பர ஒளிக்கு ஓர் அற்பணம். வான் பார்த்து விளக்கு ஏற்றும் சம்பிரதாயம் நமது பாரம்பரியத்தில் காலம் காலமாக உள்ளது.
இறைவனை அணுகும் முறையில் தீபம் ஏற்றும் செயல் நமது கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது மேலும் இறைவனை ஒளியால் ஆராதிப்பது நமது பண்பாடு ஆகும்.
கார்த்திகை மாதம் கிராமங்களில் சுந்து கொளுத்துவார்கள். மிக பிரம்மாண்டமான பனைமரத்தைக் கொண்டு தயார் செய்து நெருப்பு வைத்து அதனை சுற்றி ஆடி பாடி இறைவனை துதிப்பார்கள். இதற்க்கு சொக்க பானை என்று பெயர் இது இன்றும் தென்னாட்டவர் வழக்கத்தில் உள்ளது.
இந்த சுந்து என்னும் நெருப்பு ஊருக்கு நன்மை தரும் என்பது நம்பிக்கை. இதனால் தீய சக்திகள் ஊரைவிட்டு வெளியேறும் என்று நம்பினர். அது மட்டும் அல்ல, அப்பாலுக்கும் அப்பால் உள்ள இறைவனுக்கு தங்கள் உணர்வின் வெளிப்பாட்டை விளக்கு ஒளியின் மூலம் தெரிவித்தார்கள். நம் முன்னோர்கள் ஈசனின் நாமத்தை சொல்லியும், துதித்தும், ஒளியால் ஆராதித்தும் இறைவனைப் போற்றினார்கள்.
இறைவன் ஜோதி வடிவானவன் என்பதால் ஒளியை நாம் ஆராதனை செய்கிறோம். இறை வேண்டுதலின் காரணம், நமது வாழ்வு ஒளி மயமாக இருக்க வேண்டும் என்பதுவே.
நெருப்பின் முன் இருந்து வேண்டுதல் செய்தால் நல்ல பலன் தரும். ஒளி புரியும் செயலை மற்று எதுவும் செய்ய இயலாது. ஆதலால் நாம் உயிர் ஜோதியாக ஒளியை ஏற்றி காட்டுகிறோம். பரஞ்ஜோதிக்கு நம் உணர்வின் மகிழ்ச்சியைக் காட்ட நினைக்கிறோம்.
சில தெய்வ வழிபாடு விளக்கு ஒளிகளோடு தொடர்புடையது ஆகும். ஒவ்வொரு சம்பிரதாயமும் ஒன்றோடொன்று தொடர்புடையது ஆகும்.
ஒளிக்கதிர்கள் சில பல ரகசியங்கள் நிறைந்ததும்,இதில் பல மறைக்கப்பட்டதும் கூட.
அதனால் நம் முன்னோர்கள் கூறிய விளக்கு ஏற்றி இறைவனை வணங்கும் முறையை எக்காலத்திலும் கை விட வேண்டாம்.
கார்த்திகை மாதம் வாசலில் தீபம் ஏற்றுவார்கள், அதன் காரணம் தெய்வீக சக்தியை நம் வீட்டிற்கு வரவேற்கவே ஆகும். சிலர் மகாசக்தியை வீட்டிற்குள் அழைப்பதாக நம்புகிறார்கள்.
வீட்டின் அழகே ஒளி, அது மனதிற்கு பெரிய மாற்றம் தரும். ஒளியானது நம் உள்ளத்தில் உள்ள இறை உணர்வுகளையும் இணைக்கக் கூடியது.
பலவிதமான கொடிய நோய் தொற்றில் இருந்து நாம் தப்பிக்க நம் முன்னோர்கள் ஒளியை வாசலில் ஏற்ற செய்தார்கள்.
மனிதன் நோய் இன்றி வாழ்ந்தாலே பெரிய வரம் ஆகும். ஆரோக்கியமும் ஆனந்தமும் மகிழ்ச்சியுமான வாழ்வே ஆயுள் சேமிப்பு ஆகும்.
ஒளி நம்மை காக்கும் நமது வாழ்வில் மட்டும் அல்ல, கோயிலிலும் இறைவனை விளக்கின் ஒளியில் காண்பது நன்றே.
கோயில் கருவறையில் விளக்கின் ஒளியினில் தான் தரிசனம் செய்ய வேண்டும். இதனால் நமது மன இருள் நீங்கும்.
இறைவன் ஜோதி வடிவானவன். இறைவன் ஜோதியாக தோன்றுவான் என்பது நம்பிக்கையே ஆகும்.
அதனால் ஒளியேற்றி இந்த தொற்று நோயிடம் இருந்து உலகை காக்க வேண்டுவோம்.
சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா