ஸ்ரீ ராகவேந்தர் குரு தொழுத மூல ராமர், ராகவேந்திரர் பரம்பரையாக பராமரிக்க வேண்டினார்.

குரு அழைத்தும், குரு பீடத்தை தாங்க சன்யாசம் என்றார் ராகேவேந்திர.

மூல ராமரோடு ஊர் விட்டு ஊர் செல்லும் வழியில் அடர்ந்த காடு இருந்தது.

அந்த காடு தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

தீ பற்றிய காட்டுக்குள் இருந்து ஓர் பெண் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தினாள் அலறினாள்.

பெண் அழும் சத்தம் கேட்ட ராகவேந்திரர், மழை பொழிந்து, காட்டு தீ அணைய மனம் உருக பாடினார்.

காட்டு தீயில் சிக்கிய பெண், ஓர் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு கத்தினாள்.

முகம் மட்டும் காண முடிந்தது ராகவேந்திரால்.

ராகவேந்திர் என்ன செய்வது என்று தெரியாது, மழைக்காக மனமுருகி பாடல் பாடினார்.

அப் பெண் காப்பாற்ற மழை வந்து காட்டு தீ அணைந்தது.

தீ அனைந்ததும், தன்னை காப்பாற்றுமாறு கூறியது அன்னை ஆதி பராசக்தி என்று அறிந்ததும்
பணிந்து தொழுது அழுதார்.

தாயே தங்கள் வந்து என்னிடம் காப்பாற்ற சொல்லி யாசிக்கலாகுமா என்று வினவினார்.

அன்னை தேவி கூறினாள். உனது யோக பலனை அறிந்தே யான் வந்தேன் ராகவேந்திரா.

இதோ எனது பாதங்கள் பட்ட இந்த கல்லை, உனது ஜீவ சமாதியின் போது இக்கல்லை போட்டு அதன் மேல் அமர்ந்து கொள்.

யான் நின்று காட்சி தந்த இந்த கல் அமரும் இடத்தில் உனது ஜீவ சமாதி நிகழும் என்றாள்.

கல் அமரும் காலத்தில் மகனே உன்னை யான் ஆட்கொள்கிறேன் என்றாள்.

அன்னை காமாட்சி ராகவேந்திருக்கு முக்திக்கு அருள் செய்தாள்.

அவரது தபத்தை நிறைவு செய்ய அம்பிகை நேரில் வந்தாள்.

🌹சிவம்மா🌹

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.