ஓர் ஏழைக் குடியானவனுக்கு ஓட்ட காலணா இரண்டு கிடைத்தது. அவற்றை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்று ஒரு கோழியை வாங்கி வந்தான். அது அடைவைத்து அதிக குஞ்சுகளைப் பொரித்தாகிவிட்டது. குஞ்சுகளில் பெரிதானவைகளை விற்றுவிட்டு ஆடு வாங்கி வந்தான். ஆடு வளர்ந்து இரண்டு குட்டிகளை ஈன்றது. இரண்டு குட்டிகளையும் ஏலத்தில் விற்று கிடைத்த தொகையில் ஓர் காளையினை வாங்கி வளர்த்து வந்தான். மிக அழகாக, நேர்த்தியாக வளர்த்து அதை ஏலத்தில் விட்டவனுக்கு பெரிய தொகை கிடைத்தது. இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை அவனுக்கு.
அத்தனை பெரிய தொகையாக மாற்றுவதற்கு சில காலம் கஷ்டங்கள் அனுபவித்ததையும் காளையையும் நினைவு கூர்ந்தான். காளையைக் காண அதனை விற்றவனிடம் சென்றார். அங்கு சென்று அதைப் பற்றி விசாரித்தான். மாட்டை மன்னனுக்கு தந்ததாக அவன் கூறினான். மாடு ஏலம் எடுக்கப்பட்டது மன்னனுக்கு என்று அறிந்தவுடன் அவனிடம் சென்றான்.
மன்னன், எத்தனை அழகான காளையை நீ எனக்கு தந்து இருக்கிறாய். உனக்கு ஓர் குளிகை தருகிறேன் அதை வைத்துக்கொண்டு காலமெல்லாம் ஆனந்தமாக வாழ் உனது வீட்டில் என்றான். உடனே அவன் யோசித்தான். இல்லை மன்னா நான் கோழி வாங்கி யானையாக்க விரும்புகிறேன். கோழியை யானையாக்க விரும்புகிறாயா என்று கேட்டான். குடியானவன் காளை வந்த கதையைக் கூறி, இப்போது எனக்கு யானை வேண்டும் என்றான். உடனே மன்னன் யானையினைத் தந்தான். யானை வந்த ஆனந்தத்தில் ஆட்டமும் பாட்டமும், கை கால் பிடிபடவில்லை. அவன் யானையினை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டைச் சுற்றியுள்ள அத்தனை செடி, மரம், கொடி எல்லாம் எடுத்து யானைக்குத் தீனி போட்டான். தீனி என்பது என்னவென்று அவனுக்கு புரிந்தது. தனக்கு ஒன்றுமில்லை என்று புரிந்தவுடன் யானையை கூட்டிக் கொண்டு தெரு தெருவாக, ஊர் ஊராக யானைக்கு தீனியும் போட்டு, அதனை பிச்சையும் எடுக்க வைத்து, ரோட்டில் யானையும் அவனும் வாழ்வதும், படுத்து உறங்குவதுமாக இருந்தது. அன்று அவன் யோசிக்கலானான்.
பேராசை பெருநஷ்டம் என்பார்கள். பேராசை பெரிய பயணம் என்பதை புரிந்து கொண்டான். அவனது வாழ்வு யானையோடு பெரிய பயணமாகவே தொடர்ந்தது. சிறிய செல்வத்துடன் வாழத் தெரியாது, இன்று பெரிய யானையுடன் பெரிய பயணத்தைத் தொடர்ந்தான். அதுவும் அவனுக்கு மிகுந்த ஆனந்தத்தை தந்தது. எத்தொழில் ஆனாலும் நாம் விரும்பி செய்யும் பொழுது அதில் இருக்கும் திருப்தியும், ஆனந்தமும் வேறு எதிலும் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். விருப்பப்பட்டு செய்யும்பொழுது வீடு வாசல் எதுவும் தேவையில்லை. அது போல் இறைவனைத் தேட ஆரம்பித்த பின் அவர்களுக்கு வீடு வாசல் என்று எதுவும் இல்லை. அவர்கள் யானைக்குத் தீனி போடுவது போல் தங்கள் அன்பை இறைவனுக்குத் தீனியாக போட ஆரம்பித்துவிடுவார்கள்.
சிவம்மா