சிவனை அறிய முற்பட்டால் நம்மில் மாயை தனது வேலையை சிறப்பாக செய்யும்.
ஆம் சிவனை அறிய நினைத்தால் இந்த வாழ்வோ வயதோ அல்ல இந்த யுகமே போதாது.
சிவனை அறிய நினைத்தவர்கள் இன்று வரை அனேகத்தின் பிடியில் தான் இருக்கிறார்கள்.
இறைவனை அறிய வேண்டுமாயின் இறைவனே தன்னை உனக்கு உணர்த்த முன் வர வேண்டும்.
இல்லையேல் நீ அவனை அறிய முடியாது.
நீ இறைவனை அடைய அவன் படைத்தை ஒவ்வொன்றாக விலக்கி தனிமைக்கு வரவேண்டும்.
உன்னிடம் நீயும் உனது உடலும் இருக்கும், அந்த உடலில் உயிராய் உன்னை பிடித்தவனை அறிந்தால் ஏகனை அறிந்து விடுவாய்.
இந்த உயிர் பிடித்து உள்ள இடமே இறைவனை தொடும் இடம்.
உனது உடமை போனதும், உனது என்று மிஞ்சுவது உன்னை படைத்த இறைவன் மட்டுமே என்பதை அறிவாய்.
அந்த இறைவன் உடலில் உயிராய், உணவாய் உதவுவதை அறிந்தால்
உயிருக்கு உணவு போல் இறைவனுக்கு விருந்தாவோம்.
ஆம் நம்மால், இறைவனுக்கு அல்ல ஆன்மீக தேடலுக்குகே பெருமை சேர்ப்போம்.
சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா


 
						
									 
						
									 
						
									 
						
									 
						
									 
						
									 
						
									 
						
									 
						
									