தர்மத்தில் சிறந்தவர் யார் என்று கிருஷ்ணனிடம் கேட்டார்கள். கிருஷ்ணன் கூறினார், தர்மத்தில் சிறந்தவன் கர்ணன் தான் என்று. கூறியதை தங்களால் நிரூபிக்க முடியுமா என்று வினவினார்கள். சரி என்று கர்ணனையும் தர்மரையும் வரசொல்லி, இரண்டு தட்டுகளில் தங்க நாணயங்களைத் தந்து தர்மம் செய்யவும் என்று கூறி அனுப்பி வைத்தார். தங்க நாணயங்களை எடுத்துச் சென்ற கர்ணன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து கிருஷ்ணன் அருகில் உட்கார்ந்து கொண்டு, சொல் கிருஷ்ணா இனி எதை தர்மம் செய்ய வேண்டும் என்று வினவினார். கிருஷ்ணன் கூறினார் இன்னும் தர்மம் செய்ய நிறைய இருக்கிறது கருணா என்று. காலையிலிருந்து மாலை ஆனது. தர்மர் வந்தார். கிருஷ்ணா அனைவருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளித்து விட்டேன் என்று கூறி வணங்கி நின்றான். அப்போது அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது யார் தர்மத்தில் சிறந்தவர்கள் என்று.

Share this:

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.