முன்னொரு காலத்தில் சீனு என்பவன் இருந்தான். அவனுடன் அவன் தாய் வாழ்ந்து வந்தார்.

அவளுக்கு 100 வயதிற்கு மேல் ஆகியது. ஒருநாள் மூதாட்டியை பூமிக்கு பாரமாக நினைத்தான். அவன் மூதாட்டியை ஒரு மலைமேட்டில் கொண்டு விட்டு விட்டு வரவேண்டுமென்று நினைத்தான். காட்டுக்கு போய் வரலாம் என்று சொல்லி அன்பாகப் பேசி அழைத்தான்.

தலையில் கூடையில் வைத்து தலையில் வைத்து சுமந்து சென்றான். செல்லும் வழி மூதாட்டி கூடைக்குள் இருந்து கொண்டு குச்சிகளையும் சுள்ளிகளையும் உடைத்துப் போட்டுக் கொண்டே வந்ததாள். அவள் மலையடிவாரம் வந்தவுடன், மலை உச்சிக்கு சென்று மூதாட்டியை அமரவைத்து நீர் அருந்தி விட்டு உங்களுக்கும் உணவு எடுத்து வருகிறேன் என்று கூறினார்.

இதை கேட்ட உடன் மூதாட்டியும் புரிந்துகொண்டாள். ஆனாலும் அவள் அதை வெளி காட்டிக் கொள்ளவில்லை. அவனிடம் மகனே உணவும் நீரும் எடுத்து வருவதற்காத செல்கிறாய். பாதுகாப்பாக செல். இதோ வழி துணைக்காக ஊன்றுகோல் வைத்துக்கொள் என்றால். அத்தோடு பாதை தடுமாறி வேறு எங்காவது சென்று விடாதே. வழியில் நிறைய இலைகளையும் தழைகளையும் பிய்த்து போட்டுக் கொண்டு வந்துள்ளேன். அதை அடையாளமாக வைத்து கொண்டு வீடு செல் என்றாள். உடனே அவன் காதில் வாங்காது விரைவாக வீடு திரும்பினான்.

வீடு திரும்பியவன், வீட்டில் மூதாட்டி இருந்த இடத்தில் உள்ள கட்டில் பாத்திரம் அனைத்தையும் எடுத்து வெளியே எறிந்து விடவேண்டும் என்று சென்றான்.

அங்கு மூதாட்டியின் பொருள் எதுவும் இல்லை. கண்டவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் இதை சுத்தம் பண்ணி வைத்தார்கள் என்று நினைத்தான். இந்த கிழவியோட அனைத்து பொருள்களையும் யார் எடுத்து சென்றார்கள் என்று யோசிக்கலானார்.

அவனது மனைவி. அவள் தானே மூதாட்டியை வெறுத்தவள். அவள் சுத்தம் செய்ய வாய்ப்பில்லை. வேறு யார் என்று யோசிக்கும் முன், அவனது மகன் அங்கிருந்து சிரித்தவாறு ஓடி வந்தான்.

இங்கிருந்த பொருள்கள் எல்லாம் எங்கே என்றான். அப்பா உனக்கும் ஒரு நாள் வயதாகும். நான் உன்னை தலையில் தூக்கிச் சென்று எங்கேனும் விட்டு வரவேண்டும் அல்லவா, அதனால் அதுவரை உனக்கு வயோதிகத்தில் கட்டில் பாத்திரம் தட்டு எல்லாம் தேவைப்படும் என அதை எடுத்து வைத்துள்ளேன்.

உனக்கு வயதானவுடன் நான் உன்னை கொண்டு எந்த காட்டில் விட வேண்டும் என்றான்.

உடனே அவனுக்கு புத்தி வந்தது. இவன் யோசிக்க தொடங்கினான். இந்த நேரம் பசியில் இருப்பாளே. ஏதேனும் மிருகம் அவளை வேட்டை ஆடி இருக்குமோ என்று அழுது புரண்டான்.

மலையை நோக்கி ஓடினான்.

மலையடிவார இருட்டில் ஓர் குடில் தெரிந்தது. அதில் ஒரு வேடுவன் தங்கி இருந்தான்.

நேற்று வேடன் பார்த்து விட கூடாது என்று மறைந்து போனோம். இன்று எவ்வாறு தங்க இடம் கேட்பது. காலை மலையேறும் வரை தங்க இடம் கேட்க வெட்கமாக இருந்தது.

இருந்தாலும் அவனிடம் தங்க இடம் கேட்டான். வேடனும் தங்க இடம் தந்தான்.

உள்ளே இருந்து ஒரு குரல் ஒளித்தது. மிக களைத்து வந்து இருக்கிறான். சிறிது நீர் உணவும் அருந்த சொல்லு. காலையில் வீட்டுக்கு போகலாம் என்ற குரல் மிக கம்மியாக இருந்தது. வயதான காலத்தில் தாயை பராமரிக்கும் இவன் தான் மனிதன் என்று கூற, இவன் தூங்க சென்றான்.

இதற்கு முன்பு இவனைக் கண்ட வேட்டைக்காரனுக்கு இவனது செயல்களில் சந்தேகம் வந்தது. ஆனாலும் விட்டை விட்டு வேட்டைக்காரன் வெளியில் சென்று திரும்பும் போது ஏதோ பேச்சு சத்தம் கேட்டது வந்து பார்த்தால், அங்கு தன் தாயை விட்டு விட்டு திரும்புவது தெரிந்தது. உடனே அருகில் சென்று பார்க்க ஓடிப்போனான். மூலிகை பறிக்க வந்தேன் பாட்டி, என்ன வேண்டும்? ஏன் அழுகிறீர்கள்?

ஐயா தீக்குச்சியும், துணியையும் கொடுக்க எடுத்து வந்தேன். மறந்துவிட்டேன்.
அவனிடம் கொடுத்து விடுகிறாயா என்று கெஞ்சினாள். அவனிடம் கையில் இந்த துணியை சுற்றி கம்பில் தீப்பற்ற வைத்துக் கொண்டால், எந்த மிருகமும் அருகில் வராது என்று கூற சொன்னாள்.

அவனுக்கு புரிந்தது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றான்.

மகன் வரும் வரை காத்திருப்பேன் என்றாள்.

உடனே அவன் மூலிகையைப் பறிக்கும் கோணியில் கிழவியையும், கையில் இருந்த உணவை கொடுத்து மூலிகையைப் பறிக்கும் கூடையில் வைத்து மீண்டும் மலையடிவாரத்தில் உள்ள தன் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தான். சேர்த்தது மட்டுமல்லாது, மூதாட்டியை தன்னோடு வைத்துக் கொள்வதாக கூறினார். இத்தனை நாட்களாக அவள் மனம், மகனுக்கு பாரமாக இருந்த மனச்சோர்விலிருந்து விடுபட்டவளாக காணப்பட்டாள். அதனால் உணவும் உண்டு, குரலும் கம்பீரமாக இருந்தது. மெல்ல மெல்ல விடிந்தது.

விடிந்ததும் அவன் கவனம் மலையை நோக்கி ஓடத் தயாராக, ஐயா நான் வருகிறேன். அங்கு எனது தாய் என்ன செய்து கொண்டிருப்பாளோ என்று அழுது கொண்டே ஓடலானான்.

அப்போது மகனே மகனே ஓடாதே ஓடாதே என்று வீட்டில் இருந்து அவன் தாய் அழைக்க, ஓவென்று அழுதான்.

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US