ஓரு யோகியை ஓரு வணிகர் சந்திக்க வந்தார்.
தான் மிக கஷ்டத்தில் இருப்பதாக கூறி அழுதார்.
அவரிடம் இரு கடிதத்தை தந்தார்.
அதில் ஓர் மந்திரம் உள்ளது. துன்பம் வரும் போது திறந்து பார் என்றார்.
பார்த்ததும் சூழ் நிலை தலை கீழாக எல்லாம் மாறிப்போகும் என்றார்.
மற்றோர் கடிதத்தை ஆனந்தம் இருக்கும் போது மந்திர கடிதத்தை திறந்து பார்.
எல்லாம் தழைகீழாக மாறிப் போகும் என்றார்
மந்திர கடிதத்தை இன்பம் துன்பம் மாறி மாறி வரும் பொழுது பார்க்க உனக்கு துன்பம் பறந்தோடும் என்றார்.
மந்திர கடிதத்தை பார். மகிழ்ச்சி வரும் போதும், உனக்கு மந்திரமே உபதேசம் செய்யும் என்றார்.
போய் உனது வேலையை இரவு பகலும் செய்.
வெற்றி உனது என்று ஆசி செய்து அனுப்பினார்.
வெளியில் வந்து கடிதத்தை விரித்து பார்த்தான்.
அதில் எல்லாம் கடந்து போகும் என்று எழுதி இருந்தது.
உடனே உற்சாகமாக ஆட்டம் போட்டான். பணிவோடு கொண்டாடினான்.
காலங்கள் உருண்டு ஓடியது. பெரிய செல்லந்தன் ஆனான்.
அவனுக்கு செல்வம் அதிகமாக சேரவும், தான் ஓர் நிலையான மனநிலை இல்லாது போனதும், தான் ஆணவத்திலும் ஆடம்பரத்திலும் நிலையில்லா ஆட்டம் வந்தது என தெரிந்தது.
அப்போது அவனுக்கு யோகி தந்த மற்றொரு கடித்தின் உள்ள மந்திரம் ஞாபகம் வந்தது.
உடனே அந்த யோகி தந்த மற்றுமோர் கடிதத்தில் மந்திரத்தை பிரித்தவனுக்கு பேர் அதிர்ச்சி காத்து இருந்தது.
இதுவும் மாறி போகும் என்று இருந்தது.
பயத்தில் மனம் நடுங்கியது.
யோகியை நினைத்தான்.
இனி எனது ஆணவம் அகங்காரம் எதுவும் இல்லாது வாழ்வேன்.
என்னை மன்னியுங்கள் இறைவா.
இந்த வசதி வாய்ப்புகளை இழக்க விரும்பவில்லை.
பணிவு பண்போடு ஆணவம் இன்றி வாழ்வேன்.
இது மாறும் என்றால் யான் ஏழ்மையை சந்திக்க விரும்பவில்லை என்று அழுது வேண்டி தன்னடக்கத்துடன் தனது வேலையை செய்யலானான்.
இதுவும் மாறும்.
எதுவும் மாறும்.
🌹சிவம்மா🌹