இறைவனை பற்றி மட்டும் அறிவது மெய் ஞானம்.
பக்தி மார்க்கத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒன்றில் இருந்து ஓன்றை அறிந்து மேலே செல்லவே ஆகும்.
மேலே செல்ல செல்ல ஓர் இறைவைக்காட்டும்.
அந்த ஏக இறைவனே கிட்டும்.
அவரே மகாதேவன்.
அவரே அடியும் முடியும் இல்லாதவர்.
ஆதி அந்தம் அற்றவர்.
அவரே பரஞ்ஜோதி.
அவரே உருவம் அற்றவர்.
இன்பம் துன்பம் அற்றவர்.
பிறப்பது இல்லை. இறப்பதும் இல்லை.
அப்பாலுக்கும் அப்பாலும், எப்பாலும் இருப்பவர்.
எப்பதத்திலும் இருப்பவர்.
எக்காலமும் இருப்பவர்.
அவர் அனைத்தும் கடந்து மேல் இருப்பதால் கடவுள் என்கிறோம்.
அனைத்தையும் கடந்து நம்முள் இருப்பதால் கடவுள் என்கிறோம்.
அறிவு தாண்டிய சித்தியும், புத்தியும், அறிவு தாண்டியது ஞானம் இருந்தால் கடவுளை அறிய முடியும்.
இந்த ஞானம் உடையவர்கள் மட்டுமே ஏக கடவுள் தன்மையை அறிவார்கள்.
அனேக இறை தன்மையும் அறிய முடியும்.
கடவுள் தன்மை அறிந்த அறிவாளிகள் விவாதிப்பது இல்லை.
எந்த கடவுள் பெரியவர் சிறியவர் என்று விவாதம் தேவை அற்றது.
ஏக இறைவனது பெயர் சிவம்.
ஞானம் அற்றவர்கள் கடவுள் தன்மையை அறிய முடியாது.
அதிலும் மெய் ஞானம் உடையவர்கள் அனைவரும் ஏகமான பரஜோதியை அறிவார்கள்.
அந்த பரஜோதியை சிந்தித்து சித்தி பெற்று தபம் செய்வார்கள்.
சிலர் முக்தி பெற்று இறைநிலையை உணர்கிறார்கள்.
🌹சிவம்மா🌹