நம் வீடுகளில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டும். முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும். வீட்டை மட்டுமல்ல வீட்டுக்கு வெளியிலும் வீட்டை சுற்றியும் சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதும். தேவையற்ற பொருட்களை உடனே நீக்கிவிடுங்கள். குறைந்த பொருட்களை பயன்படுத்துங்கள்.

நிறைய பொருட்களை பயன்படுத்தக் கூடாது. நிறைய தேவையற்ற பொருளை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அதை சேமித்து வைக்காதீர்கள்.்அது உங்களுக்கு தீய கிருமிகளை உண்டு பண்ணி தீமையானதொரு ஆதிக்கத்தைத் தரும். துர்தேவதைகளை வரவழைக்கக் கூடிய செயல்களை செய்துவிடும்.

தேவையற்ற பொருள்களிலிருந்து தேவையற்ற துர்வாடை வரும். தேவையற்ற துர்வாடை துர்குண தேவதை தேடி வரும். துர்வாடைக்கு நுண்கிருமிகள் வரும். துர்கிருமிகள் தொற்று
நோய்களை பரப்பும். தேவையற்ற எண்ணங்களை மனதில் உண்டாகும்.

அதனால் அதிலிருந்து வரும் ஒரு வகையான காற்று மற்ற இடங்களிலுள்ள நல்ல காற்றையும் கெட்ட காற்றாக மாற்றிவிடும். அதனால் வீடுகளில் தேவையற்ற பொருள்களை சேமித்து வைக்காதீர்கள். பழைய பொருள்களை உடனே அகற்றிவிடுங்கள். இல்லை எனில் குப்பை நோய் பரப்பும். கிருமிகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.

வீட்டுக்கு வெளியிலும் உள் வாசல்களில் கண்ணுக்குத் தெரியும் படியாக நடை பாதை வழியில் குப்பையை போடாதீர்கள். வாசலில் நுழையும் பொழுது செருப்பு துடைப்பம் வைக்காதீர்கள்.


சில நாட்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பொருட்களை போட்டு வைக்காதீர்கள். தேவைப்படும் போது எந்த பொருளாக இருந்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். மிக பழமையான பஞ்சலோக பொருட்களாக இருந்தால் பாதுகாக்கலாம்.

வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவாள். பழைய துணி தேவை அற்றதை வைக்கவே வைக்காதீர்கள். தூய்மையாக வீட்டையும் நாட்டையும் வைத்தால் போதும். தொய்வீகம் ஆட்கொள்ள ஆரம்பித்து விடும். வீடும் நாடும் மகாலட்சுமியே நிறைந்து இருப்பாள்.

🌹சிவம்மா🌹

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US