ஆவி உலகம் உண்டா?

ஆவி உலகம் நிச்சயமாக உண்டு.

உடலை உயிர் விட்டபின் அது ஆவி என்னும் உடலற்ற நிலையை அடைகிறது.

அந்நிலையில் அது சூட்சமமான தேகத்தை கொண்டிருக்கிறது.

இந்த சூட்சமமான தேகம் அவரவர்கள் கர்மத்திற்கு ஏற்றவாறு பிறப்பு எடுக்கும்.

பிறவாமை இருப்பது கர்மவினை பொருத்தே அமையும்.

ஒவ்வொரு உயிருக்கும் ஆவிகள் உண்டு.

ஆனால் அதற்கு உருவமில்லை .

உயிர்களின் ஆவி பிரபஞ்சத்தில் கறைந்து விடும்.

ஆனால் மனிதன் இறந்தால் ஆவி வடிவத்தினை அடைகிறார்கள்.

மனிதர்கள் இறந்தால் ஆவியை கூடிய உருவம் மனிதர்களுக்கு உண்டு.

ஏனென்றால் மரண ஜனனத்தின் பதிவான கர்மவினைகளுக்கு ஏற்றவாறு தான் உடல் எடுக்கப்படுகிறது.

மனித உடலில் இந்த உயிர், உடலை விட்டு போன பின் அது ஆவி என்னும் பொருள் தாங்கி ஆவி உலகத்துக்கே செல்லும்.

இந்த ஆவியை உயிர் என்று அறிந்தவர்கள் மட்டுமே அறிவர் உயிரே ஆவி என்று.

ஆவி கண்ணுக்கு தெரிவதில்லை என்பதால் ஆவி இல்லை என்று அர்த்தம் இல்லை.

அதிசய பிறவிகளுக்கும், புண்ணியவான்கள் ஒருசிலருக்கும் கண்ணுக்குப் புலப்படுகிறது.

ஆவி உலகம் உண்டு. அது இருள் உலகத்தாரின் உலகம்.

அருள் உலகத்தாரின் உலகம் வானுலகத்தில் சேர்ந்தது.

இருள் உலகத்தார் பூமிக்கு கீழ் உள்ள பகுதியை அடைவார்கள். நரக உலகம் என்று பெயர்.

பூமிக்கு மேல் சில பிரபஞ்ச நிலைகளிலும் தங்கியிருப்பவர்கள் உண்டு.

புவியில் மேல் இருளர்கள் உலகம் உண்டு.

இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து கொண்டே இருப்பார்கள்.

பூமியில் செய்த பாவ, புண்ணிய, கர்மவினைக்கும், தண்டனைக்கும் எற்றவாறு உடல் எடுப்பார்கள்.

ஆவி உலகத்திற்கு சென்ற பின் பல காலங்கள் உடலின்றி, உணர்வுகளோடு சுற்றி திரிவார்கள்.

பின் இவ்வுலகில் தரப்பட்ட மனிதனோ மிருகமோ தனக்கு தரப்பட்ட உருவம் தன் தண்டனையை இவ்வுலகில் இருக்கும் போது அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

தண்டனை காலம் முடியும் வரை உடலில் உயிர் இருக்கும்.

உடல் சென்றால் அங்கிருந்து ஆவி விடுவிக்கப்பட்டு மேலே எழும்பி போய் விடும்.

அவரவர்களின் ஆசையின்படி மீண்டும் உயிரினங்களாக மனிதர்களாகப் தோன்றுவதுண்டு.

இது ஒரு சுழற்சி ஆகும்.

🌹சிவம்மா🌹

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US