மனிதனுக்கான நல்ல சூழ்நிலை தேவையானது. மஞ்சள் நல்லதொரு கிருமிநாசினி ஆகும்.மஞ்சள் குங்கிலியம் வசம்பு ஓமம் தினமும் அளவோடு கலந்து வீட்டில் பயன்படுத்தி வந்தால் போதும். கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் செய்வீனையாக நம்பப்படும் தீய வீனைககள் வீலகும். இதனால் அமைதி நிலவும்.
வீட்டில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு வருவதை காணலாம்.காரணம் தீய எண்ணங்களை உண்டு பண்ணுவது காற்றில் மாசுக்கள் தான்.
நல்ல தெய்வீக நறுமணம் காற்று மண்டலத்தில் உள்ள கீரிமிகள் நீக்கி விரட்டியும் விடும்.தெய்வீக குணம் உடைய நறுமணம் நல்ல எண்ணங்களை தந்து இறைதுகளை நிரம்பி பரவ செய்யும்.
தேவையற்ற குப்பைகள் அசுத்த காற்றை உண்டாக்கும். தெய்வீக நறுமணத்தால் பாஸ்டிவான வாசனை கமழுவதால் பாசிட்டிவான நல்ல பல விஷயங்கள் நிகழும். சுப காரியங்கள் நடைபெறும். அதனால் தான் நம் மூதாதையர்கள் கோயில் தினமும் வெள்ளி செவ்வாய் வீடுகளிலும் விளக்கு ஏற்றி குங்கிலியம் போடுவதை கடை பிடித்தார்கள்.
எல்லா மதத்தினரும் தங்கள் இறைவனுக்கு குங்கிலிய புகை போடுவார்கள். மற்ற இனத்தவர்களும் கடைகளில் நெகட்டிவ் விலகினால் பாசிட்டிவ் வரும் என்பது தெரிந்தும் அறிந்தும் வைத்துள்ளார்கள். இதனாலேயே கல்லாப்பெட்டியில் குங்கிலியம் போடச் சொல்லுவார்கள். நம் முன்னோர்கள் கூறி சென்ற பல விஷயங்களை இன்று நாம் மறந்து விட்டோம்.
நாகரிகம் என்ற பெயரில் தெய்வங்களுக்கே அநாகரிகமான செனட் அடிக்கும் செயல்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் மெல்ல மெல்ல நம் உயிரையும் அசுத்த காற்று குடித்துக் கொண்டே இருக்கிறது. இன்றைய கால சூழ்நிலையில் மஞ்சள் புகையை
வீடு முழுவதும் காட்டுங்கள். அதுவே உங்களுக்கு மிக நல்ல பலன்களைத் தரும். குங்கிலியம் போடுவதால் உடனே உங்களுக்கு பெரிய மாற்றத்தையும் நீங்கள் உணரலாம்.
தினமும் 108 மூலிகைகள் கொண்ட சமித்து பொடிகளை இறைவனது நாமத்துடன் பயன் படுத்தினால் நாம்
ஓர் யாக பலனை பெறலாம். அதிர்ஷ்ட தேவதை வருவாள். தூர்தேவதை விலகுவாள்.
நமது வீட்டில் ஒரு தெய்வீக சூழ்நிலையை உருவாக்கி கொள்ளலாம். வீடு சுபிட்சமாக இருக்கும் ஒவ்வொரு நாளும் இறை நாமத்தை சொல்லி போட தினமும் யாக பலனை பெறலாம். இறந்தவர்கள் வீட்டில் பிரச்சினைகள் தீர வெண் கடுகு குங்கிலியம் கலந்து புகை போட ஓடிவிடும் ஆவிகள். ஒவ்வொருவரும் ஈசனது நாமத்துடன் குங்கிலியம் போட வேண்டும் .
ஏழை எளியவர்கள் இறந்தவர்களுக்கு யாகம் செய்ய முடியாதவர்கள், குங்கிலியம், வெண்கடுகு பயன்படுத்தலாம். உப்பை வெள்ளை துணியில் மூட்டை கட்டி தலையணை கீழ் வைத்தால் கெட்ட கனவு வராது. இந்த எளிய முறை தங்களுக்கு நல்ல பலனைத் தரும் .
உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் சுற்றுப்புற சூழ்நிலையில் செழிப்பின் சிறப்பை உணர்வீர்கள். இறைவன் படைத்த படைப்பில் மிக முக்கியமானது மூலிகைகள். ஒவ்வொரு ஜீவன்களும் வாழ்வதற்காண தேவைகளையும் இயற்கை தரும்.
🕉️சிவம்மா🕉️