ஒருவர் குருவிடம் வந்து ஞானம் வேண்டும் என்றான்.
யோகம் என்ன கடை பொருளா என்று குரு கேட்டார். அறிவு பரவைராக்கியம் வேண்டும் என்றார்.
உடனே குரு கூறினார். மகனே பஞ்சபூதங்களையும் ஒரே இடத்தில் கண்டு வா. அது மட்டும் அல்ல, பஞ்சபூதத்தை எனக்கு ஓரே இடத்தில் காட்ட வேண்டும். பிறகு உனக்கு யோகம் கற்று தருகிறேன் என்றார்.
சரி என்று தேடி சென்றான். சிலரிடம் கேட்டான். சிலவற்றை படித்தான். பின் குருவிடம் ஓடி வந்தான். நம்முள் பஞ்ச பூதம் காட்டு என்றார். ஐம்பூதமும் நம்முள் என்றான்.
எனக்கு ஐந்தாவது பூதம் காட்டு என்றார். தெரியலை சாமி என்றான்.
குரு கூறினார். ஐந்தாவது பூதத்தை யானே காட்டுகிறேன். மீண்டும் தேடி விட்டு வா
என்றார்.
ஞானிகள் யோகிகள், ஏன் ஆறு, குளம், ஏரி, கடல் என்று தேடி ஓடி போகிறான். யோசித்தான் உடனே ஓடி சென்று குருகுலத்தில் உள்ள குளத்தை அடைந்தான்.அங்கு அமைதி சூழ்ந்து இருந்து. காற்று அவனை வரவேற்றது. குளத்தை கண்டதும் அவன் அத்தனை ஆனந்தம் அடைந்தான். அவன குளத்தில் ஆகாய தோற்றத்தினை கண்டான்.
குருவை தேடி சென்று மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் இருப்பதை காட்டினான்.
குருவும் அவனுக்கு ஆகாய தரிசனத்தின் சூட்சமத்தை காட்டினார்.
மட்டற்ற மகிழ்ச்சியில் குளக்கறையில், ஆகாய தரிசனத்தோடு தியானம் செய்யலானான்.
தியானம் பல மணி நேரங்களை கடந்தது.
பல மணி நேரத்தில் தபமாக தொடர்ந்தால் சில மணி துளி நிமிடங்களில் ஆகாய தரிசனத்தை காணலானான்.
🕉️சிவம்மா🕉️