யோகியிடம் ஒருவன் மன்றாட வந்தான்.
அவன் யோகியிடம் “சிவனை நான் கும்பிடக்கூடாது. கோயிலுக்கு நான் வர கூடாது என்று சொல்லிட்டாங்க சாமி. காரணம் கூறுங்கள் சாமி. என்னை மாத்திக்கிறேன் சாமி” என்றான்.
யோகி கூறினார். வேகாத கனி காய் உண்டால் பாவம் ஆகாது. அது கோபமும் இல்லை.
ருசிக்காக ஓர் உயிரை கொன்று தின்பது பாவம்.
அதிலும் தன்னை கொல்ல போவதறிந்து, கொள்பவனையோ, தின்பவனையோ கண்டு பயந்து
மரணிப்பதால் பாவத்தின் தோசம் நம்மை சார்கிறது.
இறைவனுக்காக வாசிக்கும் இசை கருவிகள், யோகத்துக்கான மான் தோல், புலி தோல். இவ்வாறு எடுக்கப்படும் மிருகங்கள் கூட இயற்கை மரணம் எய்ததாக இருக்க வேண்டும் .
இல்லை என்னில் யோகம் பலிதம் ஆகாது.
இயற்கையாக இறந்த மிருகத்தின் தோல் பயன்படுத்த வேண்டும். மிருகங்களை கொன்று பயன் படுத்துவது கூடாது.
கோழி, ஆடு, மாடு, பன்றி போன்றவை வீட்டு விலங்குகள். இவை யாவும் சைவம் ஆகும்
சைவம் என்பது மனிதனுக்கு மட்டும் அல்ல, மிருகங்களிலும் சைவம் அசைவம் உண்டு.
சைவமிருகங்கள் நமக்கு உணவை வாரி வழங்கும். பூமிக்கு உறமாக்க பயன்படுத்தவே.
இந்த சைவ வீட்டு விலங்குகளின் பற்கள், கோரை பற்கள் இல்லை, அதாவது சிங்க பற்கள் இல்லை
இதனால் அசைவம் இல்லை. இந்த அசைவ உணவை உண்டு. நாம் மிருகமாக மாறுகிறோம்.
வயிறு என்பது அக்னி குண்டத்தை போன்றது. அதை முழுமையாக சுடுகாடாக மாற்றுகிறோம்.
இதனால் மனிதனுக்கு மிருக குணம் வந்து விடுகிறது.
மனிதன் ஜீவகாருண்ய குணத்தை இழந்து விடுகிறோம்.
இதனால் சைவம் தொழும் தகுதியை இழக்கிறோம்.
அசைவம் சாப்பிடும் விலங்குகளான பூனை, நாய் இவ்விரண்டும் மனிதனுக்கு ஊறு விளைவிக்கும் உயிர் இனத்தை வேட்டை ஆடும். உதாரணமாக, பூனை வீட்டில் உள்ள அனைத்து தானியங்கள் மற்று பொருட்களை எலியிடம் பாதுகாக்க வளர்க்க படுகிறது.
நாய் திருடர்களை பிடிக்க மட்டுமே பயன்படும்.
சுயநலத்துடன் சிந்திக்காதீர். முயல் மான் உடும்பு போன்றவற்றை வேட்டையாடவே ஆகும்.
அதனால் நாம் ஜீவகாருண்யமாக இல்லை எனில், சிவனை நேரடியாக தரிசிக்க தகுதியற்றவர்கள் ஆகிறோம்.
🌹🌹சிவம்மா🌹🌹