சுந்தரர் பாட்டை கேட்க வேண்டும் என்று ஈசன் திருமணத்துக்கு வயோதிகர் கோலம் பூண்டார்.
சுந்தரருக்கு அன்று கல்யாணம் என்பது அனைவரும் அறிந்ததே.
திருக்கல்யாணத்தில் சுந்தரரை மணக் கோலத்தில் காண வேண்டும் என்றும் நினைத்த இறைவன் வயோதிக வேடமிட்டு கல்யாண மண்டபத்தில் நுழைந்தார்.
ஈசனது தனது கையில் பழைய கிழிந்த ஓலைச்சுவடியோடு வந்தார்.
சுந்தரா உனது பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்த ஓலையில் அடிமை சாசனம் உள்ளது என்றவாறு ஈசன் தனது நாடகத்தை சுந்தரரின் கல்யாண மண்டபத்தில் நடத்தலானார்.
திருமண விழாவில் ஊர் பெரியவர்கள் முன் சென்று நிறுத்துங்கள் கல்யாணத்தை என்றார், ஈசன்.
கல்யாண மணமகனான சுந்தரர் எனக்கு அடிமை என்றார்.
சுந்தரக்கு தனது கல்யாண நேரத்தில் வந்து இவ்வாறு பிரச்சனை புரியும் முதியவரை பார்க்க கோபம் வந்தது.
முதியவரை பார்த்து தாங்கள் யார். ஏன் எனது கல்யாணத்தை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டார்.
ஊர் பெரியோர்கள், ஊர்மக்களும் அதிர்ச்சியோடு கல்யாணத்தில் நடக்கும் கூத்தை கவனித்து கொண்டு இருந்தார்கள்.
யாராலூம் எதுவும் பேச முடியவில்லை.
மூகூர்த்த நேரமும் போய் கொண்டே இருந்தது.
சுந்தரர் அந்த அடிமை சாசனத்தை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
சுந்தரரே தனக்காக வாதிட்டார்.
சுந்தரர் தனது பாட்டன் எழுதி தந்த அடிமை சாசனத்தின் ஓலைச்சுவடியை தான் காண வேண்டும் என்றார்.
முதியவரோ ஓலையை தருவதாகவோ தர்க்கத்தை விடுவதாகவோ இல்லை.
இவர்களின் வாதத்தில் வயோதிகர் ஒரு முடிவுக்கு வந்தார்.
உன் பாட்டன் கையொப்பத்தை காண மூல பத்திரங்களை எடுத்துக் கொண்டு வா என்றார்.
மூல பாத்திரத்தில் உள்ள கையப்பமும் எனது ஓலை சுவடியில் உள்ள கையொப்பத்துடன்
இணைந்து போக வில்லை என்றால், உன்னை யான் விட்டு விடுவேன் என்றார்.
வீட்டில் இருந்து மூல பத்திரம் கொண்டு வந்தார் சுந்தரர்.
ஈசனது ஓலைச்சுவடியில் உள்ள கையப்பமும், சுந்தரர் பாட்டனார் கையொப்பம் ஓற்றுப் போனது.
சுந்தரர் உடனே தான் ஓலைச்சுவடியை பார்க்க வேண்டும் என்றார்.
சுந்தர் ஓலை சுவடி பார்த்தார். ஓரே மாதிரியான கையொப்பமாக இருந்தது.
சுந்தர் வயோதிகரிடம் இருந்த ஓலை சுவடியை வாங்கிப் படித்து விட்டு தருவதாக கூறி பின் ஓலைச்சுவடியை கிழித்து, கல்யாணத்தில் எரிந்து இருந்து கொண்டிருக்கும் யாகத்தில் எறிந்து விட்டார்.
இதை கண்ட முதியவர் மிக பிரம்மாண்டமாக சிரித்தார்.
பார்த்தீர்களா, இவன் இப்படி செய்வான் என்று எனக்கு தெரியும்.
அதனால் தான் நான் ஓலைச்சுவடியின் மெய் நகல் என் இடுப்பிலே வைத்து உள்ளேன்.
பொய்யான நகலை தான் உன்னிடம் நான் தந்தேன் என்றார்.
சுந்தரரால் எதுவும் பேச முடியவில்லை.
சரி வருகிறேன் அடிமையாக என்றார்.
உங்கள் வீடு எங்கு உள்ளது கூறும் என்றார்.
வயோதிகர் கூறினார். இதே ஊரில் தான் என் வீடு உள்ளது.
சரி வா என்னோடு நீ எனது அடிமை என்று கை பிடித்து இழுத்து அழைத்து சென்றார்.
சுந்தரர்க்கு வேறு வழி தெரியாது அவரோடு சென்றார்.
ஈசன் ஊர் மக்களின் கவனத்தையும் திருப்பி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
வயோதிகறோ கோயிலுக்குள் சென்றார்.
தங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றார் சுந்தரர்.
இதுவா உங்கள் வீடு என்று கேட்டார்.
இதுதான் என் வீடு என்றார் முதியவர்.
பைத்தியக்காரா என்னோட கல்யாணத்தை நிறுத்தி விட்டு, கோயிலை போய் எனது வீடு என்கிறாயா?
ஆம். அதிலும் கால காலமாய் இருக்கிறேன் என்று வேறு கூறுகிறாய்.
பைத்தியம் பைத்தியம் எனது கல்யாணத்தை வேற நிறுத்தினாயே.
முத்தின பைத்தியகாரா என்று திட்டினார்.
வயோதிகர் மெல்ல மெல்ல அருகில் வந்து, நீ எனது அடிமை, எனக்காக ஓர் பாட்டு பாடேன்
என்று கேட்கிறார்.
ஈசன் ஆன முதியவர் உனது பாட்டை கேட்க தான், யான் எத்தனை தூரம் பயணம் செய்து வந்தேன் தெரியுமா என்றார்.
நீ இப்போது என்னை போற்றியும் புகழ்ந்தும் பாடு என்று கெஞ்சி கெஞ்சி வேண்டுகிறார்.
என்னை ஓரே ஒரு முறை வர்ணித்து ஓர் பாட்டு பாடு என்றதும், சுந்தரக்கு கோபம் எல்லை இல்லாது போனது.
சுந்தரர் கத்தினார், எனது கல்யாணம் செய்ய விடாது செய்தது மட்டுமல்லாமல், தன்னை போற்றியும் வர்ணித்து புகழ்ந்து பாடனுமாம். பைத்தியம் பைத்தியம்.
மீண்டும் பாட சொல்லவும், பைத்தியகாரா என்று கத்தினார்.
முதியவரோ விடுவதாக இல்லை. பாட்டை கேட்டே திரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
என்னை பற்றியே ஏதாவது ஒரு பாடு என்றார்.
சுந்தரர் கோபத்தில் பாட்டு பாட மறுத்து விட்டார்.
உடனே வயோதிகர் கூறினார்.
சுந்தரர் பாட்டு பாட மாட்டானாம், அதுவும் என்னை புகழ்ந்து பாட மாட்டானாம்.
வயதானவராக வந்தவர், தனது கால்களில் உள்ள பாத சுவடை காலால் தூக்கி எறிந்து விட்டு. கோபமாக கையில் வைத்து இருந்த கைத்தடியும் தூர எரிந்து விட்டு, அப்பனே ஈஸ்வரா என்னை பைத்தியக்காரன் என்கிறான் சுந்தரன். என்னை புகழ்ந்து பாடவும் மாட்டேன் என்கிறான். இது என்ன நியாயம் என்று கேட்டு கொண்டு சத்தமாக கத்தி அழுது கொண்டே கருவூலத்தை நோக்கி
ஓடுகிறார்.
குறுக்கே உள்ள கல் நந்தியையும் ஊடுருவி கொண்டு ஈஸ்வரன் விற்றிருக்கும் மூலஸ்தான மையத்திற்கு சென்று மறைகிறார்.
பெரியவர் மறைந்தை கண்ணால் கண்ட போது தான் சுந்தருக்கு வந்தது ஈசன் என்று தெரிந்தது. க்ஷஇதைக் கண்ட சுந்தரர் அழுது புலம்பினார்.
ஈசனே வந்து தனது பாட்டை கேட்க வந்தும், தான் அவரை திட்டியதோடு நில்லாது, ஓரு பாடல் கூட ஈசனை பற்றி பாடாது போனதுக்கு, சுந்தர் சொல்ல முடியாத துன்பத்தை பட்டு அழுததால் மீண்டும் ஈசன் வானில் தோன்றி, சுந்தரா ஒரு பாட்டு பாடு என்றார் .
எம்பெருமானே எத்தனை பெரியவர் தாம். தங்களை பைத்தியம் என்று கூறிவிட்டு, தங்களையே வேறு திட்டி விட்டேன் என்று கூறியவாறே மீண்டும் அழுகிறார்.
ஈசன் “சுந்தரா, உன் பாட்டைக் கேட்கவே யான் வந்தோம்” என்கிறார்.
சுந்தரர் மிக வருந்தியவாறு, நான் தங்களை எப்படி வர்ணித்து பாடுவேன் என்றுஎனக்கு தெரியவில்லை என்றார்.
சுந்தரருக்கு இறைவனே தன்னை பாட சொல்லி பாட்டின் முதலடியை எடுத்து கொடுக்கிறார்.
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன்.
வைத்தாய் பெண்ணை வெண்ணெய்நல்லூர் அருள் கடலே .
அத்தா உனக்கு ஆளாய் இனியல்லேனே .
என்ற சுந்தரரா பாடிய பாடலை கேட்ட ஈசன், உடனே எம்பெருமான் அம்மையோடு விடை அமர்ந்தவாறு வெட்ட வெளியில் தோன்றி சுந்தரக்கு காட்சி தந்தார்.
ஈசனே வந்து திருவிளையாடல் புரிந்த ஊரான திருவெண்ணை நல்லூரில் இன்றும் ஈசனது பாத குறடை காணலாம்.
ஈசனது பாதச் சுவடுகளின் அளவு சாதாரண மனிதர்கள் பாதச்சுவடை விட அகலமும் நீளமும் அதிகமாக உள்ளது.
அதனோடு மிக உயரமான ஈசனது கைத்தடி இருந்தது. இன்று இறைவனது கை தடி காணாமல் போய் விட்டது.
இறைவன் அதிகமாக திருவிளையாடல் செய்து மதுரையம் பதியில் மற்றும் தில்லை
தியாகராஜனான ஈசன் எத்தனையோ திருவிளையாடல்கள் நடத்தியுள்ளார்.
ஆனால் ஈசன் எவ்விடத்திலும் தான் வந்து திருவிளையாடல் புரிந்து சென்ற இடத்தில் எந்த அடையாளத்தையும் விட்டுச் சென்றது இல்லை.
இறைவனது அணிந்திருந்த பாதக் குறடு இன்றைய அளவிலும் திரு வெண்ணை நல்லூர் ஊரில் உள்ளது.
நாம் அனைவரும் சென்று காணலாம். ஐயனின் பாத சுவடுகளை தரிசனம் செய்யலாம்.
சுந்தரருக்கு கல்யாணமான கொலு மண்டபம் கோயில் அருகில் உள்ளது.
ஊரில் நடுவே கோயில் உள்ளது .
முக்கியமாக இவ்வூரில் வெண்ணை நல்லூர் மக்கள் பெரும்பாலும் கைலாய யாத்திரை சென்று வந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஈசனது திருவிளையாடலே திருவிளையாடல்.
🌹சிவம்மா🌹.