்தை செய்கிறாள். அண்ணாமலை மட்டும் தான் இவ்வுலகின் அட்சய பாத்திரம் ஆகும். ஆம் சகல உயிர்களுக்கும் படி அளக்கும் அம்பிகை இங்கு உள்ளார். அண்ணாமலையில், உண்ணாமுலை தாய் அன்னம் இடுவார், தந்தை யாசிப்பார் அதாவது ஈஸ்வரன் பிச்சை எடுப்பார். அண்ணாமலையில் அன்னம் பாலிக்கும் போது இறைவனே வந்து அன்னம் பெறுவார் என்பதால் அன்னத்தை நமசிவய என்று சொல்லியே தானம் வழங்குவர். அண்ணாமலையில் இடப்படும் அன்னம் தானம் செய்யும் போது அன்னம் அள்ள அள்ள குறைவது இல்லை. அண்ணாமலையாரை நினைத்து சிவனடியார்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் நமது முக்திக்கு வழி வகுக்கும்.  அண்ணாமலையார் மட்டும் யோகத்தில் இருப்பவர்களுக்கு ஈடு இனணயில்லாத இறை ஞானத்தை பிச்சையாக இடுகிறார்.

அண்ணாமலையாரைக் காண கார்த்திகை  தீபத்திருநாள் அன்று பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். அண்ணாமலையாரை காண வரும் அடியவர்களுக்கு பசிப்பிணியை போக்க மலையை சுற்றி அன்னதானம் வழங்கப்படும். அண்ணாமலையாரைக் காண பல நாடுகளில் இருந்து எல்லாம் காண வருகிறார்கள். அண்ணாமலையில் மட்டுமே வரும் சிவனடியார்களுக்கு சிவ அமுதாக, இறைவனது நாமத்தையே அன்னமாக  சிவபக்தர்கள் அனைவருக்கும்  வழங்கப்படும். பெரிய உணவகங்கள் முதல் தெரு ஓரங்களில் உள்ள சிற்றுண்டி கடைகள் வரை அனைவராலும் வரும் பல லட்சம் பக்தர்களுக்கு முழுமையாக உணவு வழங்க முடியாது. கிரிவலப்பாதையில் ஒவ்வொரு 20 அடி தூரத்திற்கும் ஒருவர் ஒருவராய் அன்னதானம் செய்வார்கள். அண்ணாமலையின் அனைத்து இடங்களிலும் வித விதமாக அன்னதானம் வழங்குவார்கள்

அண்ணாமலையில் அன்னதானத்தில் பங்கு எடுத்துக் கொள்வதற்கு குலதெய்வம் மற்றும் எந்த ஒரு சிறு தெய்வங்களும் தடையாக இருக்காது. தன் குல தெய்வம் யார் என்று தெரியாதவர்கள்  அண்ணாமலையாரையே தன் குலதெய்வமாகக் கொண்டு அன்னம் வழங்கலாம். அண்ணாமலைக்குச் செல்ல பெரும் பாக்கியம் வேண்டும். அது உங்கள் விதியில் எழுதியிருக்க வேண்டும். அண்ணாமலையில் தொடர்ந்து அன்னதானம் செய்ய அங்குள்ள பூதகணங்கள் சம்மதிக்க வேண்டும் .விதியுடன் மதி மற்றும்  குருவின் போதனையும், வழிகாட்டுதலும் இருத்தல் வேண்டும்.அண்ணாமலையில் உங்கள் தானம் ஏற்புடையதாக இருந்தால் மெய் அன்பரகளுடன் இணைந்து தானம் செய்யலாம்.

அன்னதானத்தில் பல வகை உண்டு.

தங்கள் திருமன நாள்  சீறும், சிறப்புமாக அமையவும் மற்றும் தங்கள் தாலி பாக்கியம் பெறவும்  அன்னதானம் செய்வார்கள். பிறந்த நாள் அன்று தங்கள் பிறந்த நாள் நினைவாகவும் தங்கள் ஆயுள் பலம் பெறவும் அன்னதானம் செய்வார்கள். திருமண நாள்,  பிறந்த நாள் அன்று அன்னதானம் செய்து சாதுக்களுக்கு வஸ்திரம் வாங்கி தந்து சிவனது ஆசியை பெறுங்கள். தங்கள் வீடுகளில் தீராத  பிரச்சனை தீர அன்னதானம் செய்பவர்கள் உண்டு. தொழில் விருத்திக்காகவும் பணக்கஷ்டம், கடன் தொல்லை, தீராத வழக்கு, தொழிலாளிகள் மற்றும்  பங்கு தாரர்களிடையே ஒற்றுமை மேம்பட அன்னதானம் செய்பவர்கள் உண்டு. நோய் நொடி இல்லாது வாழவும், குழந்தை செல்வத்துக்காகவும்  அன்னதானம் செய்பவர்கள் உண்டு.குழந்தை நோய் நொடி இன்றி இருக்க, அன்னதானம் மற்றும்  இங்கு உள்ள மிருகங்களுக்கு பழம் தானமாக தருவதும் உண்டு. இறந்த தன் தாய் தந்தையர்கள் முக்தி அடைய அன்னதானம் செய்பவர்கள் உண்டு. இறந்துவிட்ட தங்கள் பெற்றோர்களுக்கு கிரியை செய்ய இயலாதவர்கள் சாதுக்களுக்கு  அன்னதானம் செய்தும், பசுவுக்கு அகத்திக்கீரையும் தானம் செய்வார்கள்.

  1. பஞ்சமா பாதகம் ஆகிய பாவத்தை போக்க இங்கு அன்னதான்ம் செய்வார்கள். தாய், தந்தைக்கு அன்னம் இடத்தவரறியவன், ஈமக்கிரியை செய்ய மறுத்தவன், பிறவிக்கடன் கழிக்க திருவண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்.
  1. நாய், பசு, பாம்பு போன்ற ஜீவன்களை கொன்றவர்கள் மற்றும் மாட்டு இறைச்சி உண்ட பாவம் போக திருஅண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம் பிறகு ஜீவகாருண்யத்தோடு சைவம் கடைபிடிக்க வேண்டும்
  1. பேய், களவு, வஞ்சம், கொலை, பிறர் பொருளை அபகரித்தல், பிறர் உழைப்பை திருடி வாழ்வதால்  வரும் பிறவி வினை நீங்க திருவண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்.
  1. பெண்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், பத்தினி பெண்டிர் மீது பொய் சாட்சி கூறியதால் பத்திபெண்டிர் இட்ட சாபம் குறைய திருவண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்.
  1. பிறரது சொத்து கோவில் சொத்து இவைகளை அபகரித்ததால் வந்த பாவத்தினைக் குறைக்க திருஅண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்  திருஅண்ணாமலையில் செய்யும் அன்னதானத்தால் பல ஈனப்பிறவிகளினைக் குறைக்கவும், பல ஈனப்பிறவியில் இருந்து விடுதலை பெறவும் உதவும். வீடு, ஆறு ,சத்திரங்களில்  செய்யும் கர்மகாரியத்திற்கு பதிலாக  அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் அதிக பலன் உண்டு. நாம் செய்த கர்மவினையை குறைக்கவே நவகிரகங்கள் நமக்கு தண்டனை என்னும் கஷ்டங்களை தருகிறது.

இந்த கஷ்டத்தை போக்க திருவண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்.

தொழில் தர்மம் இல்லை என்றால்  நவகிரகங்கள் நமக்கு தோஷம் செய்யும். முற்பிறவி அல்லது இப்பிறவியின் செயல் வினையால் வரும் தோஷம் எத்தனை கடுமையானதாக இருந்தாலும் திருஅண்ணாமலையில் அன்னதானம் செய்தால் தோஷம்  குறையும் . தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு ஆகும். ஆம் நம் கர்ம வினைகளை போக்கவே நவகிரகங்கள் படைக்கப்பட்டது ஆகும் . நாம் செய்கின்ற வினை பதிவின் படி தான் நவகிரகம் நமக்கு ஊறுவிளைவிக்கும்

நமக்கு தண்டனை தந்து நம்மை காக்கும் அல்லது பிறவி வினையைக் குறைக்கும் . நவகிரகங்களின் பிடியில் இருந்து மற்றும் அதன் ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்கவும் நவகிரக தோஷம் குறையவும் அன்னதானம் செய்யுங்கள். நாட்டின் மன்னர்கள் செல்வந்தர்கள் அனைவரும் அன்னதானம் மற்றும் பிற தான தர்மங்கள் மூலம் தங்களை சிறப்பித்துக் கொள்வார்கள்.

அன்னதானம் பல நல்ல பலன்களை தர வல்லது.

அண்ணாமலையாருக்கு யார் வேண்டுமானாலும் (எந்த மதத்தினரும்) அன்னதானம் செய்யலாம். அன்னதானத்தை  தர்மமாக செய்தால்  சகல செல்வமும் கொழிக்கும். வீட்டில் வந்து பிச்சை எடுப்பவர்கள் அம்மா தாயே தர்மம் கொடுங்கம்மா என்று தான் கேட்பார்கள். ஏனெனில் வீட்டில் செய்வது தர்மம் ஆகும். பிச்சை எடுப்பவர்கள் அம்மா தாயே தானம் செய்யுங்க என்று கேட்க மாட்டார்கள். இல்லறத்தானும் தானம் செய்ய மாட்டான். இல் என்பது வீடு ,அறம் என்பது தர்மம். இல்லறத்தில் இருப்பவன் அறத்தை தானம் செய்ய மாட்டான் . பிரதிபலன் இன்றி செய்வது தானம் ஆகும். வீட்டில் தர்மம் செய்தால் பில்லி, சூனியம்,  பகை, குடும்ப சண்டை போன்றவை ஒரு முடிவுக்கு வரும். சாதுக்களின் வாழ்த்து சர்வ மங்களம் தரும். அக்காலத்தில் திருவண்ணாமலைக்கு நாடு, நகரம் தானம் செய்தவர்கள் உண்டு. இக்காலத்தில் நிலம், வீடு, ஆடு, மாடு, குழந்தை, பொன், பொருள், பணம்

போன்ற எதுவேண்டுமானாலும் தானம் செய்யலாம்.

திருஅண்ணாமலை மட்டுமே கர்மம் கழித்து முக்தி தரும் தலம் மற்ற தலங்கள் உங்கள் கருமத்தை மட்டுமே போக்குமே தவிர முக்தி தராது. தவறான வழியில் ஈட்டிய பணம் பொருள்களை தானம் செய்யலாகாது , அதாவது தானம் செய்ய விடாது. பணத்தை பாதுகாத்து வைக்க மட்டுமே முடியும் அவ்வளவு தான். இது தன் பிறவி வினையினை முடிக்க செல்லாது.

 சிவ அன்பர்கள் கோயில் சென்று இறைவனுக்கும், சிவனடியார்களுக்கும் அன்னதானம் செய்வார்கள். மன்னன் முதல் கடைசி குடிமகன் வரை தானம் தர்மத்தை தன்னால் முடிந்த வரை செய்வது குருவுக்கே ஆகும். காரணம் குரு பேசும் தெய்வமாக இருந்து வழி நடத்துவதால் ஆகும் . குருவுக்கு தன்னையே தானமாக தருவதும் உண்டு, அவர்களே சீடர்கள் ஆவர். குருவோடு இருந்து ஆசிரமத்தில்  பல தர்மங்களை செய்வார்கள்.

அண்ணாமலையில் செய்யும்  தானத்தை மட்டும் இறைவன் விரும்பினால் அன்றி தொடர முடியாது. காரணம் சிவனின் நாமத்தை சொல்லி வாழும் சிவனடியார்கள் கர்மம் போக செய்யும் தானத்தினால் கர்மத்தின் வலிமை  கழியும். இங்கு  இறைவனே தான ,தர்மத்தினை ஏற்றுக் கொள்கிறார். திருவண்ணாமலையில் நடக்கும் மகேஷ்வர பூஜையில் கலந்து கொள்வதும் நலம். மகேஷ்வர  பூஜையை நடத்துவதனால் உயிர் போகும் பிரச்சினைகள் கூட தவிற்கப்படுவது உண்டு. தானம் தர்மத்தை செல்வந்தர்கள் இன்றும் தங்கள் உயிர் காக்கவே இன்றும்  செய்து வருவதை காணலாம். ஆயிரம் தானங்கள் இருந்தாலும், உணவை  சமைத்து அன்றே வழங்கும் ஆசிரமத்தின் நிரந்தர அன்ன தானம் சிறப்புடையது ஆகும்.

  1. பணம் வழங்குபவர்கள் உண்டு
  2. பொருள் உதவி செய்பவர்கள் உண்டு
  3. உடல் உழைப்பு தருபவர்கள் உண்டு
  4. அன்ன தானத்தை எடுத்து நடத்துபவர்கள் உண்டு.
  5. தானம் வாங்கி உண்ணுபவர்கள என்று பலர் பங்கு எடுத்து கொள்வார்கள்.இவர்கள் அனைவருக்கும் அவர் அவரின் மனதின் வினைக்கு ஏற்ப அன்னத்தின் பலனை பங்கு போட்டு தருவார் அண்ணாமலையார், அனைவருக்கும். இறைவன் தன் அருள் ஆசியை அவர் அவர் உண்மை உழைப்புக்கு தகுந்த  பங்கு அளிப்பு அவர்களை தேடி வரும்.அவர் அவர் சிரத்தையான அன்னதான உழைப்புக்கு ஏற்றவாறு. அன்ன தானத்தின் சிவ அருள் ஆற்றல் பங்கு தாரர்களைத் தேடிச் சென்று அடியவர்களையே அடையும். இறைவனை அடையும் பிரார்த்தனையில் தானம் ,தர்மம் பெரிய கொடையாகும். சிவன் கோவில் செல்வது ,ஆசிரமம் செல்வது போன்று சேவையும் தலையாயது ஆகும். சிவன் கோவிலின் செலவு போக மீத பணம் பொருள்களினை மக்கள் சேவைக்காகவே அரசு பயன்படுத்தும் .சிவன் கோவில் மட்டும் அல்ல எல்லா கோவில் வருமானங்களினாலும் எல்லா மதத்தினரும் பயன் அடைகிறார்கள். கோவில் உண்டியல் பணம் அரசுடமை ஆவதால் அணைத்து நலனையும் எல்லா மதத்தினரும் அனுபவிக்கிறார்கள். கோவில்கள் மூலம் வரும் வருமானம் மக்கள் நல பணிகளுக்காக பயன் படுத்தப்படுகிறது.  சிவன் கோவில்களில்  செய்யும் தானம் எல்லா மக்களுக்கும் எவ்வித பேதம் இன்றி சிறப்பாக சென்றடைய வேண்டும். அதனால் சிவன் கோவில்களில் செய்யும் அன்னதானமே முக்கியத்துவம்  வாய்ந்தது ஆகும். எந்த மதத்தவர் ஆயினும் அண்ணாமலையை தன் பிறவி பயனால் அறிந்து தியானம்  செய்வார்கள். எந்நாட்டவர் ஆயினும் திருஅண்ணாமலையை தேடி வந்து அண்ணாமலையாரை சரண்புகுவார்கள். சிவன் மட்டும் என் நாட்டவர்க்கும் இறைவன் ஆவார். தென்னாடு உடைய சிவன் அண்ணாமலையானே ஆவார். அண்ணாமலையில் தானம் செய்தால் (வானவர் உலகில்) அவ்வுலகில் பசி இன்றி வாழலாம். திருவள்ளுவர் கூறுகிறார்.பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லைஅருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

    அவ்வுலக வாழ்வுக்காண அனைத்து தேவைகளையும் இவ்வுலகில் இருந்தவாறு சேகரித்து கொள்ளவும், அவ்வுலகில் பசி தாகம் இன்றி வாழவும் அன்னதானம் நமக்கு துணைபுரியும். நமது வாழ்வில் அன்னதானத்தை என்றும் ஓர் இறை சேவையாகவே செய்து இவ்வுலகில்.

  6. நோயின்றி வாழ்வோம். அன்னதானம் செய்பவர்கள் தனக்காகத்தான்,  அதாவது தன் கர்மங்கள் கழியவே அன்னதானம் செய்கிறோம் என்பதை உணர வேண்டும்.

    சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரமம்

    திருவண்ணாமலை

Share this:

Leave a comment

[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US