இயமான் புத்திரிகள் இருவர் மட்டும் சிறந்த சிவபக்தைகளாக இறைவனை நோக்கி தபம் செய்தார்கள். இதில் மூத்தவள் கங்கை, இளையவள் சதிதேவி. இருவரும் வனத்தில் தபம் செய்தார்கள். இருவர் நோக்கமும், சிவனைக் காண்பதுவே. சிவனை நோக்கியே தபம் செய்தார்கள். காலங்கள் உருண்டு ஓட கங்கையின் தபம் வலிமை அடைந்து ஈசன் தோன்றினார். பெண்ணே, “உனது தபம் கைலாயத்தை குளிரச் செய்தது. உனது தபத்த்துக்கு மகிழ்ந்தேன். நீ என்னிடம் வேண்டும் வரத்தை கேட்பாயாக” என்றார். கங்கை இறைவா தங்களை என்றும் பிரியாது, தங்களோடு இருக்கும் வரம் வேண்டும் என்றாள். தங்களோடு பிரியாது, தங்களை மகிழ்ச்சியூட்டும் இன்ப துன்பம் எடுத்துக் கொள்ளாத சேவையை யான் செய்ய வேண்டும் என்றாள். உடனே “நீ எப்போதும் என்னை மகிழ்ச்சியூட்டும் சேவையாக, எனது தலையில் வெப்பத்தை குளிர்விக்கும் செயலை செய்வாய் என தனது தலையில் சூடிக் கொண்டார். அடுத்து சுவாமி சதியிடம் வந்தார்.
இனதை தபம் கைலாயத்தில் வந்து என்னையை அடைத்ததால் சதிதேவியின் தபம் தொடர்ந்தவண்ணம் இருந்த்து. அவளது பக்தியும், பயபக்தியும் இரவு பகல் பாராது, தனது அன்பை செலுத்திய வண்ணம் இருந்ததால் காலங்கள் உருண்டு ஒடியது.
அவளது கனவு, கைலாயம் ஈசன் என்றும், அவளது ரகசிய பூஜை எம் பெருமான் ஈசனைக்கானகாவே இருந்த்து. அவளது மாறா பயபக்திக்கு இறைவன் தோன்றினார்.
பார்வதி இறைவனையே யாசித்தால் என்பதால், தப பலனாக தங்களையே பெற விரும்பியதாக கூறினாள். இறைவனும் அவளது நோக்கம் தக்க சமயம் வரும் போது ஈடேறும் எனக் கூறி மறைந்தார். பார்வதி என்பவள் இறைவனை துணையாக பெற்றாள்.
கங்கை இறைவனோடு உறை கொள்ள வரம் பெற்றாள். அவளுக்கும் தக்க தருணம் வரும் போது அழைத்து கொள்கிறேன் என்றார். கங்கை வானத்து அரசியாக வான் கைலாயத்தில் வாழ்ந்தாள். பகிரதன் மன்னன் முன்னோர்கள், கர்மங்கள் மற்றும் சாபம் நீங்க கங்கை பூமிக்கு கொண்டு வர நினைத்தான். ஈசனை நோக்கி தபம் செய்ய, ஈசனும் பகிரதனுக்கு வரம் அளித்தார். கங்கையை பூமிக்கு செல்ல கட்டளையிட்டார். தான் பூமிக்கு வருவதை நினைத்த கங்கை பயங்கரமாக கோபத்துடன் அதிவேகமாக பாய்ந்தாள். அவளது வேகத்தின் தாக்கத்தை பூமி தாங்காது என்று அறிந்து, ஈசனே அவளது வேகத்தை கட்டுபடுத்த கங்கையை தனது சடையில் பிடித்து அடக்கி பின் வெளியிட்டார். இதனால் கங்கை இறைவனது தலையை சென்று அடைந்தாள். இவ்வாறு கங்கை இறைவனோடு வாழும் ஓர் அங்கமாக நினைத்த வரம் பெற்றாள். கங்கை என்பவள் தாரம் அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். தாரம் என்று கூறுபவர்களுக்கு சொல்லவும் வேண்டும்.
சிவம்மா