ஒரு கழுதையும் ஒரு கோழியும் மேய்ந்து கொண்டிருந்தது. மேய்ந்து கொண்டிருந்த இருவரும்
பேசிக் கொண்டார்கள்.

கோழி தான் காலை கூவிய பிறகு தான் சூரியன் மலரும் என்று கூறியது.

உடனே கழுதைக் சொல்லியது தான் கத்தியதால் தான் சூரியன் உதித்தது என்றது.

இருவரும் இல்லை நான் தான் நான் தான் என்று இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர்.

இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று இருவரும் சேர்ந்து ஒரு பசுவிடம் சென்றது.

சேவல் தான் கூவியதால் தான் சூரியன் உதிக்கிறது. கழுதை தான் கத்தியதால் தான் விடிந்தது என்று பசுவிடம் கூறியது.

நீ கத்தியால் சூரியன் விடிந்தது என்று பசு கூறியது.

உடனே கழுதை சந்தோஷமாக அவர்கள் இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டது.

சேவல் கேட்டது ஏன் உனக்கு சேவல் கூவி பொழுது புலரும் என்பது உனக்குத் தெரியாதா? ஏன் அவ்வாறு கூறினாய் என்று கேட்டது.

முதலில் நீ கூவியதால் தான் சூரியன் உதிக்கிறது. இது அந்த கூரைக்கும் அந்த சூரியனுக்கும் தெரியும். அப்படி இருக்கையில் நீ ஏன் இதுபற்றி கவலைப்படுகிறாய். நீ உன் தகுதியை விட்டு கீழே இறங்காதே என்று கூறியது. சேவல் சந்தோசமாக சென்றது. எல்லோருக்கும் தெரிந்த விசயம் இந்த கழுதைக்கு தெரியலையே என்று சொன்னது.

பசு சேவலை அதை அனுப்பி வைத்தத்தும் அங்கிருந்த காளை கேட்டது, சேவல் கூவி தான் சூரியன் உதித்ததா?

காலம் யாரை கேட்டும் நகர்வது இல்லை. சூரியன் யாரை கேட்டும் உதிப்பது இல்லை.

ஆனால் நம்மால் தான் அனைத்தும் நிகழ்கிறது என்று அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரு முடிவை கூறவில்லை என்றால், இவர்கள் தங்களைப் பற்றி தங்களுக்கு தெரிந்த உண்மைகள் என்று பலரிடம் கூறி தவறையும் நியாயப்படுத்துவார்கள், அல்லது பலரிடம் பலவிதமாக கூறி திரிவார்கள். இவர்கள் குழப்பவாதிகள். இவர்கள் தெளிவு இல்லாது தங்களுக்கு தெரிந்த ஒரு பொய்யை நிஜமாக்கி விடுவார்கள். அதனால் அவரவர் அவரவர்களுக்கு தெரிந்தததை சொல்லும் பொழுது, நாம் ஒரு சிலருக்கு உண்மையை சொல்லலாம். இயற்கை ரகசியம் அறிந்து சொல்லலாம். ஆனால் சொல்லியும் புரியாதவர்களுக்கும், சொல்லியும் கேளாதவர்களுக்கும், சொல்லியும் ஞானமே இல்லாதவர்களுக்கும், அவர்கள் சொல்லே அவர்களுக்கு வலிமையானது.

என்ன செய்வது உலகமும் உலகத்திலுள்ள ஞானமும் மாயையானது தானே என்றது. அதனால் நான் அவரவர்களுக்கு தெரிந்ததை அவரவர் ஏற்று வாழ்வது தான் நன்று என்று கூறியது.

காளை, சேவலிடம் நீ உண்மையை கூறியிருக்கலாம் என்று கூறியது. சூரியன் வந்தாலே பொழுது புலரும் என்பதை நீ கூறியிருக்கலாம் அல்லவா என்று.

இல்லை அதன் நம்பிக்கையை நாம் கொடுக்கக்கூடாது. அதோடு, அதனுடைய செயலும், செயலின் காரியங்களும், காலையில் மக்களுக்காக நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

சேவல் கூவி தான் மக்கள் எழுப்ப படுவர். கழுதை கத்துவது கோழியின் சத்தத்தை விட பெரியது. கழுதை தன் எஜமானுக்கு விசுவாசமாக காலையில் ஆத்துக்கு போக வேண்டிய நேரத்தை கணக்கிட்டு கத்தும். அது அதற்கு பசியை உண்டாக்கும். கழுதையை தான் கத்தாவிடிலும் பொது மக்கள் எழுந்து விடுவார்கள் என்பது தெரியாது.

சேவலுடன் கூறியதை கேட்ட கழுதைக்கு திடீரென ஞானம் உதயம். தான் தான் சூரியன் எழுப்பகிறோம் என்று. அது தன்னை அவ்வாறு பெருமிதமாக நினைத்துக் கொண்டது. இதனால் தான் அதற்க்கு கேற்ற பதில்களை கூறினேன் என்றது. அவரவர் அவரவர் பார்வையில் உலகத்தை காண்கிறார்கள். ஆனால் பொய்யான போலிகளை நம்பி பொய்யான மனிதர்கள் பின்னால் சென்றால் பொய்யான உலகமே நமக்கு கிட்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்றவர்களை தெளிவுபடுத்த நான் வரவில்லை. எனது காலங்கள் விரைவாக ஓடிக் கொண்டிருக்கிறது. என் எஜமானருக்கு கொடுக்க வேண்டிய பாலை மடியில் சுரக்கச் செய்வதற்கு உணவு தேடுவது மட்டுமே எனது வேலை என கூறி பசு தனது இயல்பான வேலைக்கு தயாரானது.

காளை உண்மையை உபதேசித்தால் வேண்டும் நினைத்தது. மெய்யான வதந்தியை தட்டி சொல்ல வேண்டும்

இதை ஏன் யாரும் செய்ய வில்லை. சரி இறைவனை தானே சொன்னாள். இறைவனுக்கு என்ன நஷ்டம். என்னால் தான் அனைத்தும் நடக்கிறது இறைவனும் கேட்க போவதும் இல்லை.

தவிர நாமும் கேட்க போவதும் இல்லை.

எனது நாளை கஷ்டம் எனக்கு தெரியாத போது, யாரையும் தவறாக போதிக்கவில்லை.

எந்த தர்ம செயலை செய்ய துண்டவில்லை. ஆனால் இறைவனால் தான் என்று கூற தவறி விட்டோமே என்று வருந்தியவாறு புல் மேய புறப்பட்டது.

நாம் புல் மேய்ந்தாலும் மேயா விட்டாலும், நம்மை கேட்க போவதும் இல்லை.

கலப்பையில் உழவு பூட்டி விடுவான். விடிந்தால் என்ன, விடியாவிட்டால் என்ன. இந்த பிறவியால் துன்பம் துன்பமே. தனது வயிற்றுக்கு புல் மேய கொடுக்கிறது.

🌹சிவம்மா🌹

Share this:
[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US