அண்ணாமலையார் கோயில் கொப்பரை தீபத்துக்காக தயார் நிலையில் உள்ளது.
கொப்பரையில் இறைவன் அர்த்தநாரியாக வரையப்பட்டு காட்சி தருவார்,இது செம்பால் செய்யப்பட்டது.
இதில் ஓர் அதிசயத்தை யான் கண்டேன்.
கொப்பரையில் காடா துணியால் திரியிட்டு, நெய் விட்டு ஏற்றுவார்கள்.
இது இரவும் பகலும் எரிவது உண்டு.
எரியும் போது தோன்றும் சூட்டினால், கொப்பரையினை சுற்றி பெயின்டினால் வரையப்பட்ட உருவம் வெப்பத்தால் உரிந்து போவது இல்லை.
அது மட்டும் அல்ல அதன் அருகில் செல்லும் தீப பந்தக்காரர்களை தீபம் தீண்டுவதும் இல்லை. இதுவே ஓர் அற்புதமான அதிசயம் ஆகும்.
இவ்விடம் இறைவன், இறைவிக்கு தனது உடலின் சரிபாதியை தந்த இடம் ஆகும். இறைவனே ஜோதியாக தரிசனம் தரும் இந்த கொப்பரை வணங்கதக்கது.
இது தூய செப்பு பாத்திரம் காரணம், இறைவன் செம்பொன் மேனியன் என்பதனாலேயே ஆகும்.
– சிவம்மா.