தானம் எதிர்பார்ப்பு இல்லாதது. தர்மம் கர்மம் கழிப்பது. தர்மத்தை பலவித பாவ தோஷங்கள் போக செய்ய வேண்டும்.
ஏழை முதல் பணக்காரன் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ற தர்மத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
63 நாயன்மார்களில் கௌமீனம், திருவோடு அழித்து இறைவனையே வரவைத்தவர்கள் உண்டு.
துணி துவைப்பது, குளம் தூர் வாருவது போன்று உழைப்பை தந்து இறைவனையே நெகிழவைத்து தெய்வ நிலை அடைந்தார்கள்.
பொருள் இல்லாது ஈசனுக்கு கல் எரிந்து பூஜை செய்து மனதால் கோயில் கட்டினார். சிறத்தையாக இறைவனுடன் கலந்தார்கள்.
இறைவனுக்கு குங்குலியம், சந்தனம், வாசனை முகராது மலர் சாத்தி மனம் மகிழ்தார்கள்.
உணவு இரவு பகல் பாராது எதை கேட்டாலும் அதாவது பெற்ற குழந்தையையே கேட்டாலும் தந்து தொண்டு ஆற்றியவர்களும் உண்டு.
இறைவனே இவர்களிடம் யாசிக்க வந்தார்கள். இல்லை என்னும் சொல்லை செல்லாத
புண்ணியார்கள்.
மெய் ஞானம் உடையவர்கள்.
ஊர் ஊராக சென்று ஈசனை தரிசனம் செய்து, பாடல் பாடி உழவாரப்பணி செய்தார் அப்பர்.
இறைவனது உள்ளம் கவர்ந்தவர்.
எதை கேட்டாலும் சிவனடியார் தரும் தொண்டில் மனைவி, குத்தல், தன்னையும் தந்து இறைவனை நாடினார்கள்.


 
						
									 
						
									 
						
									 
						
									 
						
									 
						
									