கைலாய வாத்தியம் சிவனுக்கு மட்டும் வாசிக்க கூடியது ஆகும்.

இறைவன் கைலாயத்தில் எழுந்தருளும் போது கைலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில்இன்றும் அருணாச்சலேஸ்வரர் வீதிஉலா வரும்போதும் கிரிவலம் வரும்போதும் கைலாய வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

மற்ற நாட்களில் மங்கள வாத்தியமாகிய நாதஸ்வரத்தை மட்டுமே வாசிக்கிறார்கள்.

கைலாய வாத்தியம் எம்பெருமான் சிவனுக்கானது அதை சிவனுக்காக மட்டுமே வாசித்தல் வேண்டும்.

காரணம் சிவம் தனித்துவமானது.

இதை மெய் ஞானியர் மற்றும் யோகியர்கள் மட்டுமே அறிய முடியும்.

ஆம், மாணிக்கவாசகர் சிவன் அன்றி ஓர் தெய்வத்தை கைதொழேன் என்கிறார்.

கைதொழுவதில் கூட இறைவனுக்கு என்று தனி மரியதை வைத்தே தொழுகிறார்கள்.

சைவத்தில் கைகளை தலைக்கு மேல் கூப்பி கைதொழுவார்கள்.

அது போல் அவருக்கான ஓர் வாத்தியத்தை
தனி மனிதர்களுக்கு வாசிப்பது என்பது
ஓர் அறியமையே ஆகும்.

சிவன் இடுகாட்டில் உள்ளார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆனால் இறைவன் அங்கு கர்மங்களை ஒழிக்கும் ஈசனாக உள்ளார்.

அதாவது அழித்தல் நாயகனாக உள்ளார்.

இடுகாட்டு சாம்பலை பூசிக்கொண்டு .
ஏகமபோகமான ருத்திரனாகவும் ரவுத்திர குணத்துடனும் திரிகிறார்.

இங்கு அன்னை காளியாக மயானத்தை காவல் புரிகிறாள்.

இவ்விடம் ஈசன் அழித்தல் தொழில் நடக்கும் இடம் ஆகும்.

இங்கு இறைவனது, மூன்றாவது தொழிலான முக்தியை வழங்குகிறார்.

கைலாயபூஜை:

கைலாயத்தில் இறைவன் எளிய அலங்காரங்களோடு அமர்ந்து இருப்பார்.

ஸ்ரீ புரத்தில் இருந்து கைலாய பூஜைக்காக பார்வதி தேவியை நந்தியம் பெருமன் கைலாயத்திற்கு அழைத்துவருவார்.

அன்னை ஸ்ரீ புரத்தில் இருந்து
சிவபுரம் வந்து, பூதகணங்களோடு கைலாய வாத்தியங்கள் முழங்க ஈஸ்வரனின் பாதங்களுக்கு பூஜை செய்து
பின்னர் ஈசனோடு அமர்ந்து சகல ஜீவ ராசிகளுக்கும் ஆசி செய்வார்.

பூஜை முடிந்து மீண்டும் அம்பாள் ஸ்ரீபுரம் வருவார்.

பின்னர் சிவன் கைலாயத்தில் தனித்து தியானம் செய்வார்.

இதுவே கைலாயத்தில் நடைபெறும் கைலாய பூஜை ஆகும்.

சிவன் பார்வதியோடு அம்மை அப்பனாக காட்சி தருவது கைலாயத்தில் மட்டுமே
ஆகும்.

வடக்கே கைலாய மலையாக இருக்கும் இடம் ஒன்று உள்ளது, அது பூலோக கைலாயம் ஆகும்.

ஆகாய கைலாயம் சிவனை வானவர் போற்றி துதி செய்யும் வானுலக கைலாயம் ஆகும்.

இந்த இரு கைலாயத்தை அறிந்தவர்கள் உண்டு.

கைலாயம் அறிந்தவர்கள் கைலாயத்தை இடுகாட்டில் பார்க்கலாகாது.

இடுகாடு அரசன் முதல் ஆண்டிவரை பேதம் இன்றி தீர்ப்பு வழங்கப்படும் இடம் ஆகும்.

முக்தி நிலை தரும் இடம், இங்கு நாம் வைத்த பெயர் ஊர் எதுவும் செல்லாது.

பிணம் என்று பேதமை கொண்டு உடலை இடுகாட்டுக்கு கொண்டு வருவார்கள்

இங்கு அரிசந்திரன் பாடிய பாடல்கள் பாடப்பட்டு இறந்தவர்கள் கைலாயம் போக வேண்டிக் கொள்வார்கள்

இங்கு உறவுகள் அறுக்கப்படு பானையில் மூன்று ஓட்டைகள் இடப்படும்

இவ்வாறு வாழ்ந்த மனித உயிர் போனால் பிணம் ஆவர்கள்

அனைவரும் செல்லும் இடம் சுடலை ஆகும்.

தனி மனிதர்கள் யோகத்துடன் இருந்தால் சுடலைக்கு வருவது இல்லை.

சிவத்தோடு வாழ்ந்தவர்களை ஜீவ சமாதி செய்வார்கள் .

ஜீவ சமாதி ஆனவர்களுக்காக அழுவதோ ஆர்பாட்டம் செய்வதோ அல்லாது சிவபுராணம் படிப்பார்கள்.

சிவ புராணத்தில் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவர் செல்வர் சிவபுரத்துக்கு இதை பல்லோரும் ஏற்று பணிந்தல் வேண்டும் என்கிறார்.

அப்போது தான் நாம் சிவனடியின் கீழ் வாழலாம்.

சிவபுரத்தில் தான் கைலாயம் உள்ளது. இந்த வான் கைலாயத்தில் சிவனுக்கு மட்டும் வாசிக்க வேண்டிய சிவ வாத்தியத்தை மனிதர்களுக்கு வாசிக்காதீர்கள்.

எத்தனை உயர்வாக வாழ்ந்து இருந்தாலும்
மனிதர்களுக்கு வாசிக்க வேண்டாம்.

மனிதர்களை சிவ லிங்கத்துக்குள் போட்டு சிவனாக பாவிக்கவும் வேண்டாம்.

சிவனுக்கு என்று ஓர் இடம் உண்டு. அது எம்பெருமனுக்கே உறித்தானது.

சிவனை ஒப்பதோர் இறைவன் இல்லை. அப்படி இருக்க மனிதர்கள், சிவனடியார்கள் என தனி மரியாதை தாருங்கள்.

அது அவர் சிவனுக்காக வாழ்ந்த தியாக வாழ்வை பெருத்து அமையும் .

சிவனடியார்க்கு ஹர ஹர மகாதேவ் என்ற கோஷங்களோடு வழி அனுப்புங்கள்.

சிவ வாத்தியத்தை கோயில் மட்டுமே வாசிக்க பயன்படுத்துங்கள்.

அண்ணாமலையார் தனது தந்தைக்கு ஈமக்கிரிகை செய்ய செல்லும் போது எந்த வாத்திமும் இன்றி அமைதியாக சென்று ஈமக்கிரிகை செய்து அமைதியாகவே திரும்புவார்.

அவ்வாறு வழி வழியாக செய்யும் கிரியையான வெள்ளாள மகாராஜாவுக்கே கைலாய வாத்தியம் வாசிப்பது இல்லை.

சிவனுக்கான ஓர் வாத்தியம் அது, கைலாய வாத்தியம்.

கைலாய வாத்தியத்தை எம்பெருமானுக்கு மட்டுமே வாசிக்க வேண்டும்.

இவ்வாறு இறந்தவர்களுக்கு வாசிக்கும் வாத்தியத்தை மனிதர்களுக்காக
வாசிக்கக்கூடாது.

சிவனுக்கு வாசிக்க மட்டும் அனுமதிக்யுங்கள்.

சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா

Share this:

Leave a comment

[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US