ஒரு உத்தமன் உழைப்பதில் பெரிய ஜாம்பவானாக இருந்தார். ஆனால் அவர் தன்னை அறியவில்லை. ஆனால் அவரைப் பற்றி முழுவதும் அறிந்திருந்த யோகி ஒருவரை தேடி சென்றான்

யோகியோ “நீ வருகிறேன் என்றால் உடன் வந்துவிடு மகனே” என்றார்.

உடனே வா என்றதால் உத்தமனும் உடனே வந்து விட்டான்.

உத்தமனை பற்றி அவரது குடும்பத்தினரும் அறியாததால், அவர்கள் யாருக்கும் உத்தமன் யோகியாக விருப்பமில்லை.

குருவின் குடிலில் உத்தமன் தங்கினான். உத்தமனின் உறவுகள் அனைவரும் அழுது புரண்டு குருவிடமிருந்து கூட்டிச் சென்றார்கள். மீண்டும் உத்தமன் இரவோடு இரவாக குருவைத் தேடி வந்துவிட்டார். குரு காலை விடிந்ததும் பார்த்தால் தனது கால் அடியில் உத்தமன் இருந்தான்.

தன்னை தேடி வந்த சிஷ்யன். நான் தேடிய சிஷ்யன் எங்கே? என்று இறைவனிடம் கேட்பார். இறைவனும் வருவார் என்பார்.

அன்றே உத்தமன் வந்தான். வா மகனே என்று ஆசையாக தடவி தருவார். அவனை ஆசிரம வேலைகளிலும் யோகத்திலும் ஈடுபடுத்துவார். உத்தமன் குடும்பத்தார் மறுநாள் அங்கு வந்து விடுவார்கள். உறவினர்கள் “சகல செல்வங்களும், சகல சம்பத்துக்களையும் அனுபவித்த உத்தமன், பல காலம் எங்களோடு இருந்தவர். அவரால் எப்படி யோகியாக முடியும். ஒருவர் யோகி ஆக யோக்கியதை வேண்டும். போகத்தில் இருந்தவர் எப்படி யோகத்தில் வர முடியும். அதனால் இவர் யோகியாக கூடிய வாய்ப்புகள் அவருக்கு இல்லை” என்று கூறினார்கள்.

குரு கூறினார். தங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தாங்கள் அவரோடு சில நாட்கள் வாழ்ந்து விட்டு பின் அவரை அழைத்து செல்லுங்கள் என்றார். உடனே உறவினர்கள் சரி என்று கூறினார்கள்.

உத்தமா நீ சென்று ஊரில் யாசித்துவா என்றார்.

சிஷ்யனிடம் உற்றார் உறவினர்களையும் ஒவ்வொரு திசைக்கு சென்று யாசித்து வரச்சொல் என்றார்.

இதில் சிலர் யாசிக்கவே செல்லவில்லை. சிலர் யாசித்து உணவு கிட்டவில்லை. சிலர் உணவில் வேண்டாத பொருளை யாசகமாக பெற்று வந்தார்கள். இன்னும் சிலர் பசியோடு வந்த சத்திரத்தில் தங்கினர்.

உத்தமன் கொண்டு வந்த உணவை அனைவரும் பகிர்ந்து கொண்டார்கள்.

இவ்வாறு ஐந்து நாட்களும் உப்பு இல்லாத உணவு, கலந்த உணவு பல உணவுகள் கிடைத்தது.

இவ்வாறு நாட்கள் செல்ல, உறவினர்கள் உடல் வருத்தம் உற்றவர்களாக ஆனார்கள்.

யோகியிடம் உறவினர்கள் கூறினார்கள். உத்தமன் மட்டுமே யோகியாக கூடிய யோக்கியதையை பெற்றிருக்கிறார். நாங்கள் இனி அவரை அழைத்துச் செல்ல போவதும் இல்லை.

உத்தமனின் தாய் தங்களுக்கு இவரை தாரைவார்த்து தருகிறேன் என்றாள். எங்களால் தங்களோடு தங்க இயலாது. வீடு வாசலை துறக்க முடியாது. எங்களால் ருசியை துறக்க முடியாது. உத்தமனை அழைத்துச் செல்லவும் எங்களால் முடியாது. உத்தமனை அழைத்துச் சென்று அந்த பாவத்தையும் நாங்கள் சுமக்க விரும்பவில்லை.

அதனால் இந்த ஆசிரமம் சிறப்பாக வளர அவரை விட்டுச் செல்கிறோம். எங்களால் முடியாத ஒன்றை ஓரு யோகி செய்யும் போது தான் அது சாதனையாக ஆகிறது. எங்களால் முடியாத சாதனையை யோகமாக செய்யும் யோகிக்கு தலைவணங்குகிறோம் என்றார்கள்.

இதன் கருத்து என்னவென்றால் யோகியானவன் பிறந்ததே அனைத்தும் துறந்து இறைவனை அடையவே.

துறவி துறவில் துறந்தது, உடலையும், உயிரையும் என்பதை யாவரும் அறிய வேண்டும்.

காரணம், ஆசைகளோடு வாழ்வது தான் உலகம். ஆனால், மெய்யோகிக்கு வாழும் நாட்களில் ஆசைகளே இல்லை. உறவுகளையும், உடையான உடலையும் விட முதலில் இறைவனை அடைவதுதான் அவர்களது லட்சியம். அதனால் உறவுகளோடு துறவி வாழ குரு விரும்புவதும் இல்லை, தங்களோடு தங்க அனுமதிப்பதுமில்லை. சிஷ்யன் என்று கூறி அவர்களை இறைப்பயணத்தில் அனுமதிப்பதும் இல்லை. தாங்கள் மட்டுமே பயணிப்பார்கள் மெய்யில் மெய்யான சிஷ்யர்கள் இருந்தால் அவர்களுடன் மட்டும் பயணிப்பது உண்டு

🌹🌹சிவம்மா🌹🌹

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US