அதிகாலை எழுந்து ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.

கங்கை தண்ணீர் கொண்டு விபூதியில்
சிவ லிங்கம் செய்து இறைவனுக்கு அலங்காரம் செய்து வெற்றிலை பாக்கு, பழம், ஊதுபத்தி, பூ மற்றும் குங்குலிய வாசனையுடன் சிவ புராணம் சொல்லி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

விபூதியால் செய்த சிவலிங்கத்தை பூஜை முடிந்ததும் விபூதியை
உதிர்த்து விபூதியை பௌத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். தினமும் நெற்றியில் இட்டு வரலாம்.

சிவ லிங்கம் செய்த விபூதியை உடல் நலம் சரியில்லாத வேலையில் சிறிதளவு விபூதியை நீரில் இட்டு அருந்தினால் உடல் நலம் குணமாகும்.

லிங்கம் செய்ய கங்கை நீர் இல்லை என்றால் மழை நீரை உபயோகிக்கலாம்.

மழை நீரில் லிங்கத்தை செய்யலாம் மழை நீர் சுத்த மான ஆகய கங்கை அதாவது மழை நீர் ஆகும்.

சிவ பூஜையில் 108 முறை சிவனது திரு நாமம் ஆகிய ஐந்து எழுத்து மந்திரத்தை ஜெபம் செய்து வழி படவேண்டும்.

குறைந்தது ஓரு மண்டலம் சிவ பூஜை செய்யவும்

மண்டல பூஜை முடியும் வரை
முதல் நாள் செய்த சிவலிங்கத்தையே பூஜை செய்யவும்

சிவ வழிபாட்டில் தினமும் செய்ய வேண்டியது
மானசீக பஞ்சாட்சரம் சொல்லுவது ஏதேனும் ஒருவருக்கு ஒரு வேலையாவது உணவு இட்டு பின் உண்பது,
அல்லது உணவை தேடி சென்று தருவது என ஏதேனும் ஓர் உயிருக்கு உணவு உண்ண தரவேண்டும்.

சிவ பூஜையின் முக்கியத்துவம் தான தர்மங்களே ஆகும்.

சிவ பூஜையில் இறைவனே எழுந்து அருள்வார், இவையே
சிவ பூஜையின் பலன்கள்.

ஐந்துவகையான பூக்கள் கொண்டு பூஜை செய்யலாம்.

திருநீரில் சிவலிங்கம் செய்வதால் அபிஷேகம் இல்லை தீப ஆராதனை செய்ய வேண்டும்

புது அகல் விளக்கு வாங்கி உங்கள் விரதம் முடியும் வரை விளக்கு ஏற்றவும்.

அக ( அகம் ) என்னும் உள்ளத்தில் ( மனதில் ) மெய் விளக்கை. ஒளியை ஏற்றுங்கள்.

வாழ்வில் இருள் என்னும் மாயை விளகி
மகேசனை அடைய போற்றி துதியுங்கள்.

தீப திருநாள் நிறைவு வரும் வரை தொடருங்கள். முறையே விரதமிருந்து அண்ணாமலையாரின் தீப தரிசனம் காணவாருங்கள்

தீப திரு நாள் 26/11/2023

உலகில் தலை சிறந்த அருவ
வழிபாடு
லிங்க வழிபாடு ஆகும்.

🌹சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா🌹.

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US