கழுதை ஒன்று இருந்தது. அது தனது எஜமானுக்கு விசுவாசமாக இருக்க நினைத்தது.
ஆனால் தனக்கோ வயது ஆகி விட்டது. நம்மால் எஜாமனனுக்கு எந்த பலனும் இல்லை.
அதனால் எதேனும் ஓர் உபகாரம் செய்ய நினைத்து, காட்டுக்கு சென்று காட்டெருமையுடன் பேசியது.
தான் நல்லது செய்ய வேண்டும். அதனால் எனது எஜமானுக்கு வேலை செய்ய எதேனும் ஓர் உதவி செய்க என்றது.
காட்டெருமை, உனக்காக நானே உழைக்க போகிறேன் என்றது.
இருவரும் பேசியவாறு ஊருக்குள் வந்து, இரவானதும் இருவரும் பேசிய படி கழுதை படுக்கும் இடத்தில் காட்டு எருமை படுத்தக் கொண்டது.
மறுநாள் இதை கண்ட எஜமானனுக்கு சந்தோசம்.
காட்டெருமையை கட்டி போட்டான்.
நல்ல வேலை செய்ய வைத்தான்.
நல்ல பணம் சம்பாதித்தான்.
கழுதை துவைக்க போக காட்டு எருமை கிடைத்தது என்று இதை பற்றி தான் ஊரெல்லாம் பேச்சு.
சில காலம் ஆனது. காட்டு எருமையால் ஈர துணியை தூக்கி முடியவில்லை.
தனது நண்பன் கழுதை வந்தால் நலம் என்று நினைத்தது.
இரவு ஒரு நாள் கழுதை வந்தவுடனே கழுதையிடம், நாம் சொன்ன மாதிரி இடம் மாறலாம்
என்றால் கழுதை ஏற்று கொள்ளாது. அதனால் தந்திரமாக தான் நடக்க எண்ணியது.
காட்டெருமை, காட்டை ஒரு முறை சுற்றி பார்த்து வரலாம் என்றது.
கழுதையும் ஏற்று கொண்டது.
எருமை கட்டை அவிழ்க்க, எருமை காட்டை நோக்கி ஓடியே விட்டது.
கழுதைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
எஜாமனனை ஏமாற்ற விரும்பாத கழுதை. காட்டெருமை தேய்ந்து கழுதை ஆனது என்று
எழுதி வைத்து விட்டு அதன் கீழ் படுத்து கொண்டது.
எஜமான் வந்தான். கழுதை கண்டதும் ஆனந்தம் கொண்டான்
கழுதை தேய்ந்து காட்டு எருமை ஆனது எனக் கூறி ஆடி பாடி மகிழ்ந்தான்.
கழுதை அளவில்லா ஆனந்தம் அடைத்தது.
எஜமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏழைக்கு உழைக்க தனது முதுகை காட்டியது.
🌹🌹சிவம்மா🌹🌹