சிவ அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.
திருவண்ணாமலை வருகிற நவம்பர் 26 ஆம் தேதி கார்த்திகை தீப திரு நாள் காண வாரீர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்து அன்று அண்ணாமலையார் மகாதீப தரிசனம் தருவார்.
எம் பொருமான் ஈஸ்வரன் அருவமான ஜோதி வடிவாக
கார்த்திகை தீப நாள் அன்று தரிசனம் தருவார்.
உலகின் யோக முக்தி தலம் திருவண்ணாமலையே.
தென்னாடு உடைய சிவனும் என்னாட்டவரின் இறைவனும் திருவண்ணாமலையில்
மகா ஜோதியாக காட்சி தருவார். சிவ பக்தர்கள் அனைவருக்கும் அறிவிக்கவும்.
தீபத்திருநாளில்
தீப தரிசனம் செய்ய
சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரமம்.
திருஅண்ணாமலையாரை காண உங்களை அன்புடன் வரவேற்கிறது.
திருவண்ணமலையில் 11 நாட்கள் ஏற்றப்படும்
மகாதீப தரிசனம் காண வாருங்கள்.
சிவபக்தர்கள் ருத்திரட்சை என்னும் சிவகாப்பு அணிந்து சிவ காப்பு கட்டி வாருங்கள்.
சைவத்தில் இருந்தும் அதாவது சைவ உணவு உண்டு.108 நாட்கள் விரதம் இருந்து மகா தீபம் காண வாருங்கள்.
விரதங்கள் பல வகை உண்டு.
இதில் சைவமாக விரதம் இருந்து வருவது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
- நாள் முழு நேரம் நீர் மட்டும் அருந்துவது.
2.பால் ,பழம் மட்டும் உண்டு விரதம் இருப்பது.
3.சூரியனால் படைக்க பட்ட உணவை உண்னுவது .
4.அடுப்பில் வைத்து வேகவைத்த உணவை உண்ண மாட்டார்கள்.
5.பழம், ஊறவைத்த தானியங்கள் வேகாத உணவை மட்டும் உண்ணுவது.
6.அருசுவை உணவில் ஒரு சுவையை விட்டு விடுவது.
உப்பு இல்லாத உணவை உண்டு விரதம் இருப்பது.
7.ஒரு வேலை மட்டும் காலை அல்லது மாலை மட்டும் உணவு எடுத்துக் கொள்வது.
8.காய்கறி மட்டும் எடுத்து கொள்பவர்கள்.
பச்சை காய்கறி மட்டும் உண்னுவது.
9.சிவாலயங்கள் சென்று இறைவனுக்கு உரிய பிரசாதம் மட்டும் உண்டு இரவு விரதங்களை முடிப்பது.
10.காய்கறி கலந்த கூட்டாஞ் சோறு உணவை மட்டும் உண்டு உறங்குவது.
11.மூன்று வேலையும் அரிசி போன்ற நித்திய உணவை விட்டு மாற்று உணவு எடுத்துக் கொள்வது.
12.மூன்று வேலையும் பால் எடுத்துக் கொள்வது அல்லது 108 நாளும் பால் உணவையும் விடுத்து.
தானியங்களை பச்சையாகவோ அல்லது
வேகவைத்து உண்டு இருப்பது.
13.சிவனடியாராக இருந்தால்
இச்சா பத்தியம் என்னும் பெண் தீண்டாது
விரதம் காத்தல்,அதாவது அம்மை போட்ட வீடு போல் விரதங்களை கடை பிடித்தல்.
- மூன்று வேலை உணவில் பால்,நெய் வெங்காயம்,பூண்டு எடுக்காது இருப்பது.
15.மூன்று கைபிடி உணவு இடைவேலையில் வேறு எந்த உணவையும் எடுக்காது இருப்பது.
16.யாசித்து சாப்பிடுவது.
விரதகாலம் மட்டும்
சத்திரம் சாவடிகளில் தங்கி வாழ்வது.
- தம் வீடு அல்லாத மற்ற வீடுகளில் உணவு உண்ணாது இருப்பதும்.
- விரத காலங்களில் இல்லறத்தில் இருந்து தர்மங்களை வழங்கிய பின் உணவு எடுப்பது ஆகும். இவ்வழியும் விரதமே ஆகும்.
- இல் என்றால் வீடு அல்லது இல் என்றால் நல்ல என்று பொருள். ஆம் விரதகாலங்களில் வீட்டில் இருந்து கொண்டு நல்ல அறத்தை செய்வதும் விரதத்தில் இறைவனின் திருகரம் ஆகும்.
- சிவனடியார்களுக்கு உணவு தருவது அல்லாது சிவனடியார்களுக்கு தேடி சென்று உணவு வழங்கிய பின் உண்ணுவது.
21.தர்ம சிந்தனையுடன்
108 நாட்கள் அண்ணாமலையார் பெயரை சொல்லி தானம் , தர்மம் ,துணி வழங்குவது.
- அண்ணாமலையார் பெயரை சொல்லி
உண்டியல் சேர்த்து அண்ணாமலையில் தானம் ,தர்மம் தமது கையால் செய்வது.
23.விரதகாலங்களில் இறைவனுக்கு என்று
எடுத்த பிடி அரிசி
காணிக்கையை கிரிவலப்பாதையில்
பிச்சையாக இடுவது .
24.கோயில்களில் இருந்து பிச்சை எடுத்து உண்டு பல சிவன் கோயில் சென்று தொழுது பின் அண்ணமலையாரின் தீபதரிசனம் காண்பது .
25.தம் வீடுகளில் அல்லாது நண்பர்களுடன் குழுவாக விரதம் இருந்து தேசாந்திரம் என்னும் தேசம் விட்டு தேசம் சென்று தீபதரிசனம் செய்ய நடை பயணத்தை மேற்கொண்டு அண்ணாமலையாரை நோக்கி நடந்தே சென்று தீப தரிசனம் செய்வது..
26.அண்ணாமலையார்க்கு நேற்றி கடன் செல்லுத்துவதர்காக அண்ணதானம்,தானியம் பசு,வஸ்திரம் போன்ற காணிக்கையை விரதங்களுடன் இருந்து அண்ணமலையார் கடனை செலுத்தி தீப தரிசனம் செய்வது.
27.கிரி வல பாதையில் உள்ள பண்டாரம் பரதேசிகளுக்கு உணவு ,உடையை தானங்களாக வழங்குவது.
- அங்க காரண காரியங்களால் வரும் ஆணவம் ஒழிய விரதம் இருந்தும் பிச்சை எடுத்து அதை இறைவனது உண்டியலில் சேர்ப்பது.
29.வீட்டில் இருப்பவர்கள் அண்ணாமலையார் விரத்தை கடைபிடித்து இறைவனுக்கு படைத்து பின் சிவ சாதுக்களுக்கு தர்மம் செய்த பின் விரத்தை முடிப்பார்கள்.
சிலர் அண்ணாமலை பார்த்து தினமும்
அண்ணதானம் செய்த பின் தம் விரத்தை முடிப்பார்கள்.
30.சிவனடியார் பெருமக்களே நீங்கள் எங்கு இருந்தாலும் அண்ணாமலையாரை நினைத்து தானம் தர்மங்களை செய்து
வீட்டிலேயே அண்ணாமலையார் தீபம் அன்று தீபம் ஏற்றி தீபத்தில் அண்ணாமலையாரையே தரிசனம் செய்யுங்கள் .
31.விரதங்களில்
சால சிறந்த விரதம்
உள்,வெளியுமாய் மௌனம் இருப்பது சிறப்பு. இது யோகியரின் விரதம் ஆகும்.
- பஞ்சந்திரிய கட்டுப்பாட்டு விரதம்.
மௌனம் எடுப்பதன் பொருள் யாது எனில்,
பார்க்க கூடாதை பார்க்காது
கேட்க்க கூடாத்தை கேட்காது.
முகர கூடாதை முகராது.
ருசிக்க கூடாதை ருசிக்காது ,
பேச கூடாததை நீ பேசாது
மனதால் எண்ண கூடாததை எண்ணாது சொல்,செயல் சுத்தத்துடன் விரதத்தை முடியுங்கள். - பஞ்ச இந்திரிய விரதத்தை எக்காலமும் அண்ணாமலையாருக்கே என்று தொடருங்கள்.
34.வயோதிகர்கள் மூன்று வேலை உணவுக்கு பின் எந்த ஒரு ஆகாரமும் எடுக்காது இருத்தல்.பசி இன்றி உண்ணாது இருப்பதும் பகலில் உறங்காது .
பன்னிரு திரு முறை வாசிப்பது கேட்பதும்.
64 நாயன் மார்கள் கதையை தேடி சென்று உரைப்பது ,
சிவ புராணம் பல முறை சொல்லுவது அதிகாலை விழித்து பஞ்ச இந்திரிய தூரிகை செய்து. சிவ புராணம் மற்றும் மாணிக்க வாசகர் பாடல் பாடி,கேட்டு பூஜை செய்வது
முதியவர்களுக்கானது.
35.108 நாட்கள் பஞ்சாச்சர நாமத்தை ஜெபம்செய்து,சிவம் தொழுது ஏதேனும் . உயிரினத்துக்கு உணவு வழங்கி விரதத்தை முடியுங்கள்.
36.விரதகாலங்களில் பச்சரி உணவும் சுத்த காய்கறியை மட்டும் எடுத்து பஞ்சாச்ரம் சொல்லி குழந்தைகளுக்கு
64 நாயன்மார்கள் கதை சொல்லி நமசிவய மந்திரம் சொல்லுவதோ அல்லதுநமசிவய எழுதி விரதம் முடிக்கவும்.
இறைவனுக்கு படைத்த இனிப்பு புட்டு
குழந்தைகளுக்கு தாருங்கள்.
குழந்தைகளுக்கு சிவத்தை உணவாக ஞானமாக ஊட்டி அறிவியுங்கள்.
தியானம் செய்ய முடியாதவர்கள் .
சிவன் கோயில் சென்று தரினம் செய்து சிவனை பல முறை சுற்றி வந்து
சிவனடியார்களுக்கு தானம் செய்து வீடு திரும்புங்கள்.
யோகத்தில் இருப்பவர்கள் தன் கடமை முடித்து அணைத்து நேரத்தையும் தியானத்தில் கழியுங்கள்.
உலகிலேயே தலை சிறந்த இறைவனும் சிவ வழி பாடும் இதுவேயாகும்.
சிவ வழிப்பாட்டில்
தானம்,தர்மம்,யோகம்
தபம் போன்ற சுத்த
சிவ மார்க்கம் வேறு எந்த மதத்திலும் இல்லையே.
சுத்த சிவம்
சுத்த சைவம்.
🌹சிவ ஸ்ரீ தியானேஷ்வர் அம்மா ஆசிரமம்🌹
🌹திருவண்ணாமலை🌹.