சித்திரா பௌர்ணமி யோகியர்களின் சித்திரை

சித்திரா பௌர்ணமி

யோகியர்களின் சித்திரை:

யோகியர்கள் சித்திரம் எண்ணும் வண்ண கலவைகளோடு கூடிய உணவு, உடைகளை தயாரித்து, தானங்களாக வழங்குவார்கள்.
தானம் மற்றும் தர்மத்தை வழங்குவதை முதன்மைபடுத்தவே மாதங்களில் முதல் மாதத்திற்கு சித்திரை என்று பெயர் வைத்தார்கள்.
சித்திரை மாதம் சூரியனின் ஆளுமை உடையது. இந்நாளில் தண்ணீர், மோர் போன்ற நீர் ஆகாரத்தையும் தானங்களாக வழங்க வேண்டும். இதற்காகவே நம் முன்னோர்கள் சத்திரம், சாவடிகளை வழிநெடுகிலும் வைத்தார்கள். சத்திரம் என்பது கல் மண்டபம்.
சாவடி என்னும் கடை தெருக்களிலும் தானங்களை செய்தார்கள். வீடுகளில் முன்புறம் திண்ணைகளை கட்டிவைத்து, திண்ணைகளில் இளைப்பாறுபவர்களுக்கு நீர் ஆகாரங்களை வழங்கினார்கள். இவ்வாறு வழங்கும் இடம் இல்லறம் ஆனது.
இல் என்பது வீடு .
அறம் என்பது தர்மம்.

இத்தகைய தர்மங்களை வீடு தேடிவரும் வழிப்போக்கர்கள் மற்றும் சிவ சாதுக்களுக்கு இல்லற தர்மமாக செய்து வந்தார்கள். வைணவத்தின் படியும் சிவத்துக்கு விருப்பமான ஜீவ காருண்யமாக
மிருகங்களுக்கும்
தாகம் தீர்க்கும் செயலை செய்து வந்தார்கள்.

அதனால் இந்த சித்திரையில் தான தர்மங்கள் செய்து
உலகத்தில் உள்ள சகல உயிரினங்களின் பசி போக்கி, ஜீவ கருண்யமாக வாழ்வோம்.

உயிர்களை கொன்று அதன் சதையை ருசிக்கும் கொடூர குணத்தை விடுத்து
நம்மை நம்பி வாழும் ஜீவன்களை வதைக்காது வாழ்வோம்.

ஜீவனைக் கொன்று தின்ற நாள் தீட்டு நாள் ஆகும். அன்று எந்த சாமியையும் தாங்கள் கும்பிட தகுதியில்லை. கும்பிட்டால் அதற்க்கான பலனும் இல்லை. அதனால் நம் மூதாதையர்கள் சைவம் என்னும் சிவத்தை ஜீவ காருண்ய புருசர்களாகவே இருந்து தொழுதார்கள்.
குருமார்களுக்கு விளக்கு மற்றும் ஒளி தரும் பொருட்களைத் தருவார்கள்.
இவ்வாறு வஸ்திரம், பொன், கோதானம், பூமி தானம், பொருள் போன்றவற்றை வழங்கி தங்கள் இல்லறத்தில் நல் விளக்கெறிய வேண்டுவார்கள்.

சைவத்தில் இருக்கும் சிவனடியார்களை கணம் செய்யுங்கள்.

யோகியர்களின் சித்திரை:

யோகியர்கள் குருவை தரிசனம் செய்து வருவார்கள்.
குருவாழும் இடத்திற்கு வேண்டிய உதவிகளை செய்வார்கள்.

குருவின் நிழலில் வாழும்
மெய் அன்பர்கள், சாதுக்கள், சன்னியாசிகள், யோகிகள் குருவை தான தரமங்களோடு தரிசனம் செய்வார்கள்.
சித்திரா பௌர்ணமியினை குரு பூர்ணிமா என்பார்கள். ஆதலால்,
யோகிகள் கட்டாயமாக குரு தட்சனையோடு, குருவை சிவமாக தரிசனம் செய்வார்கள்.
சிவமே குருவாக இருந்து
சித்தத்தில் உள்ள மாயையினை விலக்குவார்.
சித்தத்தில் உள்ள மாயை திரை போக்கிய வருடத்தின் முதல் மாதம்.
சித்தத்தின் திரையை விலக்க வரும்
இறைவனே மதியாகிய பௌர்ணமி ஆகும்.
இந்த மதி என்னும் இறைவனை நாம் குருவிடம் சென்று சூடிக் கொள்வது தான் யோகியரின் சித்திரா பௌர்ணமி ஆகும்.

சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா

Share this:

Leave a comment

[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US