தமிழ் மொழி தாய் மொழி என்கிறோம் அதுவல்ல எம் பெருமான் ஈசன் வந்து சோதித்து, உரைத்து திருவிளையாடல் புரிந்த மொழி தமிழ் மொழியே ஆகும்.
ஆதலால் தமிழ் என் ஈசன் ஈன்று, கட்டிக்காத்த
தந்தை மொழி என்பது ரகசியமே ஆகும்.
தமிழ் மொழி தான் ஆதியில் பேசபட்ட மொழியும், இறைவனை போற்றப்பட்ட மொழியும் ஆகும்.
இறைவன் அனைத்து மொழியும் அறிந்தவர்.
அவருக்கு அவர் பிறப்பித்த மொழியில் போற்றுதல் செய்தல் போதும்.
அனைத்தும் அறிந்தவன் இறைவன், இறைவனை போற்றுதலை நாம் அறிந்தும், புரிந்தும் கேட்பதே பயன் உள்ளதும் ஆகும்.
இறைவன் பன்மொழி பிரபாகரன். அவனுக்கு என்று பிரியமானதும், பிரதானமானதும், தானே நேரில் வந்து நமக்கு உகந்து, உரைத்த மொழியும் தமிழ் மொழியே ஆகும்.
மதுரையில் தமிழ் சங்கத்தில் தலைமை புலவனான நக்கீரரின் புலமையை சோதனை செய்து பெருமைபடுத்திய மொழி, தமிழ் மொழியே ஆகும்.
வேதங்கள் என்றாலே பன்னிறு திருமுறையே ஆகும்.
முச்சங்கம் வைத்து மன்னர்கள் வளர்த்த மொழி தமிழ் மொழியே ஆகும்.
இடைச்செறுகல்கள் தான்
மாற்று கருத்துக்கள் கொண்டது.
திருவள்ளுவரின் திருமறை புனல்வாதம் வென்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தின் தங்க தாமரையில் வெளிவந்தது.
அந்தணர்கள், சமணர்கள் மறையாக ஏற்க பொங்கி வரும் வைகை ஆற்றில் எதிர் ஏறியது.
இறைவன் வளர்த்த சங்க தமிழ் தான் புண்ணிய நீர் ஆட தகுதியான மொழி ஆகும்.
அதிலும் இறைவனை தொழும் மக்கள் அறிந்தும் தெரிந்தும் உணரும் மொழியில் தான் போற்ற வேண்டும்.
குடமுழுக்கினை தமிழில் செய்வது முதன்மையானதும்,
தலையானதும், தலை சிறந்ததும் ஆகும்.
புறசமயம் என்னும் பிறசமயங்களிடம் இருந்து தமிழையும் சிவத்தையும் காத்து நாம் போற்றுவோமாக..
சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா