ஒரு குளத்தில் வசித்து வந்த தவளையும், எலியும் நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் கரைக்கு வந்து விளையாடி, பேசி திரிந்து, இறை தேட செல்வதனை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். விளையாட்டு, உணவு, உறக்கம் என நாட்கள் கழிந்தன.
ஓர் நாள், தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டி இருவரும் கலந்து பேசி ஓர் முடிவுக்கு வந்தனர். அதன்படி ஓர் கயிறை எடுத்து தவளை தனது காலிலும், எலி தனது வாலிலும் கட்டிக் கொண்டு விளையாடின. இரண்டு பேரும் கயிற்றினை மாறி மாறி இழுத்துக் கொண்டும், மண்ணில் புரண்டு கொண்டும் இருந்தனர். திடீரென அங்கு ஓர் கழுகு வந்தது. கழுகை கவனித்த தவளை உடனே தடால் என்று தண்ணீருக்குள் குதித்து விட்டது. தவளை தண்ணீரில் குதித்ததும், எலி நீரில் மூழ்காமல் மிதந்தவாறு நீச்சல் அடித்தது. கழுகு எலியை உணவுக்கு கவர்ந்து சென்றது. எலியோடு கட்டியிருந்த கயிற்றோடு தவளையும் உடன் சென்றது. விதி முடிபவர்களோடு செல்லக் கூடாது என்றது தவளை. எலி புத்தி இல்லாதவன் பேச்சை கேட்கக் கூடாது என்று கத்தியது.
சிவம்மா