சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்திருநாள் விழாவினைக் காணவாரீர்!!!
தென் நாடுடைய சிவனும் எந்நாட்டவரின் இறைவனுமான எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலையில்
மகா ஜோதியாக காட்சி தரும் நாளே கார்த்திகை தீபத்திருநாள்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகாதீபதரிசனம் தருவார் அண்ணாமலையார்.
எம் பெருமான் ஈஸ்வரன் அருவமாக
கார்த்திகை தீபத் திருநாள் அன்று தரிசனம் தருவார்.
உலகின் முக்தி ஸ்தலம் திருவண்ணாமலையே!
திருவண்ணாமலை தீபத்திருநாள் கொடி ஏற்றப்பட்டு உள்ளது. இதனை அனைவருக்கும் தெரிவிக்கவும்.
தீபத்திருநாளில் தீப தரிசனம் செய்ய
சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
திருவண்ணாமலைக்கு
மகாதீப தரிசனம் காண வரும் சிவபக்தர்கள் ருத்திராட்சை என்னும் சிவகாப்பு அணிந்தும் சைவத்தில் இருந்தும் அதாவது 51 நாள் விரதம் இருந்தும் மகாதீபம் காண வாருங்கள்.
விரதங்களில் பலவகை உண்டு இதில் சைவமாக விரதம் இருந்து வருவது முக்கியத்துவமானது ஆகும்.
1. முழு நேரம் நீர் மட்டும் அருந்துவது.
2. பால், பழம் மட்டும் உண்டு விரதம் இருப்பது.
3. சூரியனால் படைக்கப் பட்ட உணவை மட்டும் உண்பது.
4. அடுப்பில் வைத்து வேகவைக்காத உணவை மட்டும் உண்பது.
5. ஒரு வேளை மட்டும், அதாவது காலை அல்லது மாலை மட்டும் உணவு உண்பது.
6. காய்கறி மட்டும் உண்பது.
7. சமைக்காத காய்கறி மற்றும் பழங்களை மட்டும் உண்பது.
8. சிவாலயங்கள் சென்று இறைவனுக்கு உரிய பிரசாதம் மட்டும் உண்பது.
9. இரவு நேரங்களில் காய்கறி கலந்த உணவை மட்டும் உண்டு உறங்குவது.
9. மூன்று வேளையும் அரிசி போன்ற நித்திய உணவை விலக்கி மாற்று உணவு உண்பது.
10. மூன்று வேளையும் பால் மட்டும் அருந்துவது.
11. 51 நாளும் பால் உணவை விடுத்து தானிய உணவை பச்சையாவோ அல்லது வேகவைத்தோ தானியங்களை மட்டுமோ உண்பது.
12. சிவனடியாராக இருந்தால் இச்சா பத்தியம் என்னும் இல்லறம் தவிர்த்து விரதம் காத்தல் அதாவது அம்மை போட்ட வீடு போல் விரதங்களை கடைபிடித்தல்.
13. மூன்று வேளையும் உணவில் பால், நெய், வெங்காயம், பூண்டு, சேர்க்காமல் இருப்பது.
14. யாசித்து சாப்பிடுவது
சத்திரம் சாவடிகளில் தங்கி வாழ்வது.
15. தம் வீட்டைத் தவிர மற்ற வீடுகளில் உண்ணாது இருப்பது
16. இல்லறத்தில் இருந்து தர்மங்களை வழங்கிய பின் உணவு எடுப்பது.
16. தேடிவரும் சிவனடியார்களுக்கு உணவு தருவது அல்லது சிவனடியார்களைத் தேடிச் சென்று உணவு வழங்கிய பின் உண்ணுவது.
17. தர்ம சிந்தனையுடன் 51 நாட்கள் அண்ணாமலையார் பெயரை சொல்லி தான தர்மம் வழங்குவது.
18. வீட்டில் உண்டியலில் பணம் சேர்த்து அண்ணாமலையார் பெயரை சொல்லி தம் கையால்
அண்ணாமலையில் தான தர்மம் செய்வது.
19. விரதகாலங்களில் இறைவனுக்கு என்று எடுத்து வைத்த பிடி அரிசி, காணிக்கையை கிரிவலப்பாதையில்
யாசகமிடுவது.
20. கோயில்களில் இருந்து யாசகம் செய்து பல சிவன் கோயில் சென்று அண்ணமலையாரின் தீப தரிசனம் காண்பது.
21. தம் வீடுகளில் அல்லது குழுவாக விரதம் இருந்து தேசாந்திர தரிசனம், என்னும் நடைபயணத்தை அண்ணாமலையாரை நோக்கி நடந்து சென்று தீப தரிசனம் செய்வது.
22. அண்ணாமலையார்க்கு நேற்றிக்கடனை செலுத்துவதும், அன்னதானம், தானியம், பசு, வஸ்திரம் போன்ற காணிக்கையை விரதங்களுடன் இருந்து அண்ணமலையார்க்கு செலுத்துவது.
23. கிரிவல பாதையில் உள்ள பண்டாரம், பரதேசிகளுக்கு வஸ்திர தானம் வழங்குவது.
24. அங்க காரண, காரியங்களால் வரும் ஆணவம் ஒழிய விரதம் முடித்து யாசகம் செய்து அதை இறைவனது உண்டியலில் சேர்ப்பது.
25. வீட்டில் இருந்து வரும் சிவ அன்பர்கள் அண்ணாமலையார் விரதத்தை கடைபிடித்து இறைவனுக்கு உணவு படைத்து பின் சிவ சாதுக்களுக்கு தர்மம் செய்த பின் விரதத்தை முடிப்பார்கள். சிலர் அண்ணாமலையாரை பார்த்து அன்னதானம் செய்த பின் தம் விரதத்தை முடிப்பார்கள்.
சிவனடியார் பெருமக்களே நீங்கள் எங்கு இருந்தாலும் அண்ணாமலையாரை நினைத்து தான தர்மங்களை செய்து
வீட்டிலேயே அண்ணாமலை தீபம் ஏற்றி அண்ணாமலையாரை தரிசனம் செய்யுங்கள் .
26. விரதங்களில் சால சிறந்த விரதம் உள், வெளி மௌனமே சிறப்பு வாய்ந்தது. இது யோகியரின் விரதம் ஆகும்.
27. பஞ்ச இந்திரிய கட்டுப்பாட்டுடன் விரதம், மௌனம் எடுப்பது, பார்க்க கூடாதை பார்க்காது இருப்பது,
கேட்க கூடாததை கேட்காது இருப்பது, முகர கூடாததை முகராதிருப்பது, ருசிக்க கூடாததை ருசிக்காதிருப்பது , பேசக் கூடாததை பேசாதிருப்பது.
மனதால் எண்ண கூடாததை எண்ணாதிருப்பது.
28. சொல் செயல் சுத்தத்துடன் விரதத்தை முடிக்காது பஞ்ச இந்திரிய விரதத்தை தொடருங்கள்.
29. வயோதிகர்கள், மூன்று வேலை உணவுக்குப் பின் எந்த ஒரு ஆகாரமும் எடுக்காது இருத்தல்.
30. பசி இன்றி உண்ணாது இருப்பதும் பகலில் உறங்காது பன்னிரு திருமுறைகளை வாசிப்பது, கேட்பது. 64 நாயன்மார்கள் கதைகளினைத் தேடிச் சென்று உறரப்பது , பல முறை சிவ புராணம் பாடுவது.
31. அதிகாலையில் விழித்து பஞ்ச இந்திரிய தூரிகை செய்து சிவ புராணம் மற்றும் மாணிக்க வாசகர் பாடல் பாடி, கேட்டு பூஜை செய்வது.
32. 51 நாட்கள் பஞ்சாட்சர நாமத்தை ஜெபம் செய்து ஏதேனும் உயிரினத்துக்கு உணவு வழங்கி விரதத்தினை நிறைவு செய்வது.
33. விரதகாலங்களில் பச்சரிசி உணவும், காய்கறிகளினை மட்டும் உண்பது.
34. குழந்தைகளுக்கு பஞ்சாட்சரம் சொல்லி 64 நாயன்மார்கள் கதை சொல்லி நமசிவய மந்திரம் சொல்லுவதோ அல்லது நமசிவய எழுதி விரதம் முடித்த குழந்தைகளுக்கு இறைவனுக்கு இனிப்பு, புட்டு படைத்து குழந்தைகளுக்கு தந்து சிவத்தை அறிவியுங்கள்.
35. தியானம் செய்ய முடியாதவர்கள்
சிவன் கோயில் சென்று தரிசனம் செய்து சிவனை பல முறை சுற்றி வந்து தானம் செய்து வீடு திரும்புங்கள்.
36. யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமையினை முடித்து அனைத்து நேரத்தையும் தியானத்தில் கழியுங்கள்.
உலகிலேயே தலை சிறந்த சிவ வழிபாடு இதுவே ஆகும்.
சிவ வழிபாட்டில் உள்ள
தானம், தர்மம், யோகம், தபம் போன்ற சுத்த சிவ மார்க்கம் வேறு எந்த மதத்திலும் இல்லையே!
சுத்த சைவமே, சுத்த சிவம்
சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரமம்
திருவண்ணாமலை