என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டால், இறைவன் வேண்டும் என்பேன்.
இறைவனை கொடுக்க முடியுமா? அவரிடம் நெருங்க முடியுமா என்ற கேள்வி எல்லாம் ஏற்படும்.
இறைவனிடம் சொல்ல ஆசை தான்.
எவ்வாறு என்னவென்று சொல்வது.
இறைவனுக்கு பிடித்தவாறு நான் நடந்து கொள்வேன்.
இறைவனுக்கு செல்லம்மாக நான் இருக்க வேண்டும்.
அது முடியுமா, முடியாது.
நம் கர்மங்களும், நமது அசு பதங்களும் இறைவனிடம் நெருங்க விடாது.
ஆனால் இறைவனே நம்மிடம் வந்தால். யாரும் அதைத் தடுக்க இயலாது.
அதனால் இறைவனுக்கு யான் செல்ல நாய் குட்டியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
ஒரு பணக்காரன் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கலாம், மன்னனாகக் கூட இருக்கலாம், ஆனால் மன்னன் அடிபணிந்து விரும்பி அழைத்துச் செல்வது, தனது நலன் விரும்பியான
நாயையே. அவன் விரும்பிய செல்லப்பிராணியாக தான் இருக்கும் .
காரணம் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும், சிறிய செல்ல பிராணியின் மீது மெய்யன்பு வைப்பார்கள். சிறு பிராணியை வெறுப்பவர்கள் இல்லை. அவர்கள், அவர்களுடைய செல்லப்பிராணியின் மீது உயிரையே வைத்திருப்பார்கள்.
அது போல் எம்பிரான் என்னையும் செல்ல நாய் குட்டியாக வைத்துக் கொள்வார்.
அழகாக குளிப்பாட்டி, உணவு ஊட்டி, கயிறு பூட்டி கையில் என்னை பிடித்து செல்வார்.
தான் செல்லும் இடமெல்லாம் அழைத்து செல்வார். அன்பாய் வருடித் தருவார். ஆஹா எத்தனை சுகம். என் நன்றியை எவ்வாறு தெரிவிக்க முடியும். ஈசனது முகம் பார்ப்பேன். ஈசனிடம் விளையாடுவேன். என் உடலின் பரிபாசையால், நன்றி உணர்வோடு வால் ஆட்டுவேன். எனது அன்பை ஈசனிடம் வெளிப்படுத்துவேன். எனவே என்னை ஆசையாக வருடி எடுத்து அரவணைத்துக் கொள்வார். அடடா எத்தனை பெரிய பேராசை. சொல்வதிலும் கேட்பதிலும்,
எத்தனை பெரிய ஆனந்தம். என் இறைவன் கருணையாளன். ஜீவகாருண்ய புருஷன்.
என்னை ஒதுக்குவார் இல்லை.
எனது அன்பே என்னை பிரியாது இரு.
என் சிவமே என்னை மறவாதிரு.
இந்த ஜீவனின் மலர்ந்தே இரு.
அனைவருக்கும் மணம் வீச.
🌹சிவம்மா🌹