ஒரு யோகி சுடுகாட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். இதுதான் அவருடைய வேலையாக இருந்தது.
ஒருநாள் அவரது ஜெபம் பலிதம் ஆகியது. அதனால் காளி வந்தாள். மகனே என்னிடம் வரம் கேள் என்றாள். யோகியோ அவளைப் பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பி அமர்ந்துகொண்டார்.
காளிக்கு கோபமாக விஸ்வரூபமாக நின்று கொண்டே மீண்டும் கேட்டாள் “மகனே என்னிடம் வரம் கேள்.” வரம் தர வந்துள்ளேன் என்றாள்.
அவர் சிரித்தவாறு மறுபுறம் திரும்பிக் கொண்டு ஜெபம் செய்தார்.
காளிக்கு அதிசயமாக தெரிந்தது. உனக்கு பயம் இல்லையா என்றாள்? இல்லை என்றார் யோகி.
வரம் தேவையில்லையா?
இல்லை என்றார் யோகி.
உடனே தனது ரூபத்தை மாற்றிக்கொண்டாள்.
மீண்டும் யோகியின் வந்து நின்றால் மகனே உனது தவம் பலிதம் ஆகிவிட்டது. ஏதேனும் வரம் கேள். நான் தந்தே ஆகவேண்டும் என்றாள்.
யோகி மௌனமானார்.
மீண்டும் அவள் கருணையுடன் நீ அநேக கோடி முறை என்னை அழைத்து விட்டாய். அதனால் உனக்கு நான் வரம் தர வந்துள்ளேன் என்றாள்.
அதற்கு அவர் சொன்ன ஊசிக்கு பின் நூல் எவ்வாறு செல்கிறதோ அது போல என்னை இந்த மந்திரம், என் இறைவனிடம் அழைத்துச் செல்லும், வரங்கள் வேண்டாம். தாயே நீங்கள் செல்லலாம் என்றார்.
காளிக்கு மனம் தாளவில்லை. மகனே நீ எது கேட்டாலும் தருகிறேன் என்றாள்.
நன்றி கூறினார். நான் கேட்ட வரத்தை தங்களால் தர முடியாது என்றார்.
இல்லை தருவேன் கேள் என்றாள் காளி .
தாயே என் கர்மங்களை ஏற்றுக்கொள் என்றார்.
கர்மங்களை ஏற்றுக்கொள் என்றவுடன் காளி அவ்விடத்தில் இருந்து காணாமல் போனாள்.
இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
தெய்வங்கள் கூட கர்மங்களை வாங்கி மனிதர்களாய் இந்த உலகில் பிறந்து வாழ்ந்து மடிய விரும்புவதில்லை. அது யாராக இருப்பினும்.
அதனால் தான் இவ்வுலகத்தை பற்றிய மாயையின் ரகசியங்களை அறிந்தவர்கள், இவ்வுலகத்தில் இருந்து விடுதலை பெறவே போராடுபவர்களே தவிர இவ்வுலகத்திற்கு வர விரும்பமாட்டார்கள்.
இவ்வுலகம், சொர்க்கமான நரகம் என்பதை எப்போதும்
நாம் புரிந்து கெள்ள வேண்டும்.
🌹🌹சிவம்மா🌹🌹