சிவ யோகினியாக ஒருவர் வாழ வேண்டுமாயின் முதலில் நாம் உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றையும் தெளிவாக அறிய வேண்டும்.
சிவ சீலர்கள் சுத்த தேகிகள்
அதாவது பவித்ர ஸ்தானிகள்.
இவர்கள் முதலில் தங்கள் உடலை துணி கொண்டு பொதிந்து வைப்பார்கள்.
சிவ மார்க்கத்தின் மார்க்கத்தை அறியாமளே அவர்கள் தங்களின் உடையை அணிவார்கள், தேகம் இறைவனுக்கானது என்பதால். (உதாரணம் புனிதவதி, கண்ணகி, மணிமேகலை).
உணவு, எளிமையானதாகவும்
உணவில் கட்டுபாடான சைவமும் இது கடுமையான வைராக்கியமாகவும் இருக்கும்.
உறைவிடம், இதில் தந்தை ஆனாலும் ஆசான் ஆனாலும் கணவனே ஆனாலும் நல்ல சேவகியாகவே பணிவோடும் பண்போடும் வாழ்ந்து முடிப்பார்கள்.
இந்த குணமே வெற்றியை வளர்த்து தரும் இறைவனிடத்தில்.
இந்த குணம் உடையவர்கள் மட்டுமே பின்னாளில் யோகத்தை அடையும் வாய்ப்பை பெருவர்.
பெண்கள் சலனம் தரும் வகையில் தங்களின் அங்கத்தை சிறிது கூட காட்டக்கூடாது.
பிறர் காண உடை அணியளாம், பிறர் காணும் வகையில் உடலை காட்டக்கூடாது.
இறைவனை காண நினைப்பவர்கள் பிறர் காண வாழ்வது இல்லை, மறைந்து ஒளிந்து வாழ்வார்கள்.
உயரிய பண்புகளை உடைய உத்தமி, சத்திய வதிகளை போல் வாழுங்கள் அவர்களே உங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதுவே சிவனடியாளாக இருக்க வேண்டிய தகுதி.
சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா