விநாயகர் பாவம் பொல்லாதது
விக்னம் களையும் விநாயகர் .
பார்வதி புத்திரன். விநாயகர் பார்வதியின் செல்ல பிள்ளை.
விநாயகரை தொழுத பின், அவரை அவரது தாயிடம் சேர்ப்பதாக ஐதீகம்.
கங்கை கைலாயத்தில் இருந்து வருவதால், கங்கையில் விநாயகரை சேர்த்தால், விநாயகர் தனது தாய் பார்வதி தேவியிடம் செல்வார் என்று தான் இந்த சம்பிரதாயம் தொடங்கப்பட்டது.
இன்று மனித புத்தியால் விநாயகருக்கு வந்தது வினை.
விநாயகரை பெரிதாக செய்து, அவரை மிக சிறப்பாக வணங்கி, பின் கிணறு, குட்டை, ஆறு . கடல் போன்றவற்றில் போடுகிறேன் பேர்விழி என்று சாக்கடையான கூவத்திலும் போடுகிறார்கள்.
கடலில் போடும் விநாயகரை மிக பிரம்மாண்டமாக செய்து, அவரை வைத்து வணங்கி, ஆராதனை செய்து ஊர்வலமாக கொண்டாடி கடலில் விடுகிறேன் என்று பெயரில் போட்டு அடித்து உடைத்து, நீர் முங்க ஏறி மிதித்து, ஏன் இத்தனை பெரிய பாவ செயல்.
மண் அல்லாத POP மாவில் செய்தால் அது கரையாது. அதை கடலில் போட்டு கடலை மாசு செய்து. கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை மோசம் செய்து, கடலையும் துவம்சம் செய்து, நாம் கண்ட பலன் என்ன என்றால்?
நாம் இயற்கைக்கு கோபம் வர செய்து, பேரழிவை உண்டாக்குவதே ஆகும்.
🕉️சிவம்மா🕉️