சிவராத்திரி
விளக்கம்
சைவர்களுக்காக
சிவராத்திரி அன்று காலையில் குளித்து தாய், தந்தை, குருவை வணங்கி விபூதி தரித்து
ஐந்து வகை மலர் கொண்டு
சிவனை அலங்கரித்து விபூதி கொண்டு 1 லட்சம் சிவநாமம்
அர்ச்சனை செய்ய வேண்டும்.
இந்த விபூதியை வருடம் முழுவதும் உபயோகிக்கலாம். சிவ காப்பாகவும் அணிந்து கொள்ளலாம்.
உடல் நலக்குறைவு ஏற்படும் போது அர்ச்சனை செய்த விபூதியை மருந்தோடு மருந்தாக சேர்த்து உட்கொள்ளலாம்.
சிவ லிங்கம் பூஜை செய்ய நினைப்பவர்கள் (சிவ பூஜை செய்ய) விபூதியால் கட்டை விரல் அளவு
சிவ லிங்கம் மற்றும் சிறிய நந்தி செய்து அதற்கு விபூதி கொண்டு பூஜை செய்யவும்.
சிவ பூஜை தொடந்து செய்ய நினைப்பவர்கள், ஐம்பொன்னால் ஆன சிவ லிங்கம் அதுவும் கட்டை விரல் அளவு செய்து பூஜையை தொடரலாம்.
சிவ பூஜை செய்ய முதல் மற்றும் ஒரே தகுதி புலால் உண்ணாமை மட்டுமே.
நெற்றியில் மூன்று பட்டை இட்டு கொண்டு, ருத்திராட்ச்சை அணிந்து கொண்டு பூஜை செய்யவும்.
சிவ பூஜையின் முழு பலனை பெற
நாம் நம்மை சுற்றி உள்ளவர்களை எந்த ஓர் உபகாரணமும் இன்றி
மகிழ்வித்தும், இறைவனைப் பற்றி பேசி கொண்டே இருத்தல்
வேண்டும்.
சிவம்மா