சிவனடியார் என்பவர்கள் தன்னை இறைவனுக்கு என்று அடிமைபடுத்திக் கொண்டவர்கள்.

தன்னை சிவனுக்கு அடிமை என்று அடிமை சாசனம் எழுதி தந்தவர்கள் .

இவர்கள் யாவரும் தங்கள் குடும்பத்தில் இருந்து சந்நியாசியாக
வெளியில் வந்தவர்கள்.

இறைவனது திருநாமத்தை மட்டுமே சொல்லி வாழ்பவர்கள்.

இவர்களுக்கு என்று வீடு, வாசல் என்பது இல்லை.

கோயில்களின் குளக்கரைகளில் தங்கியே வாழ்பவர்கள்.

சந்நியாசி என்பவர்கள் நெருப்பு மூட்டி சமைக்கக் கூடாது. ஊர்களுக்குள் சென்று யாசித்த உணவை உண்டு வாழ்பவர்கள் .

இதில் சிலர் தேசாந்திரம் என்னும் ஸ்தல யாத்திரை செல்வார்கள். அவர்கள் கோயில்களின் வாசலில் மட்டுமே வாழக் கூடியவர்கள்.

தர்ம சத்திரங்களில் வெளியில் மட்டுமே தங்குவார்கள்.

சிவனடியார்களுக்கு தொண்டு செய்யவே இல்லற வாசிகள் காத்திருப்பார்கள்.

இவர்களுக்கு பணி செய்வதை அப்பர் தம் சிவ சேவையாகவே கொண்டிருந்தார்.

அப்பர், அன்னதானம் செய்து கோயில்களை தூய்மைப்படுத்தி வந்தார்.

அப்பர் செய்த இறை தொண்டுக்கு உழவாரப்பணி என்று கூறுவார்கள்.

இவர்கள் இடம் பெயர்ந்து சைவத்தை பரவச் செய்து வாழ்ந்ததால் சைவக்குரவர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

63 நாயன் மார்கள் அனைவரும் சிவனுக்கும்,
சிவனடியார்க்கும் சேவை செய்து வாழ்ந்து வந்தவர்களே.

சிவனது திருநாமத்தை சொல்லி வாழ்பவர்களை சிவனடியார்கள் என்பார்கள், அவர்களை போற்றுவோமாக!

சிவனது பாடலை கோயில்களில் பரம்பரை பரம்பரையாக பாடுபவர்கள் உண்டு, இதற்கு ஓதுவது என்று பெயர். இவர்களை ஓதுவார்கள் என்று அழைப்பர். சிவனை வழிப்பட்டாலும், சிவனைப் பற்றி பாடுவதாலும் இவர்கள் சிவனடியார்கள் அல்ல. இவர்கள் இறைபணி செய்தாலும், இல்லற வாசிகளே ஆவார்கள்.

இறைவனைப் பற்றிய விளக்கத்தையும், உபதேசங்களையும் கூறுபவர்கள் உபதேசிகர்கள். வேதம் இவர்களை உபன்யாசம் செய்பவர்கள் என்று குறிப்பிடுகின்றது இவர்களும் குடும்பஸ்தர்களே.

கைலாய வாத்தியம் வாசிப்பவர்களை, பாடுபவர்களை வான் உலகில் கின்னர்கள் என்பார்கள். கந்தர்வர்கள் என்பவர்களும் தேவகானம் இசைப்பார்கள்.

பூமியில் இசை ஞானத்துடன் இருந்தால் பாணர்கள் என்பார்கள்.

கைலாயத்தில் கைலாய வாத்தியம் வாசிப்பவர்களை வணங்கத்தக்கவர்கள் என்பார்கள். இவர்களை கணங்கள் என்கிறார்கள்.

சிவனை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் சிவனடியார்கள். இவர்கள் திருவோடு, வெண்சங்கு மட்டும் வைத்துக் கொண்டு பிச்சை எடுத்து எளிமையாய் தங்கள் வாழ்வை வாழ்ந்து முடிப்பார்கள்.

பட்டினத்தார் ஒரு முறை தன்னிடம் யாசகம் கேட்டு வந்தவரிடம் பத்ரகிரியாரை, வடக்கு வாசலில் ஓர் குடும்பஸ்தன் உள்ளான் அவனை போய் பாருங்க என்றார்.

பத்ரகிரியாரிடம், பட்டினத்தார் சொன்னதை சொல்ல உடனே குருவை நோக்கி ஓடி வருகின்றார்.

இந்த திருவோடும் நாயும் எனது குடும்பமா என்று கூறி ஓட்டை நாய் தலையில் போட்டு உடைக்கிறார், நாய் இறந்து விடுகின்றது.

பின் தனது கைகளால் குருவுக்கு யாசகம் செய்து அன்னம் தருகிறார்.

தியாகராஜ பெருமானைக் காணும் ஆர்வத்தில் கோயில் வாசலில் அமர்ந்து இருந்த சிவனடியார்களை வணங்காது சென்றார் சுந்தரர்.

அதனால் அங்கு இருந்த மெய்யடியார், சிவனடியாரை மதியாதவரை நீர் காணுமாயின் சுந்தரரை போல் உம்மையும் சிவனடியார் கூட்டத்தில் இருந்து தள்ளியே வைக்கிறோம் என்று கூறுகிறார்.

சுந்தர் கோயிலின் கர்பகிரகத்தில் ஈசன் கண்ணுக்கு புலப்படாததைக் கண்ட சுந்தரர் தேடி அழுகிறார்.

இறைவன் அசரீரியாக, சுந்தரரே எமது அடியாரை காணாது நீர் வந்தால் அடியார் கூட்டத்தில் இருந்து தம்மையும் உம்மையும் தள்ளி வைப்பறே என்றார்.

உடனே சுந்தரர் இறைவா உம்மை காணும் பொருட்டு எத்தனை பிழை செய்து விட்டேன் என்று வருந்துகின்றார்.

சிவனடியார்களிடம் மன்னிப்பு கேட்கின்றார் தம் பிழையினைப் பொறுத்து அருள்க என்றே.

இவ்வாறு கோயில் வாசலில் அமர்ந்து இருப்பவர்கள் தான் சிவனடியார்கள். இவர்கள் தான் உண்மையான சிவனடியார்கள், மற்றவர்களை அடையாளம் காணுங்கள்.

காவி, ருத்திராட்சை, விபூதி பூசிக்கொண்டால் போதும் இல்லறத்தானும் தான் சிவனடியார் என்கிறார்கள் .

இவர்கள் எதை இறைவனுக்காக தியாகம் செய்தார்கள்?
தங்களை சிவனடியார் என்பதற்கு …

சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா

Share this:

Leave a comment

[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US