ஒரு தொப்பி வியாபாரி இருந்தான். ஊர் ஊராக சென்று தொப்பி வியாபாரம் செய்து வந்தான். வெளியூர் சென்று வியாபாரம் முடித்து ஊர் திரும்பினான். தனது வழித் துணைக்கு யாரேனும் வந்தால், ஊர் செல்லலாம் என்று நினைத்தான். யாரும் இல்லை அதனால் அங்கேயே தங்கினான். சிறிது நேரத்தில் பூசணிக்காய் ஒன்றை சுமந்து வந்தவன் நாளை சந்தைக்கு விற்க போவதாகக் கூறி பூசணிக்காயை கீழ் இறக்கி வைத்தான். பூசணிக்காயை கீழ் இறக்கி வைத்தவன் தன்னிடம் கொஞ்சம் உணவு உள்ளது உண்டு களைப்பாரலாம் என்றான். சரி என்று இருவரும் உணவை உண்டு அந்த ஆலமரத்தின் நிழலில் உறங்கலானார்கள். தொப்பி வியாபாரிக்கு பூசணிக்காயை பார்த்து சிரிப்பு வந்தது. பூசணிக்காரனிடம் எத்தனை பெரிய ஆலமரம் அது, எத்தனை சிறிய பழத்தை தருமாறு படைத்து இருக்கிறார். எத்தனை சிறிய பூசணி செடியின் தண்டில் எத்தனை பெரிய பூசணி பழத்தை படைத்து இருக்கிறார். இறைவனுக்கு கூட கொஞ்சம் படைப்பில் தகராறு. நான் படைத்து இருந்தால் ஆலமரத்தில் பூசணியும், பூசணிக் கொடியில் சிறிய ஆலம் பழத்தையும் படைத்து இருப்பேன் என்றான். இருவரும் சிரித்தனர். தொப்பிகாரன், பூசணிகார தம்பி கொஞ்சம் தூங்கி எழுந்து கொள்கிறேன் என்றான். உண்ட மயக்கம் தூங்க ஆரம்பித்து நன்றாக தூங்கிவிட்டான். அப்போது அவனது நெற்றியில் ஓர் ஆலம் பழம் விழுந்தது. அவனது தலையே அதிர்ந்தது. நல்ல உறக்கம் வேறு. அலரி அடித்து எழுந்தான். பூசணிக்காரனிடம் என் தலையில் இடியே விழுந்தது போல் இந்த ஆலமரத்தின் காய் விழுந்தது என்று திட்டினான். உடனே பூசணி வியாபாரி சொன்னான், நண்பா என்னிடம் உள்ள இந்த பூசணிக்காய் விழுந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டான். படைத்தவனுக்கு தான் தெரியும், படைத்ததின் ரகசியம் என்று கூறினான். இறைவா ஆலமரத்தின் காயினை சிறியதாக படைத்ததற்கு எத்தனை நன்றி கூறுவது என்று கூறிய வண்ணம் இருவரும் பயணிக்கலானார்கள்.
சிவம்மா