சின்ன மஸ்தான் என்று ஒருவன் இருந்தான். அவரது உடலை கட்டுமஸ்தாக வைத்து இருந்தார்கள். இவரை கண்டவர்கள் எவ்வாறு என்று நலம் விசாரித்தார்கள். அவர் தான் யோகா செய்வதாக கூறினார்.

யோகாவையும் சின்னமஸ்தானை தேடியும் வணங்கி வந்தார்கள்.

அவர் உடலை கண்டு பலர் பலர் யோகா பயில வந்தார்கள். யோகா பயின்றவர்கள் பலர் யோகா பற்றிய விஷயங்களை வெளியே சொல்ல, மெல்ல மக்களிடம் சின்ன மஸ்தான் புகழ் பரவ ஆரம்பித்தது.

இதனால் சின்னமஸ்தானை வைத்து தேடி கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

சின்ன மனஸ்தானும் யோகா கற்றுத் தந்தார். யோகத்தில் ஆன்மீகத்தில் இருந்தவர்களே வந்தார்கள். ஆன்மீக விஷயங்களை தெரிந்தவர்களும் அவர்களோடு கலந்தார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு மீண்டும் யோக பயிற்சி மிக சிறப்பாக சென்றது.

மக்களுக்கு யோகா மற்று ஆன்மீக நூல் அறிவையும் புகட்டினார்.

அதற்கான பதில்களை கூறி சிறிய தியானத்தையும் மற்றும் தியான முறைகளையும் கற்றுத்தந்தார்.

இவ்வாறு இவரது புகழ் உறங்கும் பரவலானது. அனைவரும் அவரை தேடி வந்தார்கள்.

மலை நாட்டுக்கு ஒரு யோகி வந்தார். அந்த யோகி ஊருக்கு வெளியே உள்ள மண்டபத்தில் தங்கி இருந்தார்கள்.

யோகியை கண்ட மக்கள் பாவம் எத்தனை நலிந்து உடல் இருக்கிறது என்று நினைத்து, அவருக்கு சிலர் உணவையும், சிலர் உடையையும், சிலர் பணத்தையும் அவருக்கு வழங்கினார்கள்.

அவருக்கு சிலர் சின்னமஸ்தானிடம் சென்று தங்கள் உடல் நிலை முன்னேர யோகம் கற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். தங்கள் உடல் நிலை கவனித்துக் கொள்ளுமாறும் கூறி சென்றார்கள்.

யோகியின் சிஷ்யன் அந்த ஊர் மக்களின் அறியாமையை நினைத்து சிரித்து கொண்டான்.

சிலர் யோகியின் உடலை கவனிக்கவும் செய்தார்கள். சில காலங்களில் அவர் ஊரை விட்டு செல்ல கிளம்பி கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெண்மணி தனனுடைய கஷ்டங்களை துயரத்துடன் அழுதுகொண்டே கூறினாள்.

உடனே யோகி திரும்பி பார்த்தார்.

உடனே அவரது சிஷ்யன், அவர் பார்த்த இடத்தில் ஓடிச்சென்று, தினமும் தான் கூட்டி அள்ளி அள்ளி போட்ட குப்பையில் இருந்து, காசு பணங்களை குப்பையோடு வாரி அந்த பெண்மணியிடம் கொடுத்தார்.

எல்லோருக்கும் ஆச்சரியமாகப் போய் விட்டது. தினமும் இவருக்கு தரப்பட்டது இத்தனை பணமா. அது மட்டுமின்றி, இத்தனை நாள், அந்த குப்பைகளுடன் தான் அந்த பணம் இருந்ததா? என்று ஆச்சரியப் பட்டார்கள்.

அப்போது தான் மக்களுக்கு புரிந்தது, யார் யோகி என்பது. அவரை எதுவும் சொல்லாது ஊரிலிருந்து மலைநாட்டுக்கு சென்று விட்டார் .

சில நாட்கள் கழித்து வந்தார். அவரிடம் வருகைக்காக மக்கள் காத்திருந்தார்கள்.

ஒரு சமஸ்தானமே காத்திருந்தது.

சமஸ்தான ராஜா கேட்டார். யோக தியானம் முக்தி அளிக்காது என்றார்கள். அதனால் தங்களை காண வந்தேன் என்றார்.

யோகி கூறினார். கற்றுத்தந்தது யோகா உடலுக்கு ஆனது. யோகியர் போன்று உயிருக்கான அல்ல.

முக்திக்கு தியானம் உதவாது. மனதுக்கானது அது மன அமைதிக்கானது.

யோகா உடல் உடலுக்காகன பயிற்சிகள் இரண்டும் முத்திக்கு வழிதுணைக்கு வராது.

தியானம் முக்திக்கு போதாது என்பதை யாரும் உணர்ந்திருக்கவில்லை. காலங்கள் ஓடியது. சின்னமஸ்தான் உடல் விழும் போது அவருக்கு புரிந்தது.

தான் ஒரு ஆடு மேய்ப்பவன் என்று ஆகவே. நாம் அறிந்து பழகியது யோகா. அது உள்ளம்
என்னும் எண்ண பயிற்சி. தான் யாருக்கும் ஆத்ம ஞானத்தை வழங்கவில்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. காரணம் தன் யோகம் என்பதை அறியாது, தவமும் செய்யாது இன்று உடலோடு உயிரும் விழப்போகிறது என்பதை அறிந்தார் .

என்ன செய்ய காலம் கடந்த ஞானம் பயனற்றது என்றார்.

யோகியும் தகவல் அறிந்து தவம் முடித்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.

சின்னமஸ்தான் ஓடிச்சென்று சுவாமி தங்கள் எனது பயணத்திற்கு உதவி செய்யுங்கள் என்றார். அதற்கு யோகி கூறினார் தான தர்மங்களைச் செய் என்றார் .

யோகா என்னும் மன பயிற்சியையும் உடல் பயிற்சியும் காட்டினாய்.

தவம் என்னும் செயலை செய்து இறை உலகுக்கு பயணத்திற்கு வந்தும், இந்த வழியை யாரும் வகுக்க வில்லை.

நீ வகுக்கவில்லை அதனால் தவறான வழிகாட்டுதலின் பலனே இந்த நோயற்ற உடம்பு தூண்டப்படுகிறது.

நிறைய தான தர்மங்களைச் செய்து உன்னை இந்தப் பிறவிப் பிணியிலிருந்து மீட்டுக்கொள் என்றார் . பலனை நீ அடைவாய் என்றார்.

சின்னமஸ்தா இதைக்கேட்டு தான் யோகா கற்றுத்தந்த ஆசிரியர். பலாபலன்களை நினைத்து வருத்தப்படலானார்.

சிறப்பான தான தர்மங்களையும் செய்யக்கூடிய விஷயங்களை செய்தார்.

உலகிற்கு தேவையான கல்வியையும் மருத்துவத்தையும் விளங்க பெரிய ஸ்தாபனங்களை நிறுவி அனைத்தையும் இலவசம் என்று கூறினார்.

தம் கர்மங்களில் கஷ்டங்களில் இருந்து விடுவித்துக் கொண்டார்.

💐சிவம்மா💐

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US