ஒரு முனிவரிடம் சென்று ஒரு விவசாயி கேட்டான், சாமி நான் யோகியாக வேண்டும். அதற்கு என்னை எதையாவது செய்யுங்க சாமி என்றான்.

அதற்கு அவர் முதலில் நீ நல்ல யோக்கியனாக இருக்கிறாயா? என்று கேட்டார்.

ஆமாம் சாமி. இப்போ உங்கள் முன் நின்று பேசும் அளவிற்கு நான் யோக்கியன் தான் சாமி. என்னை சுத்த மனசுக்காரன் என்று சொல்லுவாங்க என்றான்.

முனிவர் கூறினார் துறவு என்பது தன்னை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது என்பது உனக்கு தெரியுமா என்றார்.

தெரியும் சாமி என்றான்.

அவ்வாறு என்றால், நீ வீட்டிலேயே துறவு எடுத்து இருந்து கொள் என்றார்.

சாமி. சாமி வீட்டில் துறவு இருந்தேன். ஆனால் அங்கு துறவியா இருக்கிறது, துறவு இல்லையென்று புரிந்து கொண்டேன். அந்தத் துறவு ஒன்றும் உயர்ந்ததொரு துறவாக எனக்கு தெரியவில்லை என்றான்.

துறவு என்றால் உயர்ந்ததொரு துறவு இருக்குமென்று புரிஞ்சுகிட்டு தான் இக்கு வந்துள்ளேன்…ஒரு முனிவரிடம் சென்று ஒரு விவசாயி கேட்டான், சாமி நான் யோகியாக வேண்டும். அதற்கு என்னை எதையாவது செய்யுங்க சாமி என்றான்.

அதற்கு அவர் முதலில் நீ நல்ல யோக்கியனாக இருக்கிறாயா? என்று கேட்டார்.

ஆமாம் சாமி. இப்போ உங்கள் முன் நின்று பேசும் அளவிற்கு நான் யோக்கியன் தான் சாமி. என்னை சுத்த மனசுக்காரன் என்று சொல்லுவாங்க என்றான்.

முனிவர் கூறினார் துறவு என்பது தன்னை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது என்பது உனக்கு தெரியுமா என்றார்.

தெரியும் சாமி என்றான்.

அவ்வாறு என்றால், நீ வீட்டிலேயே துறவு எடுத்து இருந்து கொள் என்றார்.

சாமி. சாமி வீட்டில் துறவு இருந்தேன். ஆனால் அங்கு துறவியா இருக்கிறது, துறவு இல்லையென்று புரிந்து கொண்டேன். அந்தத் துறவு ஒன்றும் உயர்ந்ததொரு துறவாக எனக்கு தெரியவில்லை என்றான்.

துறவு என்றால் உயர்ந்ததொரு துறவு இருக்குமென்று புரிஞ்சுகிட்டு தான் இக்கு வந்துள்ளேன் என்றான்.

இப்பொழுது நீங்க எனக்கு உதவி செய்யுங்கள் என்றான்.

இறைவனுக்கு தன்னை கொடுக்க என்ன செய்ய வேண்டுமென தெரியுமா? நாடு நகரம் எல்லாம் தியாகம் செய்ய வேண்டும்.

இல்லறத்தான் இல்லறத்தில் இருந்து நல்லறம் செய்ய வேண்டும். இல்லற துறவு என்பது குடும்பமே உனக்கு உதவிட வேண்டும். அவ்வாறு செய்வார்களா தெரியலையே சாமி. சொல்லுங்க சாமி.

நீ பெரிய தியாகங்கள் எல்லாம் செய்ய வேண்டும்.

சரி சாமி.. நான் இப்பொழுதிலிருந்த உங்களுடன்தான் இருக்கணும்.

இல்லை என்றார். நீ இல்லற துறவில் இருந்து நீ ஏதாவது செய்ய வேண்டும்.

சரி உனக்கு இல்லற துறவுக்கு மனைவி மற்றும் குடும்பமே உதவி பண்ண வேண்டும். அதனால் இல்லற துறவு இருந்து வா. உன்னோட நாடு, நகரம் வீடு எது இருந்தாலும், யார் வந்து கேட்டாலும் இல்லறத்தில் இருந்து கொண்டு தானம், தர்மத்தை இல்லை என்று சொல்லாது செய்து வா, போ என்றார்.

நீ இல்லறத்துறவில் இருக்கும்பொழுது, தானம் தர்மமாக எதை கேட்டாலும் கொடுத்து கொண்டே இருக்கணும் சரியா என்றார்.

சாமி, சாமி அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். என் குடும்பத்தினர் அதை எல்லாம் செய்ய விட மாட்டார்கள்.

அப்படியென்றால் நீ இல்லறத்தில் துறவு இருக்க முடியாது.

சரி சாமி எனக்கு எவரும் வேண்டாம், உங்களுடன் இருந்தால் போதும், துறவு கூட வேண்டாம்.

முனிவர் விட்டில் சொல்லி விட்டு வா என்று சொன்னார்.

விவசாயி வீட்டிற்கு சென்று சொத்து சுகம் எல்லாத்தையும் கொடுத்து விட்டு என்னை மட்டும் கொண்டு வரேன் என்றான்.

வீட்டுக்கு சென்றவன் இல்லற துறவு எடுக்க போறேன் என்றான்.

சரி தாராளமாக எடுத்துக்கோங்க என்றார்கள்.

இனி என்னை யாரும் என்னை காண வந்தால், வருபவர்கள் எதை கேட்டாலும், நானும் நீங்களும் தர வேண்டும் என்றான்.

அது முடியாது. நீ இங்கேயே இருந்து விடு என்றார்கள்.

அப்படியென்றால், நான் சொத்து சுகத்தை எல்லாம் தானம் தந்தாக வேண்டும். நான் அப்படியே தரப்போறேன் என்றான். தயவு செய்து எல்லாரும் எனக்கு விடுதலை பத்திரம் எழுதித்தாங்க என்றான்.

உடனே அவங்க குடும்பமே, சொத்து சுகம் யாருக்கு எதுவும் தர வேண்டாம். நீ பாட்டுக்கு ஓர் ஓரமாக உட்கார்ந்திரு, நாங்கள் உன்னை பார்த்துக்கிறோம் என்றார்கள்.

அது எல்லாம் முடியாது.

குடும்பமே, எங்களுக்கு சொத்து சுகம் வேண்டும் எனக் கூறியது. தயவு செய்து நீ வேண்டுமானால் துறவியாக எங்காவது செல்லுங்கள், ஆனால் எங்களால் சொத்து சுகத்தை எல்லாம் தர முடியாது என்று கூறினார்கள்.

உடனே ஆனந்த கூத்தாடினான்.

அவர்கள் சொத்து சுகத்தை எழுதி வாங்கி கொண்டார்கள்

உடனே முனிவரிடம் ஓடி வந்தான்.

சாமி விடுதலை பத்திரம். அவங்க என்னிடம் எழுதி வாங்கிட்டாங்க சாமி. ஆனால் சொத்து சுகம் தரவில்லை, பத்திரமும் தரவில்லை சாமி.

சரி அதுபோதும். இப்பொழுது நீ மற்றொரு காரியத்தை செய் என்றார்.

சொல்லுங்க சாமி.

உன் ஆசை பாசம் அனைத்தையும் நீ துறக்க வேண்டியது இருக்கும். ஒற்றை ஆடை, ஒரே ஒரு உணவு , ஒரே பாத்திரம், கொஞ்சம் உறக்கம், நிறைய விழிப்பு, காமம், கோபம் துறந்த பின் ஓர் அமைதி வரும். இந்த தியாகத்து பின் நீ பெரிய கடலில் நீர் இரைக்க வேண்டும் என்றார்.

சரிங்க சாமி என்றான். அவ்வளவு தானே என்றான்.

வியாசா!!

முனிவர் அவனுக்கு வியாசா என்று பெயரிட்டு‌ ஆனந்தப்பட்டார். தனது குடிலில் அவனை சேவகங்களோடு வேலைக்கு அர்ப்பணித்துக் கொள்ள சொன்னார்.

வியாசா, யோகியாக தனது வேலைகளை தொடர்வதும், தவம் போல் செய்வதுமாக இருந்தான்.

சில காலங்கள் கழித்து முனிவர் குடிலுக்கு வந்தார். குடிலில் ராமு ராமு என்றழைத்தார், குடியானவன் வரவில்லை. குடியானவன் குடியானவன் என்று அழைத்தார். அப்போதும் வரவில்லை. மெதுவாக அருகில் சென்றார். ராமு ராமு என்று அழைத்தார். அப்போதும் பார்க்க வில்லை. முனிவர் யோகி வியாசா என்றழைத்தார்.

விழித்தவன், யோகியா என்றார். மெல்ல கண் விழித்தவன், ஐயனே ஆழைத்தீர்களா, அழைத்ததற்கு வந்துவிட்டேன் என்றார்.

அப்போது முனிவர் கூறினார் .

சாமி, வீட்டை விட்டு வரும்பொழுதே ராமுவை விட்டு வந்து விந்து விட்டேன் என்று யோகியாக ஆன வியாசா கூறினான்.

நீ உன்னை மறந்து இருந்தாலும். நீ உன் பெயரையும் மறந்து விட்டாய். எப்பொழுது நீ யோகி என்ற எண்ணத்திற்கு வந்தாயோ அப்பொழொதே நீ யோகியாகி விட்டாய்.

உனது எண்ண மாற்றங்களை காண்கின்றேன். இம்மாற்றங்கள் யோகிக்கு சிறப்பானதாகும். ஒரு யோகியானவன் இறைவனுக்கு புகழ் சேர்க்குமாறு இருக்க வேண்டும். புகழின் உச்சத்துக்கு சென்றாலும், தாமரை இலை மேல் தண்ணீர் போல் இல்லறம் துறந்து வாழ வேண்டும்.

அப்போதுதான் அவனை எதுவும் சூழாது. அவனுள் எதுவும் புகாது இருக்கிறானோ அவனும் யோகி.

புகழை எவன் ஓருவன் தடுத்து நிறுத்த பழகுகிறானோ அவன் யோகியாக நிற்பான்.

எளிதாக புரியவைத்த குருவுக்கே நன்றி கூறி, தன் தவத்தை தொடரலானான்.

🕉️சிவம்மா🕉️

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US