சிவநேசன் ஒருவருக்கு இறைவனது வீட்டைக் காண ஆசை வந்தது. உடனே தனது குருவின் உத்தரவை பெற்றார். குருவின் அங்கீகாரத்தால் வான் உலகம் பயணித்தார். அங்கு சென்றதும் நந்தி மறித்தார். நந்தியிடம் தேவா இறைவனது இல்லத்தைக் காண என் மனம் ஏங்கியது. பலநாட்கள் நான் உண்ணாது, உறங்காது இருந்தேன். பூமியில் எனது குருவின் அனுமதி பெற்று, இங்கு வந்து தங்களின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இறைவனது இருப்பிடம் காண முடியும். தங்களது அனுமதி இல்லையெனில் இந்த கைலாய பகுதியில் பரவேசம் செய்தாலும் ஈசனது இடத்திற்குப் போக இயலாது. ஆனால் நந்தி தேவனோ, சிவநேசரே தாங்கள் முதல்ல் சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அதன் பின்னரே தங்களுக்கு ஈசனது இடத்திற்குப் போக அனுமதி வழங்கவா, வேண்டாமா என்பதை முடிவு செய்கிறேன் என்றார். என்ன கேள்விகள் என்று கேட்டார் சிவநேசர்.
நந்தி, இறைவனது இருப்பிடம் எவ்வாறு இருக்கும் என்று வினவினார். இறைவனது இருப்பிடம் மிகவும் எளிமையானதாக, இயற்கை சூழ்ந்து இருக்கும். அனைத்தும் இயற்கையால் அமைக்கப்பட்ட இருப்பிடமாக இருக்கும் என்றார். அது சிவபுரம் என்றும் கூறினார்.
நந்தி மௌனமாகவே இருந்தார். பிறகு நந்தி, இறைவனது இருப்பிடம் அவ்வாறு இல்லை. இறைவனது இருப்பிடம் ஒளி மிகுந்ததாக இருக்கும் என்றார். அது கைலாயம் என்று கூறி தொடர்ந்தார். இறைவனது இருக்கை முதல் அனைத்தும் கல், காடு, மலைகள் நிறைந்து இருக்கும் என்றார். அவ்விடத்தை தங்கள் காண வேண்டாம், தங்களால் தாங்க முடியாது என்றார்.
சிவநேசர், அந்த ஒளி நிறைந்த இடத்தினைக் காண என் கண் கூசாது என்றார். இல்லையெனில் என் மனம் தாங்காது என்றார். பரவாயில்லை மிகையானதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று மன்றாடினார்.
நந்தி, நீங்கள் வருந்தினால் எம்பெருமானும் வருந்துவார் என்றார் .
சிவநேசர், சரி நான் வருந்தவில்லை என்றார்.
நந்தி, ஒரு விரலை மேலே சுட்டி காட்டினார். உடனே அந்த பகுதி விலகியது. அங்கு சென்றால் மிக மென்மையான வெளிச்சம். அந்த வெளிச்சத்தில், ஒளியில் நிறைய ஒளி குடிசைகள் தெரிகிறது. அந்த குடிசைகளின் அருகில் சென்றால் கதவுகளே இல்லாத மிக பிரமாண்டமான குடில். அதில் நிறைய பழைய துணிகள், கிழிந்த கந்தல் துணிகள் மலை போல் கிடந்தன.
அருகில் மற்றும் ஓர் குடில், அதில் வித விதமான பழைய பாத்திரங்கள். அப்பாத்திரங்களில் பழைய சாதம், மீதமான அண்ணம், வகை வகையான மீதமாய் போன தேவை அற்ற பதார்த்தங்கள் இருந்தன. இது எல்லாம் என்ன என்று கேட்டார் சிவநேசர்.
நந்தி தேவர், அவ்வப்பொழுது பூமிக்கு ஈசன் சென்று அவரது குழந்தைகளிடம் யாசகம் செய்த போது, அவரது குழந்தைகள் அவருக்கு அன்பாய் தந்த ஆடையும் உணவுமே இங்கு உள்ளது. அவர் உண்ட உணவின் மீதம் அனைத்தையும் இங்கு பத்திரப்படுத்தி உள்ளேன் என்றார்.
சிவநேசர், ஈசன் எங்கே என்றார்.
நந்தி தேவர், அவர் இந்த பூவுலகில் அனைத்துமாய் இருந்தும், தனித்து யாசகம் செய்தும், (நோய் விலங்காய்,) பித்தனாய் பிதற்றி திரிகிறார் பார் அங்கே என்றார். இந்த உலகின் துன்பம் உனக்குத் தெரியுமா? அதனை தாங்கள் அனுபவித்துள்ளீர்களா? போன்ற பக்தனின் கேள்விகளுக்கு இந்த பூமியில் எல்லாமுமாய் இருந்து அனுபவித்து உன்னுடனே விடுதலை அடைவேன் என்று அங்கேயும் இருக்கிறார் அனேகனாய். ஏகனாய் இல்லாது இருந்து வருகிறார் என்று ரகசியத்தைக் கூறினார்.
சிவநேசன், இனி நான் யாருக்கு உதவுவேன். எல்லாம் நீ என்றால் உன்னை எவ்வண்ணம் காப்பேன் என்று அழுதவண்ணம் சொல்லலானான்.
🌹சிவம்மா🌹