ஓர் யோகி காசி செல்லும் வழியில், வலவை என்ற ஊரில் தங்கி இருந்தார்.

அது மழைக்காலம், அதனால் போகும் வழியில் உள்ள கல் மண்டபத்தில் தங்கி இருந்தார்.

யோகியை கண்டு ஆசிவாங்க கூட்டம் திரண்டது.

இது அந்த ஊர் இளைஞனுக்கு பிடிக்கவில்லை.

அவன் அவரை அனைவரது முன்னிலையில் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்.

யோகியை காண கூட்டம் கூடிய நேரம் பார்த்து, யோகியை கேள்வி கேட்டான்.

நீர் யோகி தானே. எனக்கு இறைவனை காட்ட முடியுமா என்றான்.

காட்ட முடியும், ஆனால் கடவுளை காட்ட நான் கேட்கும் குரு தட்சணையை நீ தர வேண்டும் என்றார் யோகி.

குரு தட்சணை தந்தால் தான் உனக்கு இறைவனை காட்ட முடியும் என்றார்.

அவனும் சரி என்றான்.

ஆனா நிறைய பணம் செலவு பண்ணும மாதிரியோ, பொருளோ கேட்ககூடாது என்றான்.

குருவும் சரி என்றார்.

பண செலவு செய்யாமல் எளிதில் கிடைக்கும் பொருளை கேளுங்கள் என்றான்.

இன்பம் கொஞ்சமும் துன்பம் கொஞ்சமும் எடுத்து வா என்றார்.

எதேனும் ஒரு பொருள் எடுத்து வர சொல்வது போல் கேட்கிறாறே என்று திகைத்தான்.

அதற்கு இன்பம் துன்பமும் பொருளாக எப்படி எடுத்து வர முடியும் என்றான்.

அது கண்ணுக்கு தெரியாதது அனுபவிக்க கூடியது.

அதை போய் கேட்டால் எப்படி என்று அனைவரது முன்னிலையில் அவன் சென்னான்.

ஞானியும் சொன்னார். கடவுள் என்பது கண்ணுக்கு தெரியாத பொருள். உணரும் பொருள். மெய்யை உணர்த்தும் பொருள். அதை எவ்வாறு காட்ட முடியும்.

காண ஓரு பொருள் இருப்பது என்பது நம்பிக்கையே என்றார்.

அவ்வேளையில் ஓர் பாமரன், அய்யா நான் தங்களை காண நேற்று வரும்போது துன்பத்துடனே வந்தேன், தங்களை கண்டபின் ஆனந்தம் அடைந்தேன்.

இப்போது இன்பத்தை தாண்டிய ஆனந்தை எடுத்துச் செல்கிறேன்.

தங்களுக்கு எனது அன்பையும், எனது வணக்கத்தை காணிக்காயாக தந்து விட்டேன் என்றான்.

🌹🌹சிவம்மா🌹🌹

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US