மெய்ஞானம் எது என்ற ஒரு யோகியிடம் அரசன் கேட்டான்.
மெய்ஞானம் என்பது எதுவும் இல்லாதது என்றார்.
எனக்கு புரியவில்லை என்றான் அரசன்.
சரி வா என்னோடு என்றார் யோகி.
சிறிது நேரம் இருவரும் பயணிக்கலானார்கள்.
இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டார்.
இவர்கள் என் நாட்டு குடிமக்கள் என்றார்.
அது கை காட்டினார் யோகி .
எனது அரண்மனை.
நீ யார்
நான் மன்னன்.
சரி வா போகலாம்.
அரசன் நடக்கலானார்.
பசி வந்தது. இங்கு அமர்ந்து இரு உணவு கொண்டு வருகிறேன் என்றார் யோகி.
உணவு கொண்டு வந்தார். அரசனிடம் கொடுத்தார்.
அரசன் உணவைக் கண்டு சிறிது தயக்கத்துடன் இருந்தார்.
யோகி கூறினார். மன்னா இறைவன் கொடுத்த உணவு உண்டு பசியாறு.
சரி நீ சென்று உணவு யாசகம் பெற்று வா என்றார் யோகி.
அரசன் யான் அனைத்தையும் வாரி வழங்கும் அரசன். ஆளுமை கொண்ட நிர்வாகி. யான் எப்படி யாசிக்க முடியும் என்று கூறினார்.
யோகி கூறினார் அப்படி என்றால் உனது சட்டத்தின்படி பசியாற்ற முடியாதே.
மன்னன் அமைதியாக இருந்தான். சரிப்பா பக்கத்து நாட்டுக்கு போகலாம். அங்கு சென்று உணவு யாசிக்கலாம்.
இங்கு உடை மாற்றி கொள். இப்போது உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.
மன்னன் எனது நாட்டை என்ன செய்வது, நாட்டை யார் பாதுகாப்பு என்று கூறினார்.
உடனே யோகி கூறினார். யான் எனது என்று உன்னோடு இருக்கும் வரை நீ ஞானத்தை அடைய முடியாது. நான் எனது என்ற எண்ணத்தை விட்டு உலக பந்தங்களில் விலகி அனைத்தும் என் சொந்தம் உலகம் எனதாகியது என்று நீ உன் எண்ணங்களில் இருந்து வெளிவந்தால் ஒழிய மெய்ஞானத்தை அடைய முடியாது. காரணம் ஒரு மனிதன் அனைத்தும் மாயை என்று அறிந்து அனைத்திலும் விடுதலையடைந்து வெளிவந்து, இறைவனை மட்டும் எனது ஆகியது என்று சிந்தித்து திரிந்தால் மட்டுமே மெய்ஞானத்தை அடைகிறான். இறைவனுக்காக மட்டும் தன்னை அர்பணித்து, இறைவனுக்கான தொண்டுகளை செய்து வரவேண்டும். இருவர்களை தவிர வேறு யாரும் மெய் அறிய முடியாது.
- இறைவனாக அறிவது.
- ஏழைகளுக்காக மட்டும் வாழ்வது.
- உலகின் உயிரினங்களை பாதுகாப்பது.
இந்த மூன்று நிலைகளையும் ஒருவன் செய்வானேயானால் அவனே மெய்ஞானி. மெய்ஞானம் அனைத்தும் ஏழைகளுக்கு கிடைக்க செய்வது.
ஓர் யோகி தனக்கு கிடைத்த ஞானத்தை பாமரனுக்கு தரவந்தவன். படைப்பாளனை ஏழைக்கு அறிவிக்க வந்தவன் ஆகும்.
மெய்ஞானத்தை பற்றிய தெளிவு கிடைத்தது. மன்னனுக்கு புரிந்தது தனது ஆளுமை பொதுவானது என்று.
உனது சட்ட திட்டங்கள் அனைத்தும் மேம்பட்ட நோக்கங்கள் உடையது.
உன்னுடைய பதவி மற்றும் ஆளுமையும் பறந்து திரிந்த படைப்பாளிக்கு பயனற்றது.
நன்றி சென்னார் மன்னன். அமைதியாக தன் கடமையையும், கடனையும் தனது உயிர் உள்ளவரை செய்து முடிக்க சென்றான்.
யோகியிடம் மன்னர் கூறினார். என்னால் எதையும் துறக்கவும் ஆகாது. துறந்து வாழவும் முடியாது. அனுபவித்து வாழ பிறந்தவன். அனுபவித்து வாழ்ந்து பிறரை வாழ வைக்க பிறந்தவன் என்றார். மன்னாதி மன்னன் ….. வருகிறார் குரல் கேட்டதும். நிமிர்ந்து பசி சோர்வு இன்றி நடக்கலானான். யோகி வாழ்த்துக்கள் கூறினார். நாடு வளம் பெற நல்லவை செய்துவா என்றார்.
🌹🌹சிவம்மா🌹🌹