நல்ல மழைக்காலம் தூக்கணாங்குருவி இரை தேடிச் சென்றது. அங்கு ஒரு குரங்கை கண்டது. குரங்கு நல்ல மழையில் நனைந்து கொண்டிருந்தது. தூக்கனாங்குருவி குரங்கை பார்த்து எனக்கு ஊசி மூக்குகள் கொண்ட வாய் மட்டுமே உள்ளது. அழகிய வீட்டைக் கட்டி அழகாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். உனக்கு இறைவன் அழகான கை, கால்களை தந்திருக்கிறார். நீ ஏன் ஒரு அழகான வீட்டை கட்டிக் கொள்ளக் கூடாது என்று கேட்டது. இதைக் கேட்ட குரங்குக்கு கோபம் வந்தது. நீ எனக்கு புத்தி சொல்கிறாயா என்று கூறி தூக்கணாங்குருவியின் கூட்டை பிரித்து போட்டது. குருவியின் கூட்டினைப் பிரித்து போட்டதால் குருவியும் மழையில் நனைந்து கொண்டிருந்தது. அப்போது நினைத்தது, நாம் தவறாக குணம் கெட்டவர்களுக்கு புத்தி சொல்லி விட்டோம், நாம் உபதேசிக்க கூடாது என்று வருந்தியது. 

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.