என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
️ ஏக கடவுள் ஆரத்தி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ட சராசரத்தின் அதிபதி சிவமே போற்றி!
உலகை படைத்தவரும்,
உலகின் அனைத்து தெய்வங்களையும் படைத்து காப்பவரை போற்றுவோம்.
பரவெளியில் இருந்து, இந்த உலகில் ஐந்தொழிலை தனது எண்ணத்தால் இயக்குபவரும் ஆகிய சிவத்தை நாம் தொழுவோம்.
எத்தனை பெரிய வல்வினைகளும் அகண்டு போகும்.
எத்தனை பெரிய இடர்கள் வந்தாலும் அதனை ஓர் கணப்பொழுதில்
சீர் செய்யும் சக்தி அந்த ஆதிசிவத்திற்க்கு மட்டுமே உள்ளது.
அதனால் அந்த உருவம் அற்ற இறைவனாகிய சிவத்தை ஒரு கணம் சிந்தித்து துதி செய்வோம்.
இவ்வுலக நன்மைக்காகவும்,
இந்த உலகை குரோனா என்னும் நுண்கிருமியிடம் இருந்து நம்மஐக் காக்க வேண்டுவோம்.
நாம் நமது வீட்டில் விளக்கு ஏற்றி, தங்களுக்கு பிடித்த சிவத்தின் நாமத்தை 11, 21, 48, 51, 101, 108 முறை ஜெபம் செய்த பின், விளக்கின் சுடரில் இருந்து ஒளியை எடுத்து, வாசலில் இருந்து வான் பார்த்து ஆரத்தி காட்டுவோம்.
இறைவன் நம் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்ப்பார்.
ஒவ்வொருவரின் அனைத்து வேண்டுதலும் மிக எளிதில் நிறைவு பெறும்.
இதை நம் வாழ்வில் எக்காலமும், எத்தருனத்திலும் சொல்லி கடைபிடித்து வரலாம்.
இவ்வாறு ஏகத்துவ இறைவனுக்கு செய்யும் பூஜை உலகில் மிக சிறந்த வழிபாடு.
உலகில் உள்ள அனைத்து நலங்களையும் பெறுவோம்.
சிவயோகத்தின் உருவம் அற்ற பரஞ்ஜோதி வழிமுறையே மிகவும் பவித்திரம் ஆனது ஆகும்.
இத்தகைய வழிபாட்டால்
சத்திய சொரூபத்தையே அடைய முடியும்.
அருவமான ஏக கிரந்தத்தை ஆராதிப்பது ஆகும்.
இது போல் ஓர் உயர்ந்த வழிபாடு
உலகில் வேறு இல்லை.
பரஞ்ஜோதிக்கு தினம் ஆரத்தி காட்டலாம்.
பிரதோஷம், பௌர்ணமி அன்று நிலவை பார்த்து பூஜை செய்யவும்.
அடுத்து,
மூன்றாம் பிறை அன்று
வளர்பிறையில் பூஜை செய்யவும்.
மூன்றாம் பிறை அன்று இறைவனின் திருமுடியை நிலவு ஆராதிக்கிறது.
சத்குரு சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா